113.   அல் ஃபலக்

காலைப் பொழுது

மொத்த வசனங்கள் : 5

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

113:1   قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏ 
113:2   مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏ 
113:3   وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ 
113:4   وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏ 
113:5   وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ‏ 
113:1, 2, 3, 4, 5. அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,499 பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!357

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.