93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா?

 

இவ்வசனத்தில் (3:55) ஈஸா நபியைக் கைப்பற்றி அல்லாஹ் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது.

 

கைப்பற்றி என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் அரபு மூலத்தில் முதவஃப்பீக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கைப்பற்றுதல் என்றும், மரணிக்கச் செய்தல் என்றும் பொருள் உள்ளது.

 

அகராதியில் இவ்வாறு இரண்டு விதமாகப் பொருள் செய்ய இடமிருந்தாலும் இவ்வசனத்தில் கைப்பற்றுதல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். 5:116 – 118 வசனங்களிலும் கைப்பற்றுதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தை 151வது குறிப்பில் விளக்கியுள்ளோம். எனவே இவ்வசனத்திற்கான விளக்கத்தை அறிய 151வது குறிப்பைப் பார்க்க!

 

(ஈஸா நபி மரணித்து விட்டார்களா? அல்லது உயர்த்தப்பட்டு இறுதிக் காலத்தில் இறங்கி வந்து மரணிப்பார்களா என்பது பற்றி அறிய 101, 133, 134, 151, 278, 342, 456 ஆகிய குறிப்புகளையும் காண்க!)

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 227964