15.    அல் ஹிஜ்ர்

ஓர் ஊர்

மொத்த வசனங்கள் : 99

ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

15:1   الۤرٰ تِلْكَ اٰيٰتُ الْـكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِيْنٍ‏ 
15:1. அலிஃப், லாம், ரா2 இது வேதமாகிய தெளிவான குர்ஆனின் வசனங்கள்.
15:2   رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِيْنَ‏ 
15:2. "தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே" என்று சில நேரங்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் விரும்புவார்கள்.
15:3   ذَرْهُمْ يَاْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ‌ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ 
15:3. அவர்கள் உண்டு, சுகித்து, ஆசை அவர்களைத் திசை திருப்புமாறு அவர்களை விட்டு விடுவீராக! பின்னர் அறிந்து கொள்வார்கள்.
15:4   وَمَاۤ اَهْلَـكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ‏ 
15:4. எந்த ஊரையும் அதற்கென்று உள்ள கால நிர்ணயத்தின்படியே நாம் அழித்துள்ளோம்.
15:5   مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَاْخِرُوْنَ‏ 
15:5. எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.
15:6   وَ قَالُوْا يٰۤاَيُّهَا الَّذِىْ نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌؕ‏ 
15:6. "அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்''468 என்று அவர்கள் கூறுகின்றனர்.
15:7   لَوْ مَا تَاْتِيْنَا بِالْمَلٰۤٮِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏ 
15:7. "நீர் உண்மையாளராக இருந்தால் எங்களிடம் வானவர்களைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?'' (எனவும் கூறுகின்றனர்)
15:8   مَا نُنَزِّلُ الْمَلٰۤٮِٕكَةَ اِلَّا بِالْحَـقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِيْنَ‏ 
15:8. தக்க காரணத்துடனே வானவர்களை அனுப்புவோம்.153 அப்போது இவர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
15:9   اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏ 
15:9. நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.143
15:10   وَلَـقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِىْ شِيَعِ الْاَوَّلِيْنَ‏ 
15:10. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற பல சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம்.
15:11   وَمَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏ 
15:11. எந்தத் தூதர் அவர்களிடம் வந்தாலும், அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததேயில்லை.
15:12   كَذٰلِكَ نَسْلُكُهٗ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ‏ 
15:12. குற்றவாளிகளின் உள்ளங்களில் இவ்வாறே இதைப் புகுத்துகிறோம்.
15:13   لَا يُؤْمِنُوْنَ بِهٖ‌ۚ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِيْنَ‏ 
15:13. அவர்கள் இதை நம்ப மாட்டார்கள். முன்னோர்கள் (மீது எடுத்த) நடவடிக்கை முன்னுதாரணமாகச் சென்று விட்டது.
15:14   وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ‏ 
15:15   لَـقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ‏ 
15:14,15. அவர்களுக்காக வானத்தில்507 ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், "எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்''357 என்றே கூறுவார்கள்.26
15:16   وَلَـقَدْ جَعَلْنَا فِى السَّمَآءِ بُرُوْجًا وَّزَيَّـنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ‏ 
15:16. வானத்தில்507 நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம்.
15:17   وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ‏ 
15:18   اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَ تْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ‏ 
15:17,18. ஒட்டுக் கேட்பவனைத் தவிர, விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதைப் பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.26
15:19   وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَىْءٍ مَّوْزُوْنٍ‏ 
15:19. பூமியை விரித்தோம். அதில் முளைகளை நாட்டினோம்.248 அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம்.
15:20   وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِيْنَ‏ 
15:20. உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.
15:21   وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ‏ 
15:21. எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம்.
15:22   ‌وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ‌ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ‏ 
15:22. சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
15:23   وَ اِنَّا لَــنَحْنُ نُحْىٖ وَنُمِيْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ‏ 
15:23. நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நாமே உரிமையாளர்களாவோம்.
15:24   وَلَـقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِيْنَ مِنْكُمْ وَلَـقَدْ عَلِمْنَا الْمُسْتَـاْخِرِيْنَ‏ 
15:24. உங்களுக்கு முன் சென்றவர்களையும் நாம் அறிவோம். பின் வருவோரையும் அறிவோம்.
15:25   وَاِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ‌ؕ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ‏ 
15:25. உமது இறைவனே அவர்களை ஒன்று திரட்டுவான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.
15:26   وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‌ۚ‏ 
15:26. கருப்புக் களிமண்ணில்503 இருந்து - மணல் கலந்த களிமண்ணில் இருந்து506 - மனிதனைப் படைத்தோம்.368
15:27   وَالْجَـآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ‏ 
15:27. கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
15:28   وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤٮِٕكَةِ اِنِّىْ خَالـِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‏ 
15:28. "கருப்புக் களிமண்ணில்503 இருந்து - மணல் கலந்த களிமண்ணில் இருந்து506 - நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்'' என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக!368
15:29   فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ‏ 
15:29. "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும்போது,90 அவருக்குப் பணிந்து விழுங்கள்!''11 (என்று கூறினான்)
15:30   فَسَجَدَ الْمَلٰۤٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ‏ 
15:31   اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰٓى اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ‏ 
15:30, 31. இப்லீஸைத்509 தவிர வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இருக்க மறுத்து விட்டான்.26
15:32   قَالَ يٰۤاِبْلِيْسُ مَا لَـكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ‏ 
15:32. "இப்லீஸே! பணிந்தோருடன் நீ சேராமல் இருப்பது ஏன்?'' என்று (இறைவன்) கேட்டான்.
15:33   قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‏ 
15:33. "கருப்புக் களிமண்ணில்503 இருந்து - மணல் கலந்த களிமண்ணில் இருந்து506 - நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை'' என்று அவன் கூறினான்.
15:34   قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۙ‏ 
15:34. இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன்.
15:35   وَّاِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ اِلٰى يَوْمِ الدِّيْنِ‏ 
15:35. தீர்ப்பு நாள்1 வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்)
15:36   قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏ 
15:36. "இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் தருவாயாக!'' என்று அவன் கேட்டான்.
15:37   قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ‏ 
15:38   اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ‏ 
15:37, 38. "குறிப்பிட்ட நேரத்திற்கான நாள்1 வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்'' என்று (இறைவன்) கூறினான்.26
15:39   قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏ 
15:40   اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏ 
15:39, 40. "என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்'' என்று கூறினான்.26
15:41   قَالَ هٰذَا صِرَاطٌ عَلَىَّ مُسْتَقِيْمٌ‏ 
15:41. "இதோ என்னிடம் நேரான வழி உள்ளது'' என்று (இறைவன்) கூறினான்.
15:42   اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَـعَكَ مِنَ الْغٰوِيْنَ‏ 
15:42. எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
15:43   وَاِنَّ جَهَـنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِيْنَۙ‏ 
15:43. நரகமே அவர்கள் அனைவருக்கும் எச்சரிக்கப்பட்ட இடம்.
15:44   لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ‏ 
15:44. அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர்.
15:45   اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍؕ‏ 
15:45. (இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
15:46   اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ‏ 
15:46. "அச்சமற்று நிம்மதியுடன் இதில் நுழையுங்கள்!'' (என்று கூறப்படும்)
15:47   وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ‏ 
15:47. அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதங்களை நீக்குவோம். கட்டில்களில் நேருக்குநேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள்.
15:48   لَا يَمَسُّهُمْ فِيْهَا نَـصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِيْنَ‏ 
15:48. அதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது. அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
15:49   نَبِّئْ عِبَادِىْۤ اَنِّىْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ‏ 
15:49. "நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்பதை எனது அடியார்களுக்குக் கூறுவீராக!
15:50   وَاَنَّ عَذَابِىْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ‏ 
15:50. "எனது வேதனையே துன்புறுத்தும் வேதனை'' (என்பதையும் கூறுவீராக!)
15:51   وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَ‌ۘ‏ 
15:51. இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக!
15:52   اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ‏ 
15:52. அவர்கள், அவரிடம் சென்று ஸலாம்159 கூறினர். அதற்கு அவர் "நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்'' என்றார்.
15:53   قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ‏ 
15:53. "நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர்.
15:54   قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ‏ 
15:54. "எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.
15:55   قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَـقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِيْنَ‏ 
15:55. "உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகிவிடாதீர்!'' என்று அவர்கள் கூறினர்.
15:56   قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ‏ 
15:56. "வழிகெட்டவர்களைத் தவிர யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?''471 என்று அவர் கேட்டார்.
15:57   قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏ 
15:57. "தூதர்களே!161 உங்கள் செய்தி என்ன?'' என்றும் கேட்டார்.
15:58   قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ‏ 
15:58. நாங்கள் குற்றம் புரிந்த கூட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளோம். (என்றனர்)
15:59   اِلَّاۤ اٰلَ لُوْطٍؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِيْنَۙ‏ 
15:60   اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ‏ 
15:59, 60. "லூத்துடைய குடும்பத்தாரில் அவரது மனைவியைத் தவிர அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றுவோம். அவள் அழிபவள் என்று நிர்ணயித்து விட்டோம்'' என்றனர்.26
15:61   فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ ۨالْمُرْسَلُوْنَۙ‏ 
15:62   قَالَ اِنَّـكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ‏ 
15:61, 62. அத்தூதர்கள்161 லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது "நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே'' என்று அவர் கூறினார்.26
15:63   قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ‏ 
15:64   وَ اَتَيْنٰكَ بِالْحَـقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏ 
15:65   فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ‏ 
15:63, 64, 65. (அதற்கவர்கள்) "அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகித்ததை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!'' என்று கூறினார்கள்.26
15:66   وَقَضَيْنَاۤ اِلَيْهِ ذٰ لِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰٓؤُلَاۤءِ مَقْطُوْعٌ مُّصْبِحِيْنَ‏ 
15:66. "அவர்கள் அனைவரும் காலைப் பொழுதில் வேரறுக்கப்பட்டு விடுவார்கள்'' என்ற தீர்ப்பையும் அவருக்கு அறிவித்தோம்.
15:67   وَجَآءَ اَهْلُ الْمَدِيْنَةِ يَسْتَـبْشِرُوْنَ‏ 
15:67. அவ்வூர்வாசிகள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.
15:68   قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِىْ فَلَا تَفْضَحُوْنِۙ‏ 
15:69   وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ‏ 
15:68, 69. "இவர்கள் எனது விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை இழிவுபடுத்தாதீர்கள்!'' என்று (லூத்) கூறினார்.26
15:70   قَالُـوْۤا اَوَلَمْ نَـنْهَكَ عَنِ الْعٰلَمِيْنَ‏ 
15:70. "உலகத்தாரை விட்டும் (மற்றவருக்காகப் பரிந்து பேசுவதை விட்டும்) உம்மை நாங்கள் தடுக்கவில்லையா'' என்று அவர்கள் கேட்டனர்.
15:71   قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْۤ اِنْ كُنْـتُمْ فٰعِلِيْنَؕ‏ 
15:71. "நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்'' என்று அவர் கூறினார்.
15:72   لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِىْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ‏ 
15:72. உமது வாழ்நாளின் மீது சத்தியமாக!379 அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர்.
15:73   فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ‏ 
15:73. அவர்கள் வெளிச்சத்தை அடைந்தபோது, பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது.
15:74   فَجَعَلْنَا عَالِيـَهَا سَافِلَهَا وَ اَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍؕ‏ 
15:74. அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல்மழை பொழிந்து, அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.412
15:75   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـلْمُتَوَسِّمِيْنَ‏ 
15:75. சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
15:76   وَاِنَّهَا لَبِسَبِيْلٍ مُّقِيْمٍ‏ 
15:76. அவ்வூர் (நீங்கள் சென்று வரும்) நிலையான சாலையில் தான் உள்ளது.
15:77   اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لِّـلْمُؤْمِنِيْنَؕ‏ 
15:77. நம்பிக்கை கொண்டோருக்கு இதில் தக்க சான்று இருக்கிறது.
15:78   وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ‏ 
15:78. அடர்ந்த தோப்புகளில் வசித்தோரும் (மத்யன்வாசிகளும்) அநீதி இழைத்தனர்.
15:79   فَانتَقَمْنَا مِنْهُمْ‌ۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍؕ‏ 
15:79. அவர்களையும் தண்டித்தோம். அவ்விரண்டு(ஊர்களு)ம் (அனைவருக்கும்) தெரிந்த வழியில் தான் உள்ளன.
15:80   وَلَـقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَۙ‏ 
15:80. (ஸமூது எனும்) ஹிஜ்ர்வாசிகளும் தூதர்களைப் பொய்யர்களெனக் கருதினர்.
15:81   وَاٰتَيْنٰهُمْ اٰيٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَۙ‏ 
15:81. நமது சான்றுகளை அவர்களுக்கு வழங்கினோம். அவர்கள் அதைப் புறக்கணித்தனர்.
15:82   وَكَانُوْا يَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا اٰمِنِيْنَ‏ 
15:82. அவர்கள் மலைகளை வீடுகளாகக் குடைந்து அச்சமற்று இருந்தனர்.
15:83   فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ‏ 
15:83. அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.
15:84   فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَؕ‏ 
15:84. அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களைக் காப்பாற்றவில்லை.
15:85   وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ‌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيْلَ‏ 
15:85. வானங்களையும்,507 பூமியையும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றையும் தக்க காரணத்துடனேயே படைத்துள்ளோம். யுகமுடிவு நேரம்1 வந்தே தீரும். எனவே அழகிய முறையில் அவர்களை அலட்சியப்படுத்துவீராக!
15:86   اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏ 
15:86. உமது இறைவன் நன்கு படைப்பவன்; அறிந்தவன்.
15:87   وَلَـقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَـثَانِىْ وَالْـقُرْاٰنَ الْعَظِيْمَ‏ 
15:87. (முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.250
15:88   لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِيْنَ‏ 
15:88. அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக!251
15:89   وَقُلْ اِنِّىْۤ اَنَا النَّذِيْرُ الْمُبِيْنُ‌ۚ‏ 
15:90   كَمَاۤ اَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِيْنَۙ‏ 
15:91   الَّذِيْنَ جَعَلُوا الْـقُرْاٰنَ عِضِيْنَ‏ 
15:89, 90, 91. சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுத்து, குர்ஆனை414 (முந்தைய வேதத்தை)க் கூறு போட்டோர் மீது நாம் (வேதனையை) இறக்கியது போலவே (இவர்களுக்கும் இறக்குவோம். இந்த இறைச்செய்தி குறித்து) "நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!26
15:92   فَوَرَبِّكَ لَـنَسْــَٔلَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏ 
15:93   عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
15:92, 93. உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.26
15:94   فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏ 
15:94. உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
15:95   اِنَّا كَفَيْنٰكَ الْمُسْتَهْزِءِيْنَۙ‏ 
15:95. கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.
15:96   الَّذِيْنَ يَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ۚ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ 
15:96. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்கின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.
15:97   وَلَـقَدْ نَـعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ‏ 
15:97. அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.
15:98   فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَۙ‏ 
15:98. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!
15:99   وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ‏ 
15:99. உறுதியானது252 (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக!

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 42445