257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

 

இவ்வசனத்தில் (16:66) பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி கூறப்படுகிறது.

 

பிராணிகளின் இரத்தம் தான் பாலாக உருவாகிறது என்று ஆரம்ப காலத்தில் மக்கள் நம்பினார்கள். சென்ற நூற்றாண்டு வரை இதுதான் மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

 

சானத்துக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தான் பால் உருவாகிறது என்று இவ்வசனத்தில் (16:66) கூறப்படுகிறது. அதாவது இரத்தம் பாலாக ஆவதில்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

 

பாலூட்டிகளுக்கு இரண்டு குடல்கள் உள்ளன. உண்ணும் உணவுகள் அரைத்து சிறு குடலில் கூழாக்கப்பட்டு அதில் உள்ள உறிஞ்சுகள் மூலம் பல்வேறு சத்துக்கள் உரிஞ்சப்பட்டு உடல் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறது.

 

தேவையான சத்துக்களைப் பிரித்து எடுத்த பின் சக்கையைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. அதில் தான் மலக்குடலும் உள்ளது.

 

சாணம் என்பது பெருங்குடலில் உள்ள சக்கைகளைக் குறிக்கும். இரத்தத்துக்கும் சானத்துக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது என்பது சிறுகுடலில் அரைக்கப்பட்ட நிலையில் இருக்கும் உணவுக் கூழைக் குறிக்கும்.

 

சானமாக மாறுவதற்கும், இரத்தமாக மாறுவதற்கும் இடையில் உள்ள நிலை என்பது இது தான். இதைத் தான் இவ்வசனம் சொல்கிறது.

 

இரத்தம் தான் பாலாக ஆகிறது என்றால் பால் என்பது இரத்தத்துக்கு அடுத்த நிலை என்று ஆகிறது. ஆனால் இரத்தமாக ஆவதற்கு முந்திய நிலைதான் பால் என்று குர்ஆன் கூறுகிறது.

 

இது பற்றி நவீன விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

 

இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகின்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக ஆகும். குடலில் உள்ள உறிஞ்சிகள் அதிலிருந்து சத்துக்களை உறிஞ்சுகின்றன.

 

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாறுகிறது.

 

அதாவது சானத்துக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை "அதன் வயிறுகளில் உள்ள சானத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்' என்று திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தை அல்ல என்பதற்கும், கடவுளின் வார்த்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 151726