97.தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை

 

இவ்வசனங்களில் (3:93, 5:15) யூதர்கள் தமது வேதத்தில் காட்டிய கைவரிசையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

 

தவ்ராத் என்பது யூதர்களின் வேதமாகும். அது ஹிப்ரு மொழியில் இருந்தது. அன்றைய யூத மக்கள் கூட அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை. சில யூதப் பண்டிதர்கள் மட்டுமே அந்த வேதத்தை அறிந்து வைத்திருந்தார்கள். தமக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் மக்களுக்குக் கூறிவிட்டு மற்றவைகளை யூதப் பண்டிதர்கள் மறைத்தும் வந்தனர்.

 

இந்த நிலையில் தமது வேதத்தில் இருப்பதாக அவர்கள் கூறிய பல விஷயங்கள் அவர்களின் வேதத்தில் இல்லை என்றும், தமது வேதத்தில் இல்லை என்று அவர்கள் கூறிய பல விஷயங்கள் அவர்களது வேதத்தில் உள்ளன என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அறைகூவல் விடச் செய்தான்.

 

அரபுமொழியே எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஹிப்ரு மொழியில் அமைந்த தவ்ராத்தின் வசனங்களை எடுத்துக் காட்டி, "இதில் இன்ன குறை உள்ளது'' என்று சுயமாக அறைகூவல் விட முடியாது. அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் தான் இதைச் சொல்லியிருக்க முடியும். எனவே இந்த அறைகூவல் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

 

பழைய ஏற்பாடு என்பதுதான் தவ்ராத் என்று சிலர் கருதுகின்றனர். அது தவறு என்பதை அறிய 491வது குறிப்பை வாசிக்கவும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 257744