330. தியாகிகளுக்கு உடனே சொர்க்கம்

 

இவ்வசனத்தில் (36:26) ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென "சொர்க்கத்திற்குச் செல்'' எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான்.

 

அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இதனுள் அடங்கியுள்ளது. அப்படிக் கொன்றவுடனேயே அவர் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்பது இவ்வசனம் கூறும் கருத்து.

 

கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்று நாம் நம்புகிறோம்.

 

இதில் இவரைப் போன்ற தியாகிகளுக்கு விதிவிலக்கு உண்டு. இவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்துப் பறவை வடிவத்தில்தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளனர். (நூல்: முஸ்லிம் 3834)

 

இது பற்றி மேலும் விபரம் அறிய 41, 332, 349 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 44380