69.    அல் ஹாக்கா

அந்த உண்மை நிகழ்ச்சி

மொத்த வசனங்கள் : 52

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

69:1   اَلْحَـآقَّةُ ۙ‏ 
69:1. அந்த உண்மை நிகழ்ச்சி!1
69:2   مَا الْحَـآقَّةُ‌ ۚ‏ 
69:2. உண்மை நிகழ்ச்சி என்றால் என்ன?
69:3   وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحَــآقَّةُ ؕ‏ 
69:3. (முஹம்மதே!) உண்மை நிகழ்ச்சி எதுவென உமக்கு எப்படித் தெரியும்?
69:4   كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌۢ بِالْقَارِعَةِ‏ 
69:4. ஸமூது மற்றும் ஆது சமுதாயத்தினர் திடுக்கத்தை ஏற்படுத்தும் அந்நிகழ்ச்சியைப் பொய்யெனக் கருதினர்.
69:5   فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِيَةِ‏ 
69:5. ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:6   وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍۙ‏ 
69:6. ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமையான கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர்.
69:7   سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ‌ ۚ‏ 
69:7. அதை ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர்.
69:8   فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ‏ 
69:8. அவர்களில் எஞ்சியோரை நீர் காண்கிறீரா?
69:9   وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَـاطِئَةِ‌ۚ‏ 
69:9. ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்சென்றோரும் தலைகீழாகப் புரட்டப்பட்ட (லூத் நபியுடைய சமுதாயமான) ஊராரும் தீமைகளைச் செய்தனர்.
69:10   فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِيَةً‏ 
69:10. தமது இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். எனவே அவர்களை அவன் கடுமையாகத் தண்டித்தான்.
69:11   اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِى الْجَارِيَةِ ۙ‏ 
69:11. (நூஹ் நபியின் காலத்தில்) தண்ணீர் எல்லை மீறியபோது உங்களை நாம் கப்பலில் சுமத்தினோம்.
69:12   لِنَجْعَلَهَا لَـكُمْ تَذْكِرَةً وَّتَعِيَهَاۤ اُذُنٌ وَّاعِيَةٌ‏ 
69:12. அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்கும்,222 கேட்கும் காதுகள் கேட்டு பேணி நடக்கவும் (இவ்வாறு செய்தோம்)
69:13   فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۙ‏ 
69:14   وَحُمِلَتِ الْاَرْضُ وَ الْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۙ‏ 
69:15   فَيَوْمَٮِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏ 
69:13, 14, 15. ஒரே ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாக தூள் தூளாக்கப்படும்போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும்.26
69:16   وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِىَ يَوْمَٮِٕذٍ وَّاهِيَةٌ ۙ‏ 
69:16. வானம்507 பிளந்து விடும். அன்று அது உறுதியற்றதாக இருக்கும்.
69:17   وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ‌ؕ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَٮِٕذٍ ثَمٰنِيَةٌ ؕ‏ 
69:17. வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை488 தமக்கு மேலே எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.
69:18   يَوْمَٮِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ‏ 
69:18. அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது.
69:19   فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْ‌ۚ‏ 
69:20   اِنِّىْ ظَنَنْتُ اَنِّىْ مُلٰقٍ حِسَابِيَهْ‌ۚ‏ 
69:19, 20. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் "வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்'' எனக் கூறுவார்.26
69:21   فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍۙ‏ 
69:22   فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏ 
69:21, 22. அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார்.26
69:23   قُطُوْفُهَا دَانِيَةٌ‏ 
69:23. அதன் கனிகள் தாழ்ந்திருக்கும்.
69:24   كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــًٔا ۢ بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏ 
69:24. சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)
69:25   وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ  ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْ‌ۚ‏ 
69:26   وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْ‌ۚ‏ 
69:27   يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ‌ ۚ‏ 
69:28   مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْۚ‏ 
69:29   هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْ‌ۚ‏ 
69:25, 26, 27, 28, 29. புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான்.26
69:30   خُذُوْهُ فَغُلُّوْهُ ۙ‏ 
69:30. அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்!
69:31   ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُ ۙ‏ 
69:31. பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்!
69:32   ثُمَّ فِىْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ؕ‏ 
69:32. பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.)
69:33   اِنَّهٗ كَانَ لَا يُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِيْمِۙ‏ 
69:33. அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.
69:34   وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏ 
69:34. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.
69:35   فَلَيْسَ لَـهُ الْيَوْمَ هٰهُنَا حَمِيْمٌۙ‏ 
69:35. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை.
69:36   وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِيْنٍۙ‏ 
69:36. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை.
69:37   لَّا يَاْكُلُهٗۤ اِلَّا الْخٰطِئُوْنَ‏ 
69:37. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.
69:38   فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَۙ‏ 
69:39   وَمَا لَا تُبْصِرُوْنَۙ‏ 
69:38, 39. நீங்கள் பார்ப்பதன் மீதும், நீங்கள் பார்க்காததன் மீதும் சத்தியம் செய்கிறேன்.26
69:40   اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۚ ۙ‏ 
69:40. இது மரியாதைக்குரிய தூதரின் கூற்றாகும்.
69:41   وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ‌ؕ قَلِيْلًا مَّا تُؤْمِنُوْنَۙ‏ 
69:41. இது கவிஞனின் கூற்று அல்ல. குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.
69:42   وَلَا بِقَوْلِ كَاهِنٍ‌ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَؕ‏ 
69:42. இது சோதிடனின் கூற்றும் அல்ல. குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
69:43   تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏ 
69:43. இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது.
69:44   وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ‏ 
69:45   لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ‏ 
69:44, 45. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.26
69:46   ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَ  ۖ‏ 
69:46. பின்னர் இவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.
69:47   فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَ‏ 
69:47. உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.
69:48   وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِيْنَ‏ 
69:48. இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை.
69:49   وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِيْنَ‏ 
69:49. உங்களில் பொய்யெனக் கருதுவோர் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
69:50   وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَى الْكٰفِرِيْنَ‏ 
69:50. அது (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நட்டமாகும்.
69:51    وَاِنَّهٗ لَحَـقُّ الْيَقِيْنِ‏ 
69:51. இது உறுதியான உண்மை.
69:52   فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ‏ 
69:52. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44471