156. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரு மடங்கு வேதனையா?

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீயவழி செல்வோருக்குச் சார்பாக இருந்திருந்தால் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் இரு மடங்கு வேதனையை சுவைக்கச் செய்திருப்பேன் என்று இவ்வசனத்தில் (17:75) அல்லாஹ் கூறுகிறான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிக் கட்டத்தில் நோய் வாய்ப்பட்டபோது தாம் இரு மடங்கு துன்பத்தை அனுபவிப்பதாகக் குறிப்பிட்டனர். (புகாரி 5648, 5660, 5667)

 

இந்த ஹதீஸ், திருக்குர்ஆனுக்கு எதிரானது என்று சிலர் கருதுகின்றனர்.

 

தண்டிக்கும் முகமாக இரு மடங்கு வேதனை தருவதையே அல்லாஹ் இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான். சோதிப்பதற்காகவும், மறுமையில் மகத்தான பரிசை வழங்குவதற்காகவும் இவ்வுலகில் நல்லவர்களுக்குப் பல மடங்கு வேதனை தருவது இவ்வசனத்திற்கு எதிரானது அல்ல.

 

அய்யூப் நபி உள்ளிட்ட பல நபிமார்கள் இரு மடங்கு அல்ல, பல மடங்கு வேதனைகளை இவ்வுலகில் அனுபவித்ததற்குக் குர்ஆனில் சான்று உள்ளது.

 

தண்டிக்கும் விதமாக அளிக்கப்படும் வேதனை பற்றியே இவ்வசனம் கூறுகிறது. சோதிப்பதற்காக நல்லடியார்களுக்கு அளிக்கப்படும் துன்பங்கள் தண்டனையாகாது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் இரு மடங்கு வேதனை அனுபவித்ததாகச் சொல்லும் ஹதீஸ் இவ்வசனத்துக்கு முரணானதல்ல.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 165027