87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி

 

இப்போரில் முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கையிலும், போதுமான ஆயுதங்கள் இல்லாமலும் இருந்தனர். ஆனாலும் முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியடைந்தனர்.

 

இப்போரைப் பற்றி மிகப்பெரும் அத்தாட்சி என்று இவ்வசனம் கூறுவது ஏன்?

 

முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையிலும், எதிரிகள் முஸ்லிம்களைப் போல் மும்மடங்கு அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர். முஸ்லிம்களிடம் போதுமான ஆயுதங்களும், உணவுகளும் இருக்கவில்லை.

 

எதிரிகளிடம் இவை அளவுக்கு அதிகமாக இருந்தன. ரமளான் மாதத்தில் 17ஆம் நாள் இப்போர் நடந்ததால் பல நபித்தோழர்கள் நோன்பாளிகளாக இருந்தனர். நோன்பு வைக்காதவர்களும் அதற்கு முன் சில நாட்கள் நோன்பு நோற்றிருந்ததால் பலவீனப்பட்டு இருந்தனர்.

 

இப்படி முஸ்லிம்கள் தரப்பில் ஏராளமான பலவீனங்கள் இருந்தும் இப்போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். இது உண்மையிலேயே அல்லாஹ்வின் மிகப்பெரும் அத்தாட்சியாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

 

பத்ர் போர் குறித்து மேலும் அறிய 358வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 227850