93.    அல்லுஹா

முற்பகல்

மொத்த வசனங்கள் : 11

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

93:1   وَالضُّحٰىۙ‏ 
93:1. முற்பகல் மீது சத்தியமாக!379
93:2   وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏ 
93:2. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!379
93:3   مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏ 
93:3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.
93:4   وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ‏ 
93:4. இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.
93:5   وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ‏ 
93:5. (முஹம்மதே!) உமது இறைவன் பிறகு உமக்கு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.
93:6   اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏ 
93:6. உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?
93:7   وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏ 
93:7. உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்.81
93:8   وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ‏ 
93:8. உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
93:9   فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ‏ 
93:9. எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!
93:10   وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ‏ 
93:10. யாசிப்பவரை விரட்டாதீர்!
93:11   وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏ 
93:11. உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 47851