ஒரு இறைத்தூதர் எந்த மக்களுக்கு அனுப்பப்படுகிறாரோ அவர் அந்த மக்கள் பேசும் மொழியை அறிந்தவராகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராகவும் இருப்பார் என்று இவ்வசனங்கள் (14:4, 19:97, 44:58) கூறுகின்றன.
இதற்குக் காரணம் அந்தத் தூதர் தனக்கு வழங்கப்பட்ட வேதத்தை அம்மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்பது தான். வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பதோ...
இவ்வசனத்தில் (33:72) மனிதனுக்கு மட்டும் ஒரு அமானிதம் - முறையாகப் பராமரித்து திரும்ப ஒப்படைத்தல் - வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்ன என்று குர்ஆனில் ஏனைய இடங்களிலோ, அல்லது நபிமொழிகளிலோ சுட்டிக்காட்டப்படவில்லை. ஆயினும் மனிதர்களுக்கும் ஏனைய அனைத்துப் படைப்பினங்களுக்கும் உள்ள வித்தி...
இவ்வசனங்கள் 2:61, 3:112, 5:14, 5:64, 7:167 யூதர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிகளை அல்லது இழிவைப் பேசுகின்றன.
அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டதாக 3:112 வசனம் கூறுகிறது.
இன்றைக்கு யூதர்கள் செல்வச் செழிப்புடன் உள்ளதால் இவ்வசனம் கூறுவது போல் நிலைமை இல்லையே என்று சிலர் நினைக்கலாம். அதற்கு இவ்வசனத்திலேயே பதில் உள்ளது.
...
இவ்வசனங்களில் (14:48, 21:104, 39:67) வானம் பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு வானமும், வேறு பூமியும் படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அப்படியானால் சொர்க்கமும் நரகமும் அழிக்கப்படுமா என்ற சந்தேகம் எழலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின்போதும், இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப்...
பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று இவ்வசனங்களில் (15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) அல்லாஹ் கூறுகிறான்.
ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.
இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந...
நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றைச் சான்றாகக் கொண்டு "மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்; எனவே அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம்; பிரார்த்திக்கலாம்'' என்று சிலர் வாதிடுகின்றனர்.
அற்புதங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வசனங்கள் (40:78, 13:38, 14:11, 3...
இரண்டு நபர்களுக்கு மத்தியில் யார் பொய்யர் என்ற பிரச்சினை வரும்போது இரு நபர்களும் தத்தமது மனைவி மக்களுடன் ஒரு இடத்தில் கூட வேண்டும். 'இறைவா இதில் நான் சொல்வதே உண்மை. நான் பொய் சொல்லி இருந்தால் என் மீதும், என் மனைவி மக்கள் மீதும் உன் சாபம் உண்டாகட்டும்' என்று இருவரும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். இதுதான் இஸ்லாத்தில் முபாஹலா எனப்படுகிறது.
...