இவ்வசனத்தில் (54:2) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்...
இவ்வசனத்தில் தாரிக் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டுள்ளது. தாரிக் என்பது என்ன என்றும் அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
நட்சத்திரங்களில் அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும் விடிவெள்ளியைத் தான் தாரிக் என்று சொல்வார்கள்...
திருக்குர்ஆனில் ஒளியைப் பற்றிக் கூறும்போது, அனைத்து இடங்களிலும் ஒளி என்று ஒருமையாகக் கூறப்படுகிறது.
ஆனால் இருளைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் 'இருள்கள்' என்று பன்மையாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
2:17, 2:19, 2:20, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 10:27, 13:16, 14:1, 14:5, 17:78, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11 இவையே அந்த வசனங்களாகும்.
...
சிலர் "கப்ர் (மண்ணறை) வாழ்க்கை என்பது கிடையாது'' என வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடுபவர்கள் தங்கள் வாதத்துக்குச் சான்றாக இவ்வசனங்களை (36:51, 52) காட்டுகின்றனர்.
"எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்? என்று கேட்டுக் கொண்டே தீயவர்கள் எழுவார்கள்'' என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இவ்வாறு எழுப்பப்படுவது குறித்து அவர்கள் கைசேதம் அ...
இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.
தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நா...
இவ்வசனத்தில் (74:30) "அதன் மீது 19 பேர் உள்ளனர்'' என்று கூறப்படுவது நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறது. இதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் குழப்பமோ, சந்தேகமோ இல்லை.
ஆனால் சமீப காலத்தில் வாழ்ந்து, சுட்டுக் கொல்லப்பட்ட ரஷாத் கலீஃபா என்பவன் இதற்குப் புது விளக்கம் என்ற பெயரில் உளறினான். "இந்த உளறலைக் கண்டுப...
இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) மனிதனின் துவக்க நிலையைச் சொல்லும்போது அலக், அலக்கத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன.
இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்று இதற்குப் பொருள் உண்டு.
இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள ...