425. பூமியின் அடுக்குகள்

 

இந்த வசனத்தில் (65:12) ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்ததாக இறைவன் கூறுகின்றான்.

 

நாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல் பிரபஞ்சத்தில் இன்னும் ஆறு பூமிகள் உள்ளன என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

 

நாம் வாழ்கின்ற பூமி, ஒன்றன்மேல் ஒன்றாக பல அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது என்றே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்வதற்கு இந்த வசனமே வழிகாட்டுகிறது.

 

ஏழு வானங்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. ஒன்றின்மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் உள்ளதைச் சொல்லி விட்டு, பூமியில் அது போன்றதை என்று கூறினால் இதுவும் அடுக்குகளைத்தான் குறிக்கும்.

 

மனிதன் பூமியில் வாழ்ந்தாலும் அவன் ஆகாயத்தைப் பற்றி அறிந்த அளவுக்குப் பூமியைப் பற்றி அறியவில்லை.

 

ஆகாயத்தை அறிவதற்காக செயற்கைக் கோள்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை மனிதன் நடத்துகிறான். ஆனால் அவன் வாழ்கின்ற பூமிக்கு உள்ளே ஆய்வு செய்வதற்கு இத்தகைய வசதிகள் இல்லை.

 

பூமி முழுவதும் ஒரே திடப்பொருளால் ஆனது என்று கருதி வந்த மனிதன் இப்போதுதான் அதில் அடுக்குகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளான்.

 

பூமியின் அடுக்குகளில் இன்னர் கோர், அவுட்டர் கோர், மேன்டில், க்ரஸ்ட் ஆகிய நான்கு அடுக்குகள் முக்கியமானவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்னும் சில அடுக்குகள் இருப்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டாலும் அதை பிரித்தறியவில்லை.

 

எனவே பூமியிலும் வானத்தைப் போல் அடுக்குகள் உள்ளன எனத் திருக்குர்ஆன் கூறுவது நிரூபணமாகின்றது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 227927