100.   அல் ஆதியாத்

வேகமாக ஓடும் குதிரைகள்

மொத்த வசனங்கள் : 11

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

100:1   وَالْعٰدِيٰتِ ضَبْحًا ۙ‏ 
100:2   فَالْمُوْرِيٰتِ قَدْحًا ۙ‏ 
100:3   فَالْمُغِيْرٰتِ صُبْحًا ۙ‏ 
100:4   فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۙ‏ 
100:5   فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۙ‏ 
100:1, 2, 3, 4, 5. மூச்சிறைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!379
100:6   اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ ۚ‏ 
100:6. மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
100:7   وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ ۚ‏ 
100:7. அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான்.
100:8. அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.
100:8   وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏ 
100:9   اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏ 
100:10   وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ‏ 
>
100:11   اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَٮِٕذٍ لَّخَبِيْرٌ‏ 
100:9, 10, 11. மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும்போது, உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும்போது, அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன் என்பதை அவன் அறிய வேண்டாமா?26

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.