Home | அத்தியாயம் அட்டவணை |
 
ஏக இறைவனின் திருப்பெயரால்..


நட்சத்திர - Tamil Quran - தமிழ் குர்ஆன் தேட
நீங்கள் நட்சத்திர என்ற வார்த்தையை தேடியுள்ளீர்கள்6:76   فَلَمَّا جَنَّ عَلَيْهِ الَّيْلُ رَاٰ كَوْكَبًا ‌ۚ قَالَ هٰذَا رَبِّىْ‌ ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الْاٰفِلِيْنَ‏ 
6:76. இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்தபோது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.
52:49   وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ‏ 
52:49. இரவின் ஒரு பகுதியிலும், நட்சத்திரங்கள் மறையும் காலை நேரத்திலும் அவனைத் துதிப்பீராக!
56:75   فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِۙ‏‏ 
56:75. நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
37:6   اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ اۨلْكَوَاكِبِۙ‏ 
37:6. முதல் வானத்தை507 நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.
22:18   اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَسْجُدُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَ الْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِيْرٌ مِّنَ النَّاسِ‌ ؕ وَكَثِيْرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ‌ؕ وَمَنْ يُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ‌ؕ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يَشَآءُ ۩  ؕ‏ 
22:18. "வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா?396 இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.
7:54   اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ 
7:54. உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும்,507 பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511 இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.
6:97   وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِىْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏ 
6:97. தரை மற்றும் கடலின் இருள்களில்303 நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.
82:2   وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ‏ 
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும்போது,
16:15   وَاَلْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَاَنْهٰرًا وَّسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ‏ 
16:16   وَعَلٰمٰتٍ‌ؕ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُوْنَ‏ 
16:15,16. பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும்,248 நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.26
81:2   وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۙ‏ 
81:2. நட்சத்திரங்கள் உதிரும்போது,
81:15   فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِۙ‏ 
81:16   الْجَوَارِ الْكُنَّسِۙ‏ 
81:15, 16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறைகின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.26
15:16   وَلَـقَدْ جَعَلْنَا فِى السَّمَآءِ بُرُوْجًا وَّزَيَّـنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ‏ 
15:16. வானத்தில்507 நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம்.
24:35   اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌ ؕ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ ؕ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏ 
24:35. அல்லாஹ், வானங்களுக்கும்507 பூமிக்கும் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படாவிட்டாலும் அதன் எண்ணெய்யும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.302
12:4   اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏ 
12:4. "என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்)122 கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்''11 என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
85:1   وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِۙ‏ 
85:1. நட்சத்திரங்களுடைய வானத்தின்507 மீது சத்தியமாக!379
53:1   وَالنَّجْمِ اِذَا هَوٰىۙ‏ 
53:1. நட்சத்திரம் மறையும்போது அதன் மேல் ஆணை!
16:12   وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌۢ بِاَمْرِهٖؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَۙ‏ 
16:12. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
86:1   وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ‏ 
86:1. வானத்தின்507 மீதும், தாரிக்202 மீதும் சத்தியமாக!379
77:8   فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏ 
77:8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும்போது,
37:88   فَنَظَرَ نَظْرَةً فِى النُّجُوْمِۙ‏ 
37:88. பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார்.
25:61   تَبٰـرَكَ الَّذِىْ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيْرًا‏ 
25:61. வானத்தில்507 நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.
86:3   النَّجْمُ الثَّاقِبُۙ‏ 
86:3. அது ஒளி வீசும் நட்சத்திரம்.

1