326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

 

இவ்வசனத்தில் (34:13) ஸுலைமான் நபிக்கு ஜின்களும், ஷைத்தான்களும் பலவித கலைப் பொருட்களைச் செய்து கொடுத்ததைப் பற்றிக் கூறப்படுகிறது. அவற்றில் உருவச் சிலைகளும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

 

இதைச் சான்றாக வைத்து இப்போதும் உருவச் சிலைகளை வைத்துக் கொள்ளலாம்; உருவப்படங்களை மாட்டிக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. ஏனென்றால் முந்தைய சமுதாயத்திற்கு அனுமதிக்கப்பட்டவை இறைவனாலோ, இறைத்தூதராலோ மாற்றி அமைக்கப்படாவிட்டால் மட்டுமே அவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

உருவச் சிலைகளைப் பொறுத்த வரை அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக மறுக்கிறார்கள்; அதைப் பெரிய குற்றமாக ஆக்கியுள்ளார்கள். (பார்க்க : புகாரி 2105, 3224, 3225, 3226, 3322, 4002, 5181, 5949, 5957, 5958, 5961, 7557)

 

எனவே இது ஸுலைமான் நபிக்கு மட்டும் அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டவற்றில் அடங்கும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

முந்தைய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட எல்லாச் சட்டங்களும் நமக்கும் பொருந்துமா என்பது குறித்து மேலும் அறிய 277 வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 227996