264. இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி

 

இஸ்ரவேலர்கள் கடந்த காலத்தில் இரண்டு தடவை மிகப்பெரிய ஆதிக்கம் பெற்றதையும், பின்னர் எதிரிகளால் அவர்கள் சின்னாபின்னமாக்கப் பட்டதையும் இவ்வசனங்கள் (17:4-8) கூறுகின்றன.

 

இன்று இஸ்ரவேலர்கள் அதிக வலிமை பெற்றுள்ளதை இவ்வசனத்துக்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மீண்டும் வலிமையான ஆற்றல் அவர்களிடம் அளிக்கப்பட்டது குறித்து ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பும் இவ்வசனங்களுக்கிடையே அமைந்துள்ளது. "உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் செய்வான்" என்ற சொற்றொடரிலிருந்து இதை அறியலாம்.

 

இவ்வாறு ஆதிக்கத்தை வழங்கும்போது வரம்பு மீறினால் அவர்கள் அழிவைச் சந்திப்பார்கள். அவர்களை விட வலிமையானவர்களை அவர்களுக்கு எதிராக இறைவன் சாட்டுவான். "நீங்கள் திரும்பினால் நாமும் திரும்புவோம்'' என்ற சொற்றொடர் மூலம் இதை அறியலாம்.

 

ஹிட்லர் காலத்திலும், அதற்கு முன் ரோமானியப் பேரரசாலும், அதற்கு முன் முஸ்லிம் அரசுகளாலும் இவர்கள் தண்டிக்கப்பட்டனர். அதுபோல் இப்போது வரம்பு மீறும் இஸ்ரவேலர்களுக்கு எதிராகவும் வலிமை மிக்கவர்கள் சாட்டப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பாக இது அமைந்துள்ளது. இது அல்லாஹ் நாடும்போது நிறைவேறியே தீரும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 44747