பொருள் அட்டவணை

சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்துக்கு ஒப்பிடுதல் - 6:36, 6:122, 27:80, 30:52, 35:22


நேர்வழிக்கு ஒளியையும், வழிகேட்டுக்கு இருளையும் உதாரணமாகக் கூறல் - 5:16, 6:122, 13:16, 24:35, 35:20, 39:22, 57:9, 65:11


இறைவசனங்களை நிராகப்பவர்களை செவிடர்களுக்கும், ஊமைகளுக்கும் ஒப்பிடுதல் - 6:39, 10:42, 10:43, 11:24, 13:16, 13:19, 21:45, 30:52, 43:40


நேர்வழியில் இருப்பவனை பார்வையுள்ளவனுக்கும், வழிகெட்டவனை குருடனுக்கும் ஒப்பிடுதல் - 6:50, 35:19, 40:58, 41:17


மழை மேகத்தை கருவுற்ற பெண்ணுக்கும் மழை பொழிவதை பிரசவிப்பதற்கும் ஒப்பிடுதல் - 7:57


மனோ இச்சையைப் பின்பற்றி இறை வசனங்களை மறுப்போரை நாக்கைத் தொங்க விடும் நாய்க்கு ஒப்பிடுதல் - 7:176


சத்தியத்தை ஏற்க மறுப்போரை கால்நடைகளுக்கு ஒப்பிடுதல் - 7:179, 25:44, 47:12


தவறான கொள்கையில் இருப்பவனை ஆற்றோரத்தில் இடிந்து விழும் கட்டடத்தைக் கட்டியவனுக்கு ஒப்பிடுதல் - 9:109


அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு உதாரணம் தானாக தண்ணீர் வாய்க்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து கைகளை விரித்தவனுக்கு ஒப்பிடுதல் - 13:14


நிராகரிப்பவர்களின் செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிடுதல் - 14:18


ஆழப் பதிந்து கிளை விடும் மரத்தை நல்ல கொள்கைக்கு உதாரணமாகக் கூறல் - 14:24,25


திடீரென்று அழிந்து போகும் செழிப்பான தோட்டத்திற்கு உலக வாழ்க்கையை ஒப்பிடுதல் - 10:24, 18:45, 57:20


அசத்தியத்தை நீர்க்குமிழிக்கும், சத்தியத்தை பயனுள்ள பொருளுக்கும் ஒப்பிடுதல் - 13:17


பிடுங்கி எறியப்பட்ட மரத்துக்கு தீய கொள்கையை ஒப்பிடுதல் - 14:26


போலி தெய்வங்களை எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல் - 16:75


சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமை அடிமைக்கு ஒப்பிடுதல் - 16:76


சத்தியம் செய்து அதை மீறுபவனை உறுதியாக நூல்நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல் - 16:92


அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவனுக்கு ஆகாயத்திலிருந்து கீழே விழுபவனை உதாரணமாகக் கூறுதல் - 22:31


இணைகற்பிப்போருக்கு மற்றொரு உதாரணம் - 22:73


நிராகரிப்பவர்களின் செயல்களை கானல் நீருக்கு ஒப்பிடுதல் - 24:39


நிராகரிப்பவர்களின் செயல்களை ஆழ்கடல் இருட்டில் தன் கையையே காண முடியாத நிலையில் இருப்பவனுக்கு ஒப்பிடுதல் - 24:40


இறைவனுக்கு இணைகற்பிப்போரை சிலந்திப் பூச்சிக்கு ஒப்பிடுதல் - 29:41


இணைகற்பிப்பவனுக்கு அவனையே உதாரணமாக எடுத்துக் காட்டுவது - 30:28


நேர்வழிக்கு நிழலையும், வழிகேட்டுக்கு வெயிலையும் உதாரணமாகக் கூறுதல் - 35:21


நல்லறம் செய்வோரை லாபம் தரும் வியாபாரம் செய்பவனுக்கு ஒப்பிடுதல் - 35:29


பலருக்கு உடமையான அடிமையை பல தெய்வங்கள் இருப்பதாக நம்புவோருக்கு உதாரணமாகக் கூறுதல் - 39:29


வறண்ட பூமியை செத்த மனிதனுக்கு ஒப்பிடுதல் - 43:11


நபித் தோழர்களை செழிப்பான தோட்டத்துக்கு ஒப்பிடுதல் - 48:29


புறம் பேசுவதை மனித இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுதல் - 49:12


நல்வழியில் செலவிடுவதை அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகச் சித்தரித்தல் - 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20


கற்றபடி செயல்படாதவர்களை ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல் - 62:5


வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு ஒப்பிடுதல் - 67:22


ஈஸா நபியை ஆதம் நபிக்கு ஒப்பிடுதல் - 3:59


நபிமார்களை - தூதர்களை நம்புதல்


நபிமார்கள் என்பதும் ரசூல்மார்கள் என்பதும் இறைத்தூதர்கள் அனைவரையும் குறிக்கும் சொற்களாகும்.


இது குறித்து முழு விபரம் அறிய 398வது குறிப்பைப் பார்க்கவும்


நபி - ரசூல் வேறுபாடு


ரசூலுக்கும் வேதம் - 2:129, 2:151, 2:252, 3:164, 3:184, 4:136, 5:15, 5:67, 5:83, 6:130, 7:35, 9:97, 35:25, 39:71, 57:25, 62:2


நபிக்கும் வேதம் - 2:136, 2:213, 3:79, 3:81, 3:84, 5:81, 19:30, 37:112-117, 29:27, 45:16, 57:26


நபியும், ரசூலும் ஒன்றே - 7:157, 7:158, 9:61, 19:51, 19:54, 43:6


ரசூலுக்குத் தனி மார்க்கம் - 9:33, 10:47, 17:15, 48:28, 61:9


நபிக்குத் தனி மார்க்கம் - 19:49, 66:8


நபி, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் - 22:52


இது குறித்து மேலும் அறிய 398வது குறிப்பைப் பார்க்கவும்.


ஒரே சமுதாயத்துக்குப் பல தூதர்கள்


மூஸா, ஹாரூன் இருவரும் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் - 10:75, 19:53, 20:30, 21:48, 23:45, 25:35, 26:13, 28:34


ஏக காலத்தில் மூன்று தூதர்கள் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் - 36:13


இப்ராஹீம் நபியும், லூத் நபியும் ஏககாலத்தில் இறைத்தூதர்களாக வெவ்வேறு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் - 11:70, 11:74, 21:71, 29:26, 29:32


ஒரே காலத்தில் ஒரே ஊரில் ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா ஆகியோர் நபிமார்களாக இருந்துள்ளனர் - 19:7-34


ஒவ்வொரு மொழிக்கு ஒரு நபி - 14:4


ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி


ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி - 10:47, 16:36, 23:44, 28:59


நபிமார்களிடையே வேற்றுமை காட்டுதல்


நபிமார்களிடையே வித்தியாசம் உண்டு - 2:253, 17:55


நபிமார்களிடையே வேற்றுமை கூடாது - 2:136, 2:285, 3:84


பெண்களில் நபி இல்லை


ஆண்கள் தாம் நபிமார்கள் - 12:109, 16:43,44, 21:7,


இது பற்றி மேலும் அறிய 239வது குறிப்பைப் பார்க்கவும்


நபிமார்கள் வருகையால் மாறும் சட்டங்கள்


நபிமார்கள் வருகையால் சில சட்டங்கள் மாறும் - 3:50, 3:183, 4:160, 5:15, 6:146, 7:157, 19:26, 34:13


நபித்துவம் இறைவனின் நியமனம்


நபியாக நியமிப்பது தகுதியால் அல்ல. இறைவனின் நியமனமே - 3:81, 6:124, 19:12, 19:29, 93:7


நபிமார்களும் மனிதர்களே


வானவர் தன்மை நபிமார்களுக்கு இல்லை - 6:50


நபிமார்களும் மனிதர்களே - 3:79, 10:2, 11:27, 14:10, 14:11,12, 16:43, 17:93, 17:94, 18:110, 21:3, 21:7, 23:24, 23:33, 23:34, 23:47, 26:154, 26:186, 36:15, 41:6, 54:24, 64:6


நபிமார்கள் உணவு உட்கொண்டனர் - 3:93, 5:75, 18:77, 21:8, 23:51, 25:7, 25:20, 26:79, 33:53


நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர் - 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5


நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர் - 2:132, 2:133, 3:39, 3:61, 5:27, 11:42, 11:45, 11:71, 11:72, 12:5, 12:67, 12:81, 12:87, 13:38, 14:35, 14:39, 15:53, 19:7, 33:59, 37:101, 37:102, 37:112, 51:28


நபிமார்கள் மரணித்தனர் - 2:133, 3:144, 6:162, 19:15, 21:8, 21:34, 26:81, 34:14, 39:30, 46:5


நபிமார்கள் கவலைப்பட்டனர் - 3:176, 5:41, 6:33, 10:65, 11:70, 12:13, 12:84, 12:86


நபிமார்கள் கொல்லப்பட்டனர் -2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70


நபிமார்கள் நோய் நொடிக்கு ஆளானார்கள் - 2:214, 6:34, 12:110, 14:12, 26:80, 38:41


அதிகாரத்தில் நபிமார்களுக்குப் பங்கில்லை


நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் - 5:109, 5:116,117, 7:6, 39:69, 77:11


நபிமார்கள் மறுமையில் கைவிடுவார்கள் - 4:41, 5:116,117


தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது - 2:120, 6:15, 10:15, 10:106, 11:63, 39:13


நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது - 6:17, 7:188, 10:49, 10:107, 36:23, 39:38, 72:21


சுயமாக அற்புதம் செய்ய நபிமார்களுக்கு இயலாது - 3:49, 5:110, 6:37, 6:57, 6:109, 13:38, 14:11, 40:78


நபிமார்களிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இல்லை - 6:50, 6:58, 11:31


நபிமார்களையும் அல்லாஹ்தான் மன்னிக்க முடியும் - 4:106, 7:23, 7:151, 11:47, 23:118, 26:82, 28:16, 38:24, 38:35, 40:55, 47:19, 48:2, 66:1, 71:28, 110:3


மகனையும், மனைவியையும் நூஹ் நபியால் காப்பாற்ற முடியவில்லை - 11:42, 11:45,46, 66:10


தமது சந்ததிகளுக்கும், தந்தைக்கும் இப்ராஹீம் நபியால் உதவ முடியவில்லை - 2:124, 9:114, 14:35


ஈஸா நபியை இறைவன் அழிக்க நினைத்தால் யாராலும் அவரைக் காப்பாற்ற இயலாது - 5:17


மகன் காணாமல் போவதை யாகூப் நபியால் தடுக்க முடியவில்லை - 12:84, 85


சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை - 12:35


அய்யூப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை - 21:83,84, 38:41


யூனுஸ் நபி நினைத்தது நடக்கவில்லை 21:87, 37:144, 68:49


லூத் நபியால் தம் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை - 7:83, 66:10, 15:59,60


நபிமார்கள் இறைக்கட்டளைக்கு மாறுசெய்ய முடியாது - 6:15, 10:15, 11:63, 39:13


முதுமை வரை இப்ராஹீம் நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை - 14:39, 15:54


முதுமை வரை ஸக்கரியா நபியால் தமக்கு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை - 3:38-40, 19:2-9, 21:89,90


நபிமார்கள் இறைவனின் அடிமைகளே


நபிமார்களும் இறைவனின் அடிமைகளே - 2:29, 3:79, 8:41, 11:31, 17:1


மறுமையில் அனைவரும் அடிமையாகவே வருவார்கள் - 19:93


பிரார்த்திக்கப்படும் அனைவரும் அடிமைகளே - 7:194, 18:102


ஈஸா நபியும் அல்லாஹ்வின் அடிமை தான் - 4:172, 5:17, 19:30, 43:59


நூஹ் நபியும் அடிமை தான் - 17:3, 37:81, 54:9, 66:10


ஸக்கரியா நபியும் அடிமை தான் - 19:2


தாவூது நபியும் அடிமை தான் - 38:17


ஸுலைமான் நபியும் அடிமையே - 38:30


அய்யூப் நபியும் அடிமையே - 38:41, 38:44


லூத் நபியும் அடிமையே - 66:10


இப்ராஹீம் நபியும் அடிமையே - 37:111, 38:45


இஸ்ஹாக் நபியும் அடிமையே - 38:45


யாகூப் நபியும் அடிமையே - 38:45


மூஸா நபியும் அடிமையே - 37:122


ஹாரூன் நபியும் அடிமையே - 37:122


இல்யாஸ் நபியும் அடிமையே - 37:132


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் அடிமை


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் அடிமையே - 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10


இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை - 6:50, 7:188


அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இல்லை - 3:127, 6:50, 7:188, 10:49, 10:107


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமக்கே நன்மை செய்ய முடியாது - 6:17, 7:188


ஷைத்தானிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புத் தேட வேண்டும் - 23:97


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க வேண்டும் - 4:106, 9:43, 23:118, 48:2


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் காப்பாற்ற முடியாது - 6:17, 67:28


நேர்வழியில் சேர்ப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அதிகாரத்தில் இல்லை - 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74-, 28:56


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறை அதிகாரமில்லை - 3:128, 4:80


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளமும் அல்லாஹ்வின் கையில் - 17:74


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மனிதரே - 3:144, 11:12, 18:110, 41:6


எதிரிகளை அழிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இல்லை - 6:57


நபிமார்களின் அற்புதங்கள்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அற்புதம் செய்யும் அதிகாரம் இல்லை - 6:35, 10:20, 13:7, 13:27, 17:90-93


அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே - 2:203, 6:37, 6:109, 13:38, 14:11, 29:50, 40:78


அல்லாஹ்வின் அனுமதி பெற்றே ஈஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள் - 3:49, 5:110


அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி கைத்தடியால் கடலில் அடித்தார்கள் - 2:60, 20:77, 26:63, 44:24


அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபியின் கைத்தடி பாம்பாக ஆனது - 7:117


அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி பாறையில் கைத்தடியால் அடித்து தண்ணீர் வரச் செய்தனர் - 2:60, 7:160


கெட்டவர்க்கும் அற்புதம். 7:148, 20:85-88


நபிமார்களைப் பின்பற்றுவதன் அவசியம்


அல்லாஹ்வும் தூதரும் காட்டிய வழியை மட்டும் பின்பற்றுதல் - 2:38, 2:170, 3:103, 6:106, 6:155, 7:3, 10:15, 10:109, 20:123, 25:30, 33:2, 39:3, 39:55, 46:9, 49:16


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதன் அவசியம் - 3:32, 3:123, 3:132, 4:59, 4:64, 4:69, 4:80, 5:92, 8:20, 8:46, 9:71, 24:47, 24:51, 24:52, 24:54, 24:56, 33:71, 47:33, 48:17, 49:14, 58:13, 64:12


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் - 2:143, 3:31, 3:53, 4:65, 4:115, 7:157, 7:158, 14:44, 20:134, 25:27, 28:47, 36:20, 43:61


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட எதுவும் மார்க்கமாகாது - 5:3, 6:150, 16:116, 39:3, 42:21, 49:16, 57:27


முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது - 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 31:21, 36:74, 43:22, 43:23, 53:23


தலைவர்களையும், அறிஞர்களையும் கண்மூடிப் பின்பற்றுதல் - 3:64, 9:31, 25:28,29, 33:66, 33:67


மனோ இச்சைகளைப் பின்பற்றக் கூடாது - 2:120, 2:145, 4:135, 5:48, 5:49, 5:77, 6:56, 6:150, 13:37, 18:28, 19:59, 20:16, 23:71, 25:43, 28:50, 30:29, 38:26, 42:15, 45:18, 45:23, 47:14, 47:16, 53:23, 54:3


பெரும்பான்மையைப் பின்பற்றக் கூடாது - 6:116, 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 25:50, 30:6, 30:30, 34:28, 34:36, 40:57, 45:26


சந்தேகமானதைப் பின்பற்றக் கூடாது - 6:116, 6:148, 10:36, 10:66, 30:29, 31:6, 49:12, 53:23, 53:28


இஸ்லாம் ஒரேவழி தான், பல வழிகள் அல்ல - 4:59, 5:3, 6:153, 6:159, 6:161, 9:33, 12:108, 30:32, 42:13, 45:18


அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றினால் பின்பற்றியவர்களை அவர்கள் மறுமையில் கைவிடுவார்கள் 2:166,167, 14:21, 33:67,68, 40:47


ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை - 5:87, 6:140-144, 6:150, 7:32, 9:29, 9:37, 10:59, 16:116, 66:1


ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு - 7:157, 9:29


அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் பெரும் குற்றம் - 3:94, 4:48, 4:50, 6:21, 6:93, 6:138, 6:140, 6:144, 7:37, 7:152, 10:17, 10:69, 11:18, 16:56, 16:105, 16:116, 18:15, 20:61, 29:13, 29:68, 61:7


இறைச் செய்தி வருவதாக இட்டுக்கட்டிக் கூறுவது கடும் குற்றம் - 6:93


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி - 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3


குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்


ஓதிக் காட்டி விளக்கும் நபி - 2:129, 2:151, 3:164, 62:2


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய கிப்லாவுக்கு குர்ஆன் அங்கீகாரம் - 2:142-145


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய நோன்பின் சட்டத்துக்கு குர்ஆன் அங்கீகாரம் - 2:187


புனித மாதங்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் - 2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36


தமத்துவ் ஹஜ்ஜைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் - 2:196


ஹஜ்ஜின் மாதங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் - 2:197


இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் - 2:203


வேதமும் ஞானமும் - 2:129, 2:151, 2:231, 3:81, 3:164, 4:54, 4:113, 33:34, 62:2


அச்சமில்லாதபோது தொழும் முறை - 2:239, 4:103


வேதங்களும், ஏடுகளும் 3:184, 16:44, 35:25


பிள்ளை இல்லாதவன் சொத்து பற்றி குர்ஆன் கூறும் மாறுபட்ட இரு சட்டங்கள் - 4:12, 4:176


குர்ஆனின் விளக்கம், நபிமார்களுக்கே காட்டித் தரப்படும் - 4:105


கட்டுப்படுவதில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் பாகுபாடு காட்டுவோர் முஸ்லிம்கள் அல்லர் - 4:150,151


வேதத்தைப் பெற்றுத் தருவது மட்டும் இறைத்தூதரின் வேலையல்ல - 6:9, 17:95


வேதமும், அதிகாரமும் - 3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16


தடை செய்து அனுமதிக்கும் அதிகாரம் - 7:157, 9:29


தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் - 9:118


விளக்குவதற்காகவே தூதர்களின் தாய் மொழியில் வேதம் - 14:4


நபிகள் நாயகம் (ஸல்) தான் குர்ஆனை விளக்க வேண்டும் - 16:44, 16:64


இறைவன் காட்டிய காட்சி எது என்பதை அறிய நபியின் விளக்கம் - 17:60


வேதமும், தூதர்களிடம் கொடுத்து அனுப்பப்பட்டதும் - 40:70


வேதம் மட்டுமின்றி வேறு வகையான இறைச்செய்திகளும் உண்டு - 42:51, 66:3


இறைத்தூதரின் தடையை இறைவன் அங்கீகரித்தல் - 58:8


மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து புறப்படுமாறு கட்டளை - 2:199


வேதமில்லாது பல வருடங்கள் பிரச்சாரம் செய்த மூஸா நபி - 7:142-145


அல்லாஹ் வாக்களித்தது எது? - 8:7


பொருள் திரட்டுவது குற்றமா? - 9:34


இறுதி நாளை நம்புதல்


திடீரென்று ஏற்படும்


அந்த நாள் தொலைவில் இல்லை - 7:185, 17:51, 21:1, 21:97, 33:63, 42:17, 47:18, 54:1, 70:7, 78:40


திடீரென்று கண்மூடித் திறப்பதற்குள் 6:31, 12:107, 16:77, 21:40, 22:55, 43:66, 47:18


மறுமை எப்போது வரும் என்பதை ஒருவரும் அறிய முடியாது - 7:187, 20:15, 31:34, 33:63, 41:47, 43:85, 79:42,43


ஸூர் ஊதப்படுதல்


அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல் - 6:73, 27:87, 36:49, 39:68, 50:20, 69:13-18, 79:6


மீண்டும் உயிர்ப்பிக்க ஸூர் ஊதப்படுதல் - 18:99, 20:102, 23:101, 27:87, 36:51, 36:53, 37:19, 39:68, 50:42, 74:8-10, 78:18, 79:7, 79:13


ஸுர் ஊதப்பட்டதும் இறைவன் நாடியவர்களைத் தவிர வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் மூர்ச்சையாகி விடுவார்கள்.- 39:68


அந்நாள் கடுமையானது


அனைவரும் இறைவனின் முன்னே நிறுத்தப்படும் நாள் - 2:148, 2:281, 3:9, 3:25, 3:157, 4:87


தலைவர்கள் தொண்டர்களைக் கைவிடும் நாள் - 2:166,167, 10:28, 14:21, 29:25, 34:31,32


தனது செயல்களின் விளைவைக் காணும் நாள் - 3:25, 3:30, 3:115, 3:161, 4:40, 40:17


ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்ளும் நாள் - 18:99


மரண சாசனம் செய்யக் கூட அவகாசம் இருக்காது - 36:50


பிள்ளைகளும், செல்வமும் உதவ முடியாத நாள் - 3:116


வானமும், பூமியும் மாற்றப்படும் நாள் - 14:48


கைசேதப்படும் நாள் - 19:39


பாலூட்டுபவள் தனது குழந்தையை மறக்கும் நாள் - 22:2


மனிதன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லும் நாள் - 24:24


எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள் - 2:48,123, 2:254, 14:31, 26:88, 43:67, 60:3, 70:10, 80:34,35,36


சில முகங்கள் வெண்மையாகும் நாள். வேறு சில முகங்கள் கறுப்பாகும் நாள் - 3:106, 10:26, 39:60, 75:22, 80:38, 88:8


உண்மை பயனளிக்கும் நாள் -5:119


எதையும் மறைக்க முடியாத நாள் -4:42, 86:9


இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள் - 11:105, 78:38


பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் நாள் - 14:42, 24:37, 75:7


பாலூட்டும் தாயை மறக்கடிக்கும் நாள் - 22:2


கர்ப்பிணிப் பெண்ணைப் பிரசவிக்கச் செய்யும் நாள் - 22:2


போதையுடையோராக மாற்றி விடும் நாள் - 22:2


இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள் - 40:18


சிறுவர்களின் தலை முடி கூட நரைக்கும் நாள் - 73:17


மலக்குகள் அணிவகுத்து நிற்கும் நாள் - 78:38


உற்றார் உறவினரை விட்டு ஓடும் நாள் - 6:94, 16:111, 19:80, 19:95, 23:101, 28:66, 31:33, 35:18, 60:3, 75:10, 80:34, 82:19


மனிதர்கள் ஈசல்கள் போல் வீசப்படும் நாள் - 101:4


தீயோர் நீலநிறக் கண்களுடையவர்களாக எழுப்பப்படும் நாள் - 20:102


மிருகங்களும் எழுப்பப்படும் நாள் - 6:38, 81:5


ஜின்களும் எழுப்பப்படும் நாள் - 6:128-130


ஷைத்தான்களும் எழுப்பப்படும் நாள் - 19:68


காலோடு கால் பின்னிக் கொள்ளும் நாள் - 75:29,30


கியாமத் நாளின் அடையாளங்கள்


யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை - 18:94, 21:96


மனிதர்களை மூடிக் கொள்ளும் புகை மண்டலம் உருவாகுதல் - 44:10


இறை வசனங்களை நம்பாதோரை இனங்காட்டிப் பேசுகின்ற பிராணி - 27:82


ஈஸா நபியின் வருகை - 43:61, 3:55, 3:144, 4:159, 5:75, 5:110, 5:116, 19:30,31


கியாமத் நாளின் ஆரம்ப நிகழ்வுகள்


வானம் சுருட்டப்பட்டு விடும் - 21:104, 52:9, 55:37, 69:16, 70:8, 78:19


மலைகள் பூமியுடன் சேர்த்து தூக்கி எறியப்படும். பின்னர் ஒன்றோடு ஒன்று மோதித் தூள் தூளாகி விடும் - 18:47, 20:105, 52:10, 56:5,6, 69:14, 70:9, 73:14, 77:10, 78:20, 81:3, 101:5


சந்திரன் ஒளி மங்கியதாக மாறிவிடும். சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் - 75:8,9, 77:7, 81:1,2, 82:2


பூமி வெட்ட வெளியாகி விடும் - 18:47, 56:4, 69:14, 73:14, 84:5, 89:21, 99:1-4


கடல்கள் தீ மூட்டப்படும் - 81:6


கடல்கள் பொங்கி தடுப்புகள் அகற்றப்படும் - 82:3


வேறு பூமியாக மாற்றி சொர்க்கம் நரகம் - 14:48, 21:104, 39:67


வானம் வேறு வானமாக - 14:48


எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்படுதல்


படைக்கப்படும்போது இருந்த கோலத்திலேயே எழுப்பப்படுவார்கள் - 7:29, 18:48, 21:104


எழுப்பப்பட்டதும் பூமியில் சில நிமிடங்கள் மட்டுமே வாழ்ந்தோம் என்று எண்ணுவார்கள் - 10:45


தீயோர் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் - 17:72, 17:97, 20:124


மெதுமெதுவாக அடியெடுத்து வைத்துச் செல்வார்கள். இறைவனுக்கு அடங்கி ஒடுங்கிச் செல்வார்கள் -20:108


மண்ணறைகளிருந்து வேகமாக இறைவனை நோக்கி வெளியேறுவார்கள் - 36:51


தலைவர்களுடன் அழைக்கப்படுவர் - 17:71


எரித்துக் கடலில் கரைக்கப்பட்டவர்களும் மிருகங்களால் சாப்பிடப்பட்டவர்களும் எழுப்பப்படுவார்கள் - 2:148, 3:157, 4:87


இறைவனுக்கு எளிதானது


முதலில் படைத்தவனுக்கு மீண்டும் படைத்தல் எளிதானது - 2:27, 17:49-51, 29:20, 30:27, 31:28, 36:79


வானங்கள் பூமியை விட மனிதனைப் படைத்தல் எளிதானது - 36:81, 40:57, 79:27


செயல்களின் ஏடுகள்


செயல்களின் ஏடுகள் - 3:30, 10:61, 17:13, 17:14, 17:71, 18:49, 18:50, 23:62, 39:69, 45:24, 45:28, 45:29, 69:19, 69:25, 84:7, 84:10


விசாரணை


கைகளும், கால்களும், தோல்களும் பேசும். செவிப் புலன்களும் பார்வைகளும் பேசும் - 24:24, 36:65, 41:20


பரிந்துரை


பரிந்துரையே இல்லை என்ற கருத்தைத் தரும் வசனங்கள் - 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 7:53, 10:18, 30:13, 32:4, 36:23, 39:43, 39:44, 40:18, 74:48


அனுமதி பெற்று பரிந்துரை செய்யலாம் எனக் கூறும் வசனங்கள் - 2:255, 10:3, 19:87, 20:109, 21:28, 34:23, 43:86, 53:26


மறுமையில் வக்கீல் இல்லை


மறுமையில் வக்கீல் இல்லை - 11:105, 16:111, 23:108, 36:65, 78:38


மதிப்பீடு செய்தல் - மீஸான்


மறுமையில் மதிப்பீடு செய்தல் - 7:8,9, 18:105, 21:47, 23:102, 23:103, 101:6, 101:8


எவரும் எவரது சுமையையும் சுமக்க மாட்டார்


தமது சுமையைச் சுமந்தாக வேண்டும் - 2:134, 2:141, 2:286, 4:111, 6:31, 24:11


பிறரை வழிகெடுத்தால் அந்தச் சுமையையும் சுமக்க வேண்டும் - 16:25


ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் - 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38


மண்ணறை வாழ்வு


மண்ணறை வாழ்வு - 6:93, 36:51, 40:46


நன்மைக்குப் பத்து, தீமைக்கு ஒன்று


நன்மைக்குப் பத்து, தீமைக்கு ஒன்று - 2:272, 2:281, 3:25, 3:57, 3:161, 3:182, 4:40, 4:49, 4:124, 6:120, 6:160, 7:147, 8:60, 10:47, 10:54, 16:111, 17:71, 18:49, 21:47


சொர்க்கச் சோலைகள்


இந்தப் பூமியும், வானமும் இருக்காது - 14:48


சொர்க்கம் ஏழு வானங்கள் மற்றும் பூமி அளவுக்கு விசாலமானது - 3:133, 57:21


சொர்க்கத்திற்குக் கதவுகள் இருக்கும் -38:50


சொர்க்கச் சோலைகளின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும் - 2:25, 3:15, 3:136, 3:195, 3:198, 4:13, 4:57, 4:122, 5:12, 5:85, 5:119, 7:43, 9:89, 10:9, 14:23, 20:76, 22:14, 22:23, 23:10, 57:12


அழகான குடியிருப்புகளும் உண்டு - 9:72, 13:29, 39:20, 61:12


நல்லோர்களில் பல படித்தரங்கள் உள்ளன - 4:95, 57:10


வானவர்கள் வாழ்த்துக் கூறி அழைத்துச் செல்வார்கள் – 39:73


நல்ல சந்ததிகள் பெற்றோருடன் சேர்க்கப்படுவார்கள் - 52:21


பெண்களுக்கும் சொர்க்கம் உண்டு. அவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது - 3:195, 4:124, 16:97, 33:35, 40:40


அங்கே இறைவனைக் காண்பார்கள் - 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15


தூய்மையான துணைகள் - 2:25, 3:15, 4:57, 37:48,49, 38:52, 44:54, 52:20, 55:56,57, 55:70,-84, 56:22,23, 56:35, 78:32


துணைகளுடன் கட்டில்களில் சயனிப்பார்கள் - 36:56, 52:20, 83:23


சொகுசுக் கட்டில்களில் இருப்பார்கள் - 15:47, 18:31, 36:56, 37:44, 52:20, 55:76, 56:15, 76:13, 83:23, 83:35


கறுத்தவர்களும் அங்கே வெண்மையாகத் திகழ்வார்கள். - 3:106, 3:107, 10:26


வெயில் தெரியாது - 4:57, 13:35, 20:119, 36:56, 56:30, 76:13, 76:14, 77:41


கடும் குளிரும் இராது - 76:13


மிகச் சிறந்தவர்களின் தோழமையும் உண்டு - 4:69


கள்ளம் கபடம் யாருக்கும் இருக்காது - 7:43, 15:47


எவராலும் எத்தகைய இழிவும் ஏற்படாது - 10:26


நல்ல பெற்றோரையும், சந்ததிகளையும் அடிக்கடி சந்திப்பார்கள் -13:23


ஆண்களுக்குக் கிடைப்பவை பெண்களுக்கும் உண்டு - 3:195, 4:124, 16:97, 33:35, 40:40


ஸலாம் கூறிக் கொள்வார்கள் - 14:23, 19:62, 25:75, 33:44, 54:26, 56:26


எந்தக் கஷ்டமும் இருக்காது - 15:48, 35:35


வெளியேற்றப்பட மாட்டார்கள் - 2:25, 2:82, 3:107, 3:136, 4:13, 4:122, 5:85, 7:42, 9:22, 9:89, 9:100, 10:26, 11:23, 11:108, 14:23, 15:48, 20:76, 23:11, 25:15, 25:16, 46:16, 50:34


நீரூற்றுக்களும் உள்ளன - 15:45, 44:52, 51:15, 55:50, 55:66, 76:6, 76:18, 77:41, 83:28, 88:12


நினைத்தவை யாவும் கிடைக்கும் - 16:31, 21:102, 25:16, 36:57, 41:31, 42:22, 43:71, 44:55, 50:35, 77:42


அங்கிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள் - 18:108


வீண் பேச்சுக்கள் இல்லை - 19:62, 56:25, 78:35, 88:11


நிர்வாணம் இல்லை - 20:118


ஆபரணங்களும் உண்டு - 18:31, 22:23, 35:33, 76:21


பட்டாடைகளும் உண்டு - 18:31, 22:23, 35:33, 44:53, 55:54, 76:12, 76:21


மாளிகைகளும் உண்டு - 9:72, 25:10, 39:20, 61:12


பகல் தூக்கம் உண்டு - 25:24


தோட்டத்தின் உச்சியில் குடியிருப்பார்கள் - 25:75, 34:37, 39:20, 69:22, 88:10


இன்பத்தில் திளைப்பார்கள் - 36:55, 43:71


அங்கே மரணம் இல்லை - 20:74, 35:36, 44:56, 87:13


பணி செய்யும் வேலையாள் சிறுவர்கள் - 52:24, 56:17, 76:19


அவர்களின் முன்னேயும் வலப்புறமும் ஒளி வீசும் - 57:12, 57:13, 57:19, 66:8


அங்கே தனி ராஜ்ஜியம் - 76:20


மலர்ந்த முகம் - 75:22, 80:38, 83:24, 88:8


சாய்ந்து கொள்ளும் திண்டுகளும் உள்ளன - 88:15


உயர்தரமான விரிப்புகள் உள்ளன - 55:54, 55:76, 56:34, 88:16


இரண்டு வகை சொர்க்கம் - 55:46-53, 55:62


சொர்க்கத்தில் உணவு


பசி இல்லை- 20:118


பட்டினியில்லாத வகையில் உணவு - 13:35


தாகம் இல்லை - 20:119


மாமிச உணவும் உண்டு - 52:22, 56:21


நாற்றமில்லாத ஆற்று நீர், பாலாறு, தேனாறு, மதுவாறு அனைத்தும் உண்டு - 47:15


அனைத்து வகைக் கனிகளும் உண்டு - 47:15


அதிகமான அளவு சாப்பிடுவார்கள் - 38:51, 43:73


இரு வேளை உணவு - 19:62


தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பார்கள் - 43:71, 76:15


வெண்மையான, சுவையான மது பரிமாறப்படும். அதில் போதை இருக்காது - 37:45-48, 52:23, 56:18,19 83:25-28


ஏற்கனவே சாப்பிட்ட கனிகள் வடிவத்திலேயே கனிகள் உணவாக அளிக்கப்படும் - 2:25, 36:57, 37:42, 52:22, 55:68, 78:32


விரும்பிய கனிகளைப் பெறலாம் - 56:20


கனிகள் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் - 69:23, 76:14


கற்பூர பானம் - 76:5


இஞ்சி பானம் - 76:17


நரகம்


அனைவரும் நரகைக் கடக்க வேண்டும் - 19:71


நரகின் எரிபொருட்கள் - 2:24, 21:98, 40:72, 72:15


நரகில் பல படித்தரங்கள் - 4:145


வெளியேற முடியாது - 5:37, 32:20


நரகத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன - 15:44


தீய வழிகாட்டிய தலைவர்களும், வழிகாட்டப்பட்டவர்களும் சண்டையிட்டுக் கொள்வர் - 7:38, 7:39, 26:96-102, 33:66-68, 38:60-63, 40:47-48


நரகத்தில் உணவு


கொதிக்கும் நீர் புகட்டப்படும் - 6:70, 10:4, 37:67, 38:57, 47:15, 55:44, 56:42, 56:54, 56:93, 78:25, 88:5


சீழ் புகட்டப்படும் - 14:16,17, 38:57, 69:36, 78:25


கொதிக்கும் நீரால் குடல் துண்டாகும் - 47:15


உருக்கப்பட்ட செம்பு போல் வெப்பமுடைய தண்ணீர் புகட்டப்படுவர் - 18:29


ஸக்கூம் மரமே உணவாகும் - 37:66, 44:43-46, 56:52,53


தொண்டைக்குள் இறங்காத உணவு தோலைக் கருகச் செய்யும் - 73:13, 74:29


முள்மரமே உணவாகும் - 88:6


பசியைப் போக்காத உணவு - 88:7


பல் வகைத் தண்டனைகள்


கருகும் தோல்கள் உடனே மாற்றப்படும் - 4:56


நெருப்பினால் ஆன ஆடை - 22:19


கொதிநீர் தலையில் ஊற்றப்படும் - 22:19, 44:48


நெருப்பினால் எரிக்கப்படுவர் - 40:72


நெருப்புக் காற்று வீசும் - 56:42


விலங்கிடப்படுவார்கள் - 13:5, 34:33, 36:8, 40:71, 69:32, 73:12, 76:4


நெருப்பால் விரிப்பு - 7:41


நெருப்பால் போர்வை - 7:41


பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும் - 9:35


நெருப்பின் வேகம் தணியும்போது உடனே அதிகரிக்கப்படும் - 17:97


நரகத்தில் மரணம் இல்லை - 14:17, 20:74, 35:36, 44:56, 78:13, 87:13


நரகம் கடுமையான வெப்பமுடையது - 9:81


நரகவாசிகளின் கூச்சலும், அலறலும் - 11:106, 21:100


இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவார்கள் - 22:21


முகத்தை எரிக்கும் நெருப்பு - 23:104


நரகத்தின் பேரிரைச்சல் - 25:12, 67:7


நரகில் புரட்டி புரட்டிப் போடப்படுவார்கள் - 26:94, 33:66


கீழ்ப்புறத்திலிந்தும், மேற்புறத்திலிருந்தும் வேதனை செய்யப்படும் - 29:55


வேதனை இலேசாக்கப்படாது - 40:49, 43:75


கரும் புகையே நிழலாகும் - 56:43-44


கடுமையான காவலர்கள் - 66:6, 74:31


மண்டை ஓட்டைக் கழற்றும் வெப்பம் - 70:16


மாளிகை போல் பிரம்மாண்டமான தீப்பந்தங்களை வீசி எறியும் - 77:31-34


குளிர்ச்சியை அனுபவிக்க மாட்டார்கள் - 78:24


இதயங்களைத் தாக்கும் கடும் நெருப்பு - 104:6,7


என்றென்றும் நரகில் கிடப்போர்


இறைவனை நம்ப மறுத்தவர்கள் - 2:39, 2:161,162, 2:217, 2:257, 3:116, 4:169, 9:68, 33:65, 39:72, 40:76, 41:28, 59:16, 64:10, 98:6


ஒரு நன்மையும் செய்யாது தீமைகளை மட்டுமே செய்தவர்கள் - 2:81, 10:27, 16:29, 43:74


வட்டி வாங்கியவர்கள் - 2:275


ஏகஇறைவனை ஏற்று பிறகு மறுத்தவர்கள் - 3:88


அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள் - 4:14, 5:80, 72:23


சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் - 58:16


கொலை செய்தவர்கள் - 4:93


இறை வசனங்களை நம்ப மறுத்துப் புறக்கணித்தவர்கள் - 7:36, 20:100, 23:103


இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் - 6:128, 9:17, 25:68, 40:76, 98:6


அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிடுவோர் - 9:63


இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் - 9:68


மறுமையை நம்பாதவர்கள் - 10:52, 13:5, 22:14


தடுப்புச் சுவர்


இடைநிலையில் சிலர் - 7:46


விதியை நம்புதல்


நேர்வழியும், வழிகேடும் விதிப்படியே - 2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 3:176, 4:94, 4:88, 4:143, 5:41,48, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18, 11:34, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57, 22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35, 42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31


மனிதனே தனது செயலுக்குப் பொறுப்பாளி - 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:25, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 73:19, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24


வழிகெடுப்பது ஷைத்தானின் வேலை - 2:36, 2:268, 3:155, 3:175, 4:60, 4:119, 4:120, 5:91, 6:43, 6:68, 7:20, 16:63, 17:27, 17:64, 19:58, 20:120, 25:29, 27:24


மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி - 10:108, 17:15, 39:41


அருளும் விதிப்படியே - 2:90, 2:105, 3:73, 3:74, 5:54, 62:4


செல்வமும் விதிப்படியே - 2:212, 3:27, 3:37, 9:28, 13:26, 17:30, 24:38, 28:82, 29:62, 34:36, 39:52, 42:12, 42:19


ஆட்சியும் விதிப்படியே - 2:247, 3:36, 7:128


சண்டை சச்சரவுகளும் விதிப்படியே - 2:253, 4:90


கண்ணியமும், இழிவும் விதிப்படியே - 3:26


மக்கள் பிரிந்து கிடப்பதும் விதிப்படியே - 5:48, 11:118, 16:93, 42:8


அனைத்தும் விதிப்படியே - 6:59, 10:61, 13:11, 35:11, 57:22, 74:56


இணை கற்பித்தலும் விதிப்படியே - 6:108


வழிகெடுப்பதும் விதிப்படியே - 6:112


சிசுக் கொலையும் விதிப்படியே - 6:137


மனிதன் நினைப்பதும் விதிப்படியே - 76:30, 81:29


விதியின் மீது பழி போட்டுத் தப்பிக்க முடியாது - 6:148, 16:35, 36:47, 43:20


விதியை இறைவன் மாற்றியமைப்பான் - 13:39


முரண்பாடு போல் தோன்றும் விதியை இறைவன் ஏற்படுத்திய காரணம் என்ன? - 57:23


 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 293009