37.   அஸ் ஸாஃப்பாத்

அணி வகுப்போர்

மொத்த வசனங்கள் : 182

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

37:1   وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ‏ 
37:1. அணி அணியாய் நிற்போர் மீது சத்தியமாக!379
37:2   فَالزّٰجِرٰتِ زَجْرًا ۙ‏ 
37:2. கடுமையாக விரட்டுவோர் மீது சத்தியமாக!379
37:3   فَالتّٰلِيٰتِ ذِكْرًا ۙ‏ 
37:3. போதனையைக் கூறுவோர் மீது சத்தியமாக!379
37:4   اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ؕ‏ 
37:4. உங்கள் இறைவன் ஒருவனே.
37:5   رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ؕ‏ 
37:5. (அவன்) வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.335
37:6   اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ اۨلْكَوَاكِبِۙ‏ 
37:6. முதல் வானத்தை507 நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.
37:7   وَحِفْظًا مِّنْ كُلِّ شَيْطٰنٍ مَّارِدٍ‌ۚ‏ 
37:7. கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).307
37:8   لَّا يَسَّمَّعُوْنَ اِلَى الْمَلَاِ الْاَعْلٰى وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍۖ ‏ 
37:9   دُحُوْرًا  وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ  ۙ‏ 
37:10   اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ‏ 
37:8, 9, 10. (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும் பிரகாசமான தீப்பந்தம் அவர்களை விரட்டும்.307 அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு.26
37:11   فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَاؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ‏ 
37:11. இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது நாம் படைத்த(மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக! இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்503& 506 நாம் படைத்தோம்.368
37:12   بَلْ عَجِبْتَ وَيَسْخَرُوْنَ‏ 
37:12. உண்மையில் (இறைவனின் ஆற்றலை எண்ணி) நீர் ஆச்சரியப்படுகிறீர். இவர்களோ கேலி செய்கின்றனர்.
37:13   وَاِذَا ذُكِّرُوْا لَا يَذْكُرُوْنَ‏ 
37:13. இவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் படிப்பினை பெறுவதில்லை.
37:14   وَاِذَا رَاَوْا اٰيَةً يَّسْتَسْخِرُوْنَ‏ 
37:14. சான்றை இவர்கள் கண்டபோதும் கேலி செய்கின்றனர்.
37:15   وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‌ ۖ‌ۚ‏ 
37:15. "இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை''285 என்று இவர்கள் கூறுகின்றனர்.357
37:16   ءَاِذَا مِتْنَا وَكُـنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏ 
37:17   اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَؕ‏ 
37:16, 17. "நாங்கள் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாங்களும், முந்தைய எங்கள் முன்னோர்களும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' (என்று கேட்கின்றனர்).26
37:18   قُلْ نَعَمْ وَاَنْـتُمْ دٰخِرُوْنَ‌ۚ‏ 
37:18. ஆம்! நீங்கள் சிறுமைப்பட்டவர்கள்'' எனக் கூறுவீராக!
37:19   فَاِنَّمَا هِىَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ يَنْظُرُوْنَ‏ 
37:19. அது ஒரே ஒரு பெரும் சப்தம் தான். உடனே அவர்கள் காண்பார்கள்.
37:20   وَقَالُوْا يٰوَيْلَنَا هٰذَا يَوْمُ الدِّيْنِ‏ 
37:20. "எங்களுக்குக் கேடு தான்; இது தீர்ப்பு நாள்1'' என அப்போது கூறுவார்கள்.
37:21   هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‏ 
37:21. "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள்1 இதுவே'' (எனக் கூறப்படும்.)
37:22   اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏ 
37:23   مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ‏ 
37:22, 23. அநீதி இழைத்தோரையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!26
37:24   وَقِفُوْهُمْ‌ اِنَّهُمْ مَّسْـُٔـوْلُوْنَۙ‏ 
37:24. "அவர்கள் விசாரிக்கப்படுபவர்கள்; அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்!'' (என்று வானவர்களுக்குக் கூறப்படும்.)
37:25   مَا لَـكُمْ لَا تَنَاصَرُوْنَ‏ 
37:25. "உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்?'' (என்று கேட்கப்படும்.)
37:26   بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ‏ 
37:26. அவ்வாறு நடக்காது. இன்று1 அவர்கள் சரணடைந்தவர்கள்.
37:27   وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏ 
37:27. அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
37:28   قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْيَمِيْنِ‏ 
37:28. "நீங்களே எங்கள் மீது ஆதிக்கம் செய்வோராக இருந்தீர்கள்'' என்று (சிலர்) கூறுவார்கள்.
37:29   قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‌ۚ‏ 
37:29. "இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை'' என்று (மற்றும் சிலர்) பதிலளிப்பார்கள்.
37:30   وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنِ‌ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ‏ 
37:30. உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள்.
37:31   فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ اِنَّا لَذَآٮِٕقُوْنَ‏ 
37:31. எனவே எங்கள் இறைவனின் கட்டளை எங்களுக்கு எதிராக உறுதியாகி விட்டது. (அதன் பலனை) நாங்கள் அனுபவிக்கிறோம்.
37:32   فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ‏ 
37:32. "நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நாங்களும் வழிகெட்டவர்களாக இருந்தோம்'' (என்றும் கூறுவார்கள்)
37:33   فَاِنَّهُمْ يَوْمَٮِٕذٍ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ‏ 
37:33. அந்நாளில் அவர்கள் வேதனையில் பங்காளிகளாக இருப்பார்கள்.
37:34   اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏ 
37:34. குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம்.
37:35   اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِيْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ يَسْتَكْبِرُوْنَۙ‏ 
37:35. "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.
37:36   وَيَقُوْلُوْنَ اَٮِٕنَّا لَتٰرِكُوْۤا اٰلِهَـتِنَا لِشَاعِرٍ مَّجْـنُوْنٍ ؕ‏ 
37:36. "பைத்தியக்காரக்468 கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா?'' என்று கேட்கின்றனர்.
37:37   بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِيْنَ‏ 
37:37. அவ்வாறில்லை! அவர் உண்மையையே கொண்டு வந்துள்ளார். தூதர்களை உண்மைப்படுத்துகிறார்.
37:38   اِنَّكُمْ لَذَآٮِٕقُوا الْعَذَابِ الْاَلِيْمِ‌ۚ‏ 
37:38. நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிப்பவர்கள்.
37:39   وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ‏ 
37:39. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
37:40   اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏ 
37:40. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.
37:41   اُولٰٓٮِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌۙ‏ 
37:42   فَوَاكِهُ‌ۚ وَهُمْ مُّكْرَمُوْنَۙ‏ 
37:43   فِىْ جَنّٰتِ النَّعِيْمِۙ‏ 
37:41, 42, 43. இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.26
37:44   عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ‏ 
37:44. கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.
37:45   يُطَافُ عَلَيْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ‏ 
37:45. மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும்.
37:46   بَيْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيْنَ‌ ۖ‌ۚ‏ 
37:46. அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும்.
37:47   لَا فِيْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ‏ 
37:47. அதில் எந்தக் கேடும் இல்லை. அவர்கள் மதி மயக்கப்படவும் மாட்டார்கள்.
37:48   وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِيْنٌۙ‏ 
37:49   كَاَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ‏ 
37:48, 49. அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள்8 மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள்.26
37:50   فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏ 
37:50. அவர்களில் ஒருவர் மற்றவரை விசாரித்துக் கொள்வார்கள்.
37:51   قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ اِنِّىْ كَانَ لِىْ قَرِيْنٌۙ‏ 
37:52   يَقُوْلُ اَءِ نَّكَ لَمِنَ الْمُصَدِّقِيْنَ‏ 
37:53   ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِيْنُوْنَ‏ 
37:51, 52, 53. "எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?'' என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார்.26
37:54   قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ‏ 
37:54. நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா என்று (இறைவன்) கேட்பான்.
37:55   فَاطَّلَعَ فَرَاٰهُ فِىْ سَوَآءِ الْجَحِيْمِ‏ 
37:55. அவர் எட்டிப் பார்க்கும்போது அவனை நரகின் மத்தியில் காண்பார்.
37:56   قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَـتُرْدِيْنِۙ‏ 
37:56. "அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்'' என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார்.
37:57   وَلَوْلَا نِعْمَةُ رَبِّىْ لَـكُنْتُ مِنَ الْمُحْضَرِيْنَ‏ 
37:57. எனது இறைவனின் அருட்கொடை இல்லாதிருந்தால் (நரகத்திற்கு) கொண்டு வரப்பட்டோரில் நானும் ஆகியிருப்பேன்.
37:58   اَفَمَا نَحْنُ بِمَيِّتِيْنَۙ‏ 
37:59   اِلَّا مَوْتَتَـنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏ 
37:58, 59. நமது முதல் மரணத்தைத் தவிர, நாம் மரணிப்போர் இல்லையோ? நாம் தண்டிக்கப்படுவோரும் இல்லையோ? (என்றும் அவனிடம் கேட்பார்.)26
37:60   اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏ 
37:60. இதுவே மகத்தான வெற்றி.
37:61   لِمِثْلِ هٰذَا فَلْيَعْمَلِ الْعٰمِلُوْنَ‏ 
37:61. செயல்படுவோர் இது போன்றதற்காகவே செயல்படட்டும்.
37:62   اَذٰ لِكَ خَيْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ‏ 
37:62. இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா?
37:63   اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِيْنَ‏ 
37:63. அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம்.
37:64   اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىْۤ اَصْلِ الْجَحِيْمِۙ‏ 
37:64. அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம்.
37:65   طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْنِ‏ 
37:65. அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.
37:66   فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمٰلِــُٔــوْنَ مِنْهَا الْبُطُوْنَ ؕ‏ 
37:66. அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவர். அதிலிருந்து வயிறுகளை நிரப்புவர்.
37:67   ثُمَّ اِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيْمٍ‌ۚ‏ 
37:67. கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு.
37:68   ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَا۟اِلَى الْجَحِيْمِ‏ 
37:68. மேலும் அவர்கள் மீளுமிடம் நரகமே.
37:69   اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّيْنَۙ‏ 
37:69. அவர்கள் தமது முன்னோர்களை வழிகெட்டவர்களாகவே கண்டனர்.
37:70   فَهُمْ عَلٰٓى اٰثٰرِهِمْ يُهْرَعُوْنَ‏ 
37:70. அவர்களின் அடிச்சுவடுகளிலேயே இவர்களும் இழுக்கப்படுகின்றனர்.
37:71   وَلَـقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِيْنَۙ‏ 
37:71. முன்னோர்களில் அதிகமானோர் இவர்களுக்கு முன் வழிகெட்டிருந்தனர்.
37:72   وَلَقَدْ اَرْسَلْنَا فِيْهِمْ مُّنْذِرِيْنَ‏ 
37:72. அவர்களிடம் எச்சரிப்போரை அனுப்பினோம்.
37:73   فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَۙ‏ 
37:74   اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏ 
37:73, 74. "தேர்வு செய்யப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர எச்சரிக்கப்பட்டோரின் முடிவு எவ்வாறு அமைந்தது'' என்று கவனிப்பீராக!26
37:75   وَلَقَدْ نَادٰٮنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِيْبُوْنَ  ۖ‏ 
37:75. நூஹ் நம்மிடம் பிரார்த்தித்தார். நாம் ஏற்றுக் கொள்வோரில் சிறந்தவராவோம்.
37:76   وَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ  ۖ‏ 
37:76. அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
37:77   وَجَعَلْنَا ذُرِّيَّتَهٗ هُمُ الْبٰقِيْنَ  ۖ‏ 
37:77. அவரது சந்ததிகளையே எஞ்சியோராக ஆக்கினோம்.
37:78   وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ  ۖ‏ 
37:78. பின் வருவோரிடம் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
37:79   سَلٰمٌ عَلٰى نُوْحٍ فِى الْعٰلَمِيْنَ‏ 
37:79. அகிலத்தாரில் நூஹ் மீது ஸலாம்159 உண்டாகும்!
37:80   اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
37:80. நல்லோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
37:81   اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏ 
37:81. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியாராக இருந்தார்.
37:82   ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‏ 
37:82. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
37:83   وَاِنَّ مِنْ شِيْعَتِهٖ لَاِبْرٰهِيْمَ‌ۘ‏ 
37:83. அவரது வழித் தோன்றலில் உள்ளவரே இப்ராஹீம்.
37:84   اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِيْمٍ‏ 
37:84. அவர் தமது இறைவனிடம் தூய உள்ளத்துடன் வந்ததை நினைவூட்டுவீராக!
37:85   اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ‌ۚ‏ 
37:85. "எதை வணங்குகிறீர்கள்?'' என்று தமது தந்தையிடமும் தமது சமூகத்தாரிடமும் கூறியதை நினைவூட்டுவீராக!
37:86   اَٮِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِيْدُوْنَؕ‏ 
37:86. அல்லாஹ்வையன்றி கற்பனை செய்யப்பட்ட கடவுள்களையா நாடுகிறீர்கள்?
37:87   فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ‏ 
37:87. அகிலத்தின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன? (என்று கேட்டார்.)
37:88   فَنَظَرَ نَظْرَةً فِى النُّجُوْمِۙ‏ 
37:88. பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார்.
37:89   فَقَالَ اِنِّىْ سَقِيْمٌ‏ 
37:89. "நான் நோயாளி'' எனக் கூறினார்.336
37:90   فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِيْنَ‏ 
37:90. அவரை விட்டு விட்டு அவர்கள் சென்றனர்.
37:91   فَرَاغَ اِلٰٓى اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ‌ۚ‏ 
37:92   مَا لَـكُمْ لَا تَنْطِقُوْنَ‏ 
37:91, 92. அவர்களின் கடவுள்களிடம் சென்று "சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்.26
37:93   فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِالْيَمِيْنِ‏ 
37:93. பின்னர் அவற்றிடம் (நெருங்கிச்) சென்று பலமாக அடித்தார்.473
37:94   فَاَقْبَلُوْۤا اِلَيْهِ يَزِفُّوْنَ‏ 
37:94. அவர்கள் அவரை நோக்கி விரைந்து வந்தனர்.
37:95   قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَۙ‏ 
37:96   وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ‏ 
37:95, 96. நீங்கள் செதுக்கிக் கொண்டதை வணங்குகிறீர்களா? அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்தவற்றையும் படைத்தான் என்றார்.26
37:97   قَالُوا ابْنُوْا لَهٗ بُنْيَانًا فَاَلْقُوْهُ فِى الْجَحِيْمِ‏ 
37:97. இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்! என்று அவர்கள் கூறினர்.
37:98   فَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِيْنَ‏ 
37:98. அவருக்கு எதிராகச் சதி செய்ய நினைத்தனர். அவர்களைத் தாழ்ந்தோராக்கி விட்டோம்.
37:99   وَقَالَ اِنِّىْ ذَاهِبٌ اِلٰى رَبِّىْ سَيَهْدِيْنِ‏ 
37:99. "நான் என் இறைவனிடம் செல்கிறேன். அவன் எனக்கு வழிகாட்டுவான்'' என்றார்.
37:100   رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏ 
37:100. என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
37:101   فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ‏ 
37:101. அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஆண் குழந்தை (இஸ்மாயீல்) பற்றி நற்செய்தி கூறினோம்.
37:102   فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏ 
37:102. அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்தபோது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல்455 கனவில்122 கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று (இப்ராஹீம்) கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.
37:103   فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ‌ۚ‏ 
37:104   وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏ 
37:105   قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ‌ ‌ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
37:103, 104, 105. இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்தியபோது, "இப்ராஹீமே! அக்கனவை122 நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.26
37:106   اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ‏ 
37:106. இது தான் மகத்தான சோதனை.
37:107   وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ‏ 
37:107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.
37:108   وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏ 
37:108. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
37:109   سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏ 
37:109. இப்ராஹீமின் மீது ஸலாம்159 உண்டாகும்!
37:110   كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
37:110. நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.
37:111   اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏ 
37:111. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
37:112   وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏ 
37:112. நபியும், நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம்.
37:113   وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَ‌ؕ وَ مِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ‌‏ 
37:113. அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியம் செய்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் நல்லோரும் உள்ளனர். தெளிவாக தமக்கே தீங்கிழைத்தோரும் உள்ளனர்.
37:114   وَلَقَدْ مَنَنَّا عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ‌ۚ‏ 
37:114. மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் அருள் புரிந்தோம்.
37:115   وَنَجَّيْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ‌ۚ‏ 
37:115. அவ்விருவரையும் அவர்களது சமூகத்தாரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
37:116   وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ‌ۚ‏ 
37:116. அவர்களுக்கு உதவினோம். எனவே அவர்களே வெற்றி பெற்றனர்.
37:117   وَاٰتَيْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِيْنَ‌ۚ‏ 
37:117. அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை வழங்கினோம்.
37:118   وَهَدَيْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ‌ۚ‏ 
37:118. அவ்விருவருக்கும் நேரான வழியைக் காட்டினோம்.
37:119   وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى الْاٰخِرِيْنَۙ‏ 
37:119. பின்வருவோரில் அவ்விருவரின் புகழை நிலைக்கச் செய்தோம்.
37:120   سَلٰمٌ عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ‏ 
37:120. மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் ஸலாம்159 உண்டாகும்!
37:121   اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
37:121. நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்.
v>
37:122   اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏ 
37:122. அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட நமது அடியார்கள்.
37:123   وَاِنَّ اِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ 
37:123. இல்யாஸும் தூதர்களில் ஒருவர்.
37:124   اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ‏ 
37:125   اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخٰلِقِيْنَۙ‏ 
37:126   اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏ 
37:127   فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ‏ 
37:124, 125, 126, 127. "அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு 'பஅல்' எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா? என்று தமது சமூகத்தாரிடம் அவர் கூறியபோது அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். அவர்கள் (நம்மிடம்) கொண்டு வரப்படுவார்கள்.26
37:128   اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏ 
37:128. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.
37:129   وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَۙ‏ 
37:129. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
37:130   سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏ 
37:130. இல்யாஸீன் மீது ஸலாம்159 உண்டாகும்!
37:131   اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 
37:131. நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
37:132   اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏ 
37:132. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
37:133   وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ 
37:133. லூத்தும் தூதர்களில் ஒருவர்.
37:134   اِذْ نَجَّيْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِيْنَۙ‏ 
37:135   اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‏ 
37:134, 135. அவரையும், (அழிவோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றியதை நினைவூட்டுவீராக!26
37:136   ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ‏ 
37:136. பின்னர் மற்றவர்களை அடியோடு அழித்தோம்.
37:137   وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَيْهِمْ مُّصْبِحِيْنَۙ‏ 
37:138   وَبِالَّيْلِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‌‏ 
37:137, 138. காலை நேரத்திலும், இரவிலும் அவர்களைக் கடந்து செல்கிறீர்கள். விளங்க மாட்டீர்களா?26
37:139   وَاِنَّ يُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ 
37:139. யூனுஸ் தூதர்களில் ஒருவர்.
37:140   اِذْ اَبَقَ اِلَى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ‏ 
37:141   فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِيْنَ‌ۚ‏ 
37:140, 141. நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடியபோது, அவர்கள் (கப்பலில் இருந்து யாரை வெளியேற்றுவது என்று) சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார்.26
37:142   فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ‏ 
37:142. இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.395
37:143   فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَۙ‏ 
37:144   لَلَبِثَ فِىْ بَطْنِهٖۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‌ۚ‏ 
37:143, 144. அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.26
37:145   فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِيْمٌ‌ۚ‏ 
37:145. அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்.
37:146   وَاَنْۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَّقْطِيْنٍ‌ۚ‏ 
37:146. அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம்.
37:147   وَاَرْسَلْنٰهُ اِلٰى مِائَةِ اَلْفٍ اَوْ يَزِيْدُوْنَ‌ۚ‏ 
37:147. அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக452 அனுப்பினோம்.
37:148   فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍؕ‏ 
37:148. அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.
37:149   فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَۙ‏ 
37:149. "உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா?'' என்று இவர்களிடம் கேட்பீராக!
37:150   اَمْ خَلَقْنَا الْمَلٰٓٮِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ‏ 
37:150. வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும்போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
37:151   اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَيَقُوْلُوْنَۙ‏ 
37:152   وَلَدَ اللّٰهُۙ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏ 
37:151, 152. கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள்.26
37:153   اَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِيْنَؕ‏ 
37:153. ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா?
37:154   مَا لَـكُمْ كَيْفَ تَحْكُمُوْنَ‏ 
37:154. உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
37:155   اَفَلَا تَذَكَّرُوْنَ‌ۚ‏ 
37:155. சிந்திக்க மாட்டீர்களா?
37:156   اَمْ لَـكُمْ سُلْطٰنٌ مُّبِيْنٌۙ‏ 
37:156. அல்லது உங்களுக்குத் தெளிவான சான்று உள்ளதா?
37:157   فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 
37:157. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!
37:158   وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ‌ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ‏ 
37:158. ஜின்களுக்கும், அவனுக்குமிடையே வம்சாவளி உறவை அவர்கள் கற்பனை செய்து விட்டனர். தாம் (இறைவன் முன்) நிறுத்தப்படுவோம் என்பதை ஜின்கள் அறிந்து வைத்துள்ளன.
37:159   سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ‏ 
37:159. அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10
37:160   اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏ 
37:160. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.
37:161   فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَۙ‏ 
37:162   مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ بِفٰتِنِيْنَۙ‏ 
37:163   اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيْمِ‏ 
37:161, 162, 163. நீங்களும், நீங்கள் வணங்குபவைகளும் நரகத்தில் கருகவிருப்பவனைத் தவிர (மற்றவர்களை) வழிகெடுக்க முடியாது.26
37:164   وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌۙ‏ 
37:165   وَّاِنَّا لَـنَحْنُ الصَّآفُّوْنَ‌ۚ‏ 
37:166   وَاِنَّا لَـنَحْنُ الْمُسَبِّحُوْنَ‏ 
37:164, 165, 166. எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள்.279 (என்று வானவர்கள் கூறுவார்கள்)26
37:167   وَاِنْ كَانُوْا لَيَقُوْلُوْنَۙ‏ 
37:168   لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ 
37:169   لَـكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏ 
37:167, 168 169. முன்னோர் வழியாக எங்களுக்கு அறிவுரை கிடைத்திருக்குமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களாக ஆகியிருப்போம் என்று அவர்கள் (இணைகற்பிப்போர்) கூறிக் கொண்டு இருந்தார்கள்.26
37:170   فَكَفَرُوْا بِهٖ‌ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ 
37:170. இப்போது அதை மறுக்கின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.
37:171   وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِيْنَ ‌ۖ‌ۚ‏ 
37:171. நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது.
37:172   اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ‏ 
37:172. அவர்களே உதவி செய்யப்படுவார்கள்.
37:173   وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ‏ 
37:173. நமது படையினரே வெல்பவர்கள்.
37:174   فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ‏ 
37:174. குறிப்பிட்ட காலம் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக!
<
37:175   وَاَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُوْنَ‏ 
37:175. அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக! அவர்களும் பின்னர் பார்ப்பார்கள்.
37:176   اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ‏ 
37:176. நம்முடைய வேதனையையா அவசரமாகத் தேடுகின்றனர்?
37:177   فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِيْنَ‏ 
37:177. அது அவர்களின் முற்றத்தில் இறங்கி விட்டால் எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகி விடும்.
37:178   وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ‏ 
37:178. குறிப்பிட்ட நேரம் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக!
37:179   وَّاَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُوْنَ‏ 
37:179. பார்த்துக் கொண்டிருப்பீராக! அவர்களும் பின்னர் பார்ப்பார்கள்.
37:180   سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ‌ۚ‏ 
37:180. கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.10
37:181   وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَ‌ۚ‏ 
37:181. தூதர்கள் மீது ஸலாம்159 உண்டாகும்!
37:182   وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‌‏ 
37:182. அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44463