416. ராட்சதப் பறவை

 

இவ்வசனத்தில் (22:31) இணைகற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும்போது, 'பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல்' என்று கூறப்படுகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.

 

மனிதனை விடப் பன்மடங்கு பெரிதாகவும், வலிமை மிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால் தான் இது சாத்தியமாகும்.

 

இது போன்ற பறவைகளை நாம் காணாவிட்டாலும் இத்தகைய பறவைகள் இருந்துள்ளன என்பதைப் படிமங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். யானையை விடப் பெரிய அளவிலான பறவையின் எலும்புகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

இப்பறவைகளின் மரபணுக்கள் கிடைத்து விட்டால் அதைக் கொண்டு மீண்டும் அப்பறவைகளை உண்டாக்கவும் முடியும்.

 

கடந்த காலத்தில் இத்தகைய பறவை இருந்தது என்பதாலும், மரபணு கிடைத்து விட்டால் எதிர்காலத்தில் அவை மறு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதாலும் தான், 'பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்ட மனிதன் போல்' என்று இறைவன் உதாரணம் காட்டியுள்ளான்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 227978