228. யூஸுஃபின் சகோதரர்கள்

 

யாகூப் நபியின் அனைத்துப் புதல்வர்களும் யூஸுஃப் நபிக்குச் சகோதரர்களாக இருந்தும், ஒருவர் மட்டும் யூஸுஃபின் சகோதரர் என்று இவ்வசனங்களில் (12:7, 8, 59, 76, 77) தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

யூஸுஃப் நபியவர்கள், எனது சகோதரர் என்று ஒருவரை மட்டும் பிரித்துப் பேசுகிறார். அது போலவே மற்ற சகோதரர்களும் "யூஸுஃபும் அவரது சகோதரரும் நம்மை விட நம் தந்தைக்கு மிகவும் விருப்பமானவர்கள்'' என்று அவ்விருவரையும் பிரித்துப் பேசுகின்றனர்.

 

இவ்வாறு பிரித்துப் பேசுவதற்கு இருதாரத்துப் பிள்ளைகளாக இருந்ததே காரணமாக இருக்க முடியும். யூஸுஃபும், அவரது ஒரு சகோதரரும் யாகூப் நபியின் இரண்டாம் தாரத்துப் பிள்ளைகளாகவும், மற்ற சகோதரர்கள் மூத்த தாரத்துப் புதல்வர்களாகவும் இருந்திருக்க வேண்டும்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 164991