199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்

 

போர் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் தோற்றவர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் படை திரட்டிக் கொண்டு அடுத்த போருக்கு வருவார்கள். அதே சமயம் எதிரிகள் அடியோடு முறியடிக்கப்பட்டு அவர்கள் எதிர்த்துப் போரிடவே அஞ்சும் நிலை ஏற்பட்டால் அப்போது கைது செய்யப்பட்டவர்களைப் பின்னர் விடுதலை செய்யலாம் என்பது இவ்வசனத்தின் (8:67) கருத்தாகும்.

 

எந்த ஒரு நாடும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இத்தகைய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும். இதை வன்முறைப் போக்காகக் கருதக் கூடாது.

 

போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 197, 198, 203, 359 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159682