356. அபூலஹபின் அழிவு 356. அபூலஹபின் அழிவு

 

இந்த (111வது) அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கிய எதிரியுமான அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது மண்ணை வாரி வீசிய அபூலஹப் "இதற்காகத்தான் எங்களை அழைத்தாயா? நீ நாசமாகப் போ!'' என்று கூறி தூற்றினான். அவனைக் கண்டிக்கும் விதமாகவே இந்த அத்தியாயம் அருளப்பட்டது. (பார்க்க : புகாரி 1394, 4770, 4801, 4971, 4972, 4973)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே அவனும், அவனுடைய மனைவியும், குடும்பத்தினரும் முழுமையாக அழிக்கப்பட்டு தடயமே இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.

 

இதில் மிக முக்கியமான ஒரு முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது. "அபூலஹப் இஸ்லாத்தை ஏற்க மாட்டான். நரகத்திற்கே செல்வான்'' என்று இந்த அத்தியாயம் பிரகடனம் செய்கிறது.

 

இஸ்லாத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அபூலஹப் இந்த அத்தியாயத்தைப் பொய்யாக்குவதற்காக தானும் இஸ்லாத்தில் இணைவதாக நடித்திருக்கலாம். அவ்வாறு நடித்து "இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு நிறைவேறவில்லை எனவே, முஹம்மது பொய்யர்'' என்று நிரூபித்திருக்கலாம். ஆனால், கடைசி வரை அபூலஹப் எதிரியாகவே மரணித்திருப்பது இது இறைவனின் வேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 292940