10. இறைவன் தூயவன் என்பதன் பொருள்

 

இவ்வசனங்களில் (2:32, 2:116, 3:191, 4:171, 5:116, 6:100, 7:143, 9:31, 10:10, 10:18, 10:68, 12:108, 16:1, 16:57, 17:1, 17:43, 17:93, 17:108, 19:35, 21:22, 21:26, 21:87, 23:91, 24:16, 25:18, 27:8, 28:68, 30:40, 34:41, 36:36, 36:83, 37:159, 37:180, 39:4, 39:67, 43:13, 43:82, 52:43, 59:23, 68:29) தூய்மையானவன் எனப் பொருள் படும் ஸுப்ஹான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

ஸுப்ஹான் என்றால் தூய்மை என்பது பொருள். நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை எனும் சொல், அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் ஸுப்ஹான் என்பது அதை விட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும்.

 

"கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன்'' என்பதே ஸுப்ஹான் என்பதன் பொருளாகும்.

 

"மரணம், முதுமை, நோய், தூக்கம், இயலாமை, அசதி, களைப்பு, கவலை, பலவீனம், தோல்வி, இயற்கை உபாதை, மனைவி, மக்கள், தாய் தந்தை, பசி, தாகம் போன்ற அனைத்திலிருந்தும் நீங்கியிருத்தல்'' என்பது இதன் பொருளாகும். இந்தச் சொல்லை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் பயன்படுத்தக் கூடாது.

 

அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்க அரபியில் வேறு சொற்கள் உள்ளன.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.