73. கடனைத் தள்ளுபடி செய்தல்

 

வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள மேலதிகச் செல்வத்தை ஏழைகளுக்குக் கடனாகவோ, தர்மமாகவோ வழங்கி உதவுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்குவதைக் கூச்சமில்லாமல் செய்து வருகின்றனர்.

 

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் தர்மம் தான் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் கடன் கொடுக்கும் விஷயத்தில் அல்லாஹ் இந்த விதியைத் தளர்த்துகிறான். நாம் கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராது என்ற நிலை ஏற்படும்போது அந்தக் கடனைத் தள்ளுபடி செய்தால் அது தர்மமாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என இவ்வசனம் கூறுகிறது.

 

கடன் கொடுக்கும்போது தர்மம் என்ற எண்ணம் நமக்கு இல்லாவிட்டாலும் கடன்பட்டவர்களுக்கு கருணை காட்டுவதற்காக அல்லாஹ் இந்த விதியைத் தளர்த்தி அருள் புரிகிறான்.

 

அது போல் ஸகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தமக்கு வர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்து தன்மீது கடமையான ஸகாத் தொகையிலிருந்து அதைக் கழித்துக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து (2:280) அறிந்து கொள்ளலாம்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 256450