Home | அத்தியாயம் அட்டவணை |
 
ஏக இறைவனின் திருப்பெயரால்..











பாடம் : 1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு துவங்கிற்று?
1. `செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

Book : 1

2. ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், `இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?` எனக் கேட்டதற்கு, `சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்` என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்` என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும்,
"கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா(ரலி) கூறினார்.

Book :1

3. ஆயிஷா(ரலி) கூறினார்.
"நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, `ஓதும்` என்றார். அதற்கவர்கள் `நான் ஓதத் தெரிந்தவனில்லையே!` என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.
"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் `ஓதும்` என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் `ஓதும்` என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு,
`படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை `அலக்`கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்` என்றார்." மேலும், ஆயிஷா(ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள் `அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்` என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் `வராக`விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார்.
`வராக` அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா(ரலி), `என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்` என்றார்கள். அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், `என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?` எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி(ஸல்) அவர்களிடம்) `இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய `நாமூஸ்` (ஜிப்ரீல்) ஆவார்` என்று கூறிவிட்டு, `உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!` என்றும் அங்கலாய்த்தார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், `மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?` என்று கேட்டார்கள். அதற்கவர்கள் `ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்` என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று.

Book :1

4. `நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது, `போர்வை போர்த்தியவரே எழும்! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும்!` (திருக்குர்ஆன் 74:01) என்பது தொடங்கி `அசுத்தங்களைவிட்டு ஒதுங்கி விடும்!` என்பது வரை ஐந்து வசனங்களை இறைவன் அருளினான்" என் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றிக் கூறும்போது ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அதன் பின்னர் வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அடிக்கடி தொடர்ந்து வரலாயிற்று என்றும் அவர் கூறினார்.

Book :1

5. அவரசப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள்" (திருக்குர்ஆன் 75:16) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கும்போது, `நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது அவர்களின் உதடுகளை அவர்கள் அசைப்பதன் மூலம் புலனாயிற்று. `வஹீ (இறைச்செய்தி)யை (மனனம் செய்ய) அவசரப்பட்டு உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நாவின் மூலம்) ஓத வைப்பதும் நம்முடைய பொறுப்பாகும். எனவே நாம் அதனைச் செவி தாழ்த்திக் கேட்பீராக - பின்னர் நீர் அதனை ஓதும்படிச் செய்வதும் நம்முடைய பொறுப்பாகும்" (திருக்குர்ஆன் 75:16-19) என்ற வசனங்களை அப்போது அல்லாஹ் அருளினான்` என்று கூறிவிட்டு, `நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு உதடுகளை அசைத்தது போன்று அசைக்கிறேன்` என்று சொல்லித் தங்கள் இரண்டு உதடுகளையும் இப்னு அப்பாஸ்(ரலி) அசைத்துக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸயீது இப்னு ஜுபைர் அறிவித்தபோது, `இப்னு அப்பாஸ்(ரலி) தங்களின் இரண்டு உதடுகளையும் அசைத்தது போன்று அசைக்கிறேன்` என்று கூறி அசைத்துக் காட்டினார்கள்.
மேலும், இப்னு அப்பாஸ் தொடர்ந்து,
`அதன் பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வரும்போது (அவர்கள் ஓதுவதை) செவி தாழ்த்திக் கேட்பதை வழக்கமாக்கினார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களும் ஓதினார்கள்" என ஸயீது இப்னு ஜுபைர் கூறினார்.

Book :1

6. `நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book :1

7. (குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக்கூறினார்.
அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, (எங்களிடம்) மன்னர் `தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?` எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) `அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்` என்று ஆணையிட்டார். பின்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், `நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானிகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்` என ஆணையிட்டார். நான் பொய் கூறினார்கள் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.
பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, `உங்களில் அவரின் குலம் எத்தகையது?` அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன். `இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?` என்று கேட்டார். இல்லை என்றேன். `இவரின் முன்னோர்களில், எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். `அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?` என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். `அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?` என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன். `அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?` என்று கேட்டார். நான் இல்லை என்றேன். `அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?` என்றார். நான் இல்லை என்றேன். `அவர் வாக்கு மீறியது உண்டா?` என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! `அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?` என்று கேட்டார். ஆம் என்றேன். `அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவுகள் எவ்வாறிருந்தன?` என்றார். எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம் என்றேன். `அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?` என்று கேட்டார். `அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம்விட்டுவிடுங்கள்` என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார் என்றேன்.
மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது; `அவரின் குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத்தூதர்களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கிறார் என்று கூறியிருப்பேன். இவரின் முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரின் முன்னோர்களில் எவரேனும் மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒருவர் இவர் என்று சொல்லியிருப்பேன். இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் முது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை (துவக்கத்தில்) பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள். அவரைப் பின்பற்றுகிறவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நினைவு பெறும் வரை அப்படித்தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும். அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்த இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது). அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாததென்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்புநெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர். நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) என்னுடைய இரண்டு பாதங்களுக்குமுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத்தூதர் (வெகு விரைவில்) தோன்றுவார் என்று முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தாம் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். (இப்போது) நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்`.
புஸ்ராவில் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில்,
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர் வழியைப் பின்பற்றுவோரின் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு அழைப்பு விடுக்கிறேன்! நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரண்டு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உம்முடைய) குடி மக்

Book :1

பாடம் : 2 பிரார்த்தனை (துஆ) என்பது இறை நம்பிக்கையே (ஈமான்) ஆகும்.
8. `வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 2

9. `ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :2

10. `பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

Book :2

பாடம் : 5 இஸ்லாத்தில் சிறந்தது எது?
11. `இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?` என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு `எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

Book : 2

பாடம் : 6 உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம்.
12. `ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் `இஸ்லாத்தில் சிறந்தது எது` எனக் கேட்டதற்கு, `(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்` என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 7 ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
13. `உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

Book : 2

பாடம் : 8 இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
14. `என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

15. `உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :2

பாடம் : 9 ஈமானின் சுவை.
16. `எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 10 அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.
17. `ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 2

18. `அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம் விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.

Book :2

பாடம் : 12 (மார்க்கத்தைக் காப்பாற்ற) குழப்பங்களிலிருந்து வெருண்டோடுவது மார்க்கத்தின் ஓரம்சமாகும்.
19. `ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 13 நான் உங்கள் அனைவரிலும் இறைவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்தவன் ஆவேன் எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று. (இறைவனையும் இறைநெறியையும்) அறிதல் என்பது உள்ளத்தின் செயலே. ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ், உங்களுடைய வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். ஆனால், நீங்கள் (நன்கு அறிந்து) உளப்பூர்வமாகச் செய்தவற்றுக்காகவே உங்களை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மிக்க நிதானமானவனுமாவான் (2:225) என்று கூறுகின்றான்.
20. `நல்லவற்றை(ச் செய்யுமாறு) நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அத்தோழர்களால் இயன்ற செயல்களையே ஏவுவார்கள். இதனை அறிந்த நபித்தோழர்கள், `இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். ஆனால், எங்கள் நிலையோ தங்களின் நிலையைப் போன்றதன்று` என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரியும் அளவு கோபப்பட்டார்கள். பின்னா, `நிச்சயமாக உங்கள் அனைவரையும் விட நான் அல்லாஹ்வை நன்கு அறிந்தவனும் அவனை அதிகம் அஞ்சுபவனுமாவேன்" என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 14 நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போன்று ஒருவர் இறைமறுப்பிற்குத் தாம் திரும்புவதை வெறுப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
21. `எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியராவது; ஒருவர் மற்றொரு வரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது; குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுத்த பின், நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 15 இறை நம்பிக்கையாளர்களிடையே செயல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்.
22. (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு `ஹயாத்` என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் `ஹயா` என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு:) இதே ஹதீஸை உஹைப் அறிவிக்கும்போது (ஹயா அல்லது ஹயாத் என்று) சந்தேகத்தோடு அறிவிக்காமல் `ஹயாத்` என்னும் ஆறு என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை என்பதற்குப் பதிலாகக் கடுகளவேனும் நன்மை என்ற வார்த்தையையும் குறிப்பிடுகிறார்.

Book : 2

23. `நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டாப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன் இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், `இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு `மார்க்கம்` ` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

Book :2

பாடம் : 16 வெட்கம் இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்.
24. `அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, `அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 17 (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி,தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தையும் வழங்கிவந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் எனும் (9:5ஆவது) இறைவசனம்.
25. `மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 18 இறை நம்பிக்கை (ஈமான்) என்றாலே அது நற்செயல்தான் என்று சிலர் வாதிடுகின்றனர். ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ், இது தான் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும் (43:72) என்று கூறுகின்றான். உம் இறைவன் மீதாணையாக! அவர்கள் அனைவரிடமும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிப்போம் எனும் (15:92ஆவது) இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில் (அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி என்பதற்கு) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனும் நம்பிக்கை பற்றி விசாரிப்போம் என்று இப்னு உமர் (ரலி), முஜாஹித் (ரஹ்) போன்ற மார்க்க அறிஞர்களில் பலர் கூறியிருக்கிறார்கள். (சொர்க்க வாழ்வு பற்றி பேசிவிட்டு) அல்லாஹ் இது போன்றவற்றுக்காகவே (உலகில்) செயல்படுபவர்கள் செயல்படட்டும் (37:61) என்று கூறுகிறான்.
26. `செயல்களில் சிறந்தது எது?` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, `அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது` என்றார்கள். `பின்னர் எது?` என வினவப்பட்டதற்கு, `இறைவழியில் போரிடுதல்` என்றார்கள். `பின்னர் எது?` என்று கேட்கப்பட்டதற்கு, `அங்கீகரிக்கப்படும் ஹஜ்` என்றார்கள்` என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 19 மனப்பூர்வமாக அன்றி, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ,உயிருக்குப்பயந்தோ இஸ்லாத்தை ஏற்றால் (அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாது). ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (நபியே!) நாங்களும் ஈமான் கொண்டுவிட்டோம் என்று கிராமவாசிகளில் சிலர் (உம்மிடம்) கூறினார்கள். நீர் கூறும்: நீங்கள் உண்மையில் ஈமான் கொள்ளவில்லை; ஆயினும் நாங்கள் (இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஏற்படும் இழிவிலிருந்து) தப்பித்துக் கொண்டோம்என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்! என்று (49:14) கூறுகின்றான். மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும். ஏனெனில் புகழோங்கிய அல்லாஹ், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட ஒரே) மார்க்கம் இஸ்லாம் தான்(3:19) என்று கூறுகின்றான்.
27. `நபி(ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி(ஸல்) ஒரு குழுவினருக்குக் கொடுத்தார்கள். ஒருவரைவிட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான், `இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் இறைநம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்` என கேட்டதற்கு, `அவரை முஸ்லிம் என்றும் சொல்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்." சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, `ஸஅதே! நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம், ஏதும் கொடுக்காதிருந்தால் (குற்றம் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ என்ற அச்சம் தான்` என்றார்கள்" என ஸஅத்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 20 சலாமைப் பரப்புவதும் இஸ்லாத்தின் ஓர் அம்சமே. அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: தார்மீக நேர்மையுடன் நடப்பது; உலகெங்கிலும் சலாமைப் பரப்புவது; வறுமை வயப்பட்டிருக்க (நல்வழியில்) செலவளிப்பது ஆகிய முப்பண்புகளை எவர் (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டாரோ அவர் நிச்சயமாக ஈமானையே (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டவராவார்.
28. `ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் `இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?` என்று கேட்டார். `நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 21 கணவனின் உதவிகளுக்கு நன்றி செய்யாமையும்; (இறை) நிராகரிப்பு என்பது ஏற்றத் தாழ்வுடையது என்பதும். இது குறித்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
29. `எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, `இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?` எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் `உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை` என்று பேசிவிடுவாள்` என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 22 பாவங்கள் (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் காலத்துச் செயல்களாகும். அல்லாஹ்வுக்கு இணைவைப்பதைத் தவிர, மற்ற பாவங்களைச் செய்தால் ஒருவரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று சொல்லி விடமுடியாது. ஏனெனில், அபூதர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்து மூடப்பழக்கங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதர் நீங்கள் என்று சொன்னார்கள். மேலும் உயந்தோன் அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை அவன் நாடியவர்களுக்கு மன்னித்து விடுகின்றான் (4:48) என்று கூறுகின்றான்.
30. `நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) `ரபதா` என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, `நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: `அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.

Book : 2

பாடம் : 23 முஃமின்களில் இரு சாரார் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமரசம் செய்து வையுங்கள் எனும் (49:9ஆவது) இறைவசனம். அப்படிச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடியவர்களையும் அல்லாஹ் (இந்த வசனத்தில்) முஃமின்கள் (இறை நம்பிக்கையாளர்கள்) என்றே குறிப்பிட்டிருக்கின்றான்.
31. இவருக்கு (அலீ(ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா(ரலி) என்னைச் சந்தித்து `எங்கே செல்கிறீர்?` எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் `நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், `இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` அப்போது, `இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, `அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்` என்று கூறினார்கள்` என கூறினார்` என அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார்.

Book : 2

பாடம் : 24 அநீதிகளில் ஏற்றத்தாழ்வு உண்டு.
32. `இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்" (திருக்குர்ஆன் 06:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் `நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?` எனக் கேட்டனர். அப்போது, `நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம்` (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 25 நயவஞ்சகனின் அடையாளங்கள்.
33. `நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

34. `நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

Book :2

பாடம் : 26 லைலத்துல் கத்ர் கண்ணியமிக்க இரவில் நின்றுவணங்குவது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
35. `நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 27 அறப்போர் புரிவதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
36. `இறைவனையும் இறைத்தூதர்களையும் நம்பியதற்காக மட்டும் இறைவழியில் போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டான். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 28 ரமளான் மாதத்தில் கூடுதல் தொழுகைகளை நின்றுவணங்குவதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
37. `நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 29 நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது இறை நம்பிக்கையின் ஓரம்சமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
38. `நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 30 இந்த (இஸ்லாமிய) மார்க்கம் எளிதானது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான (இஸ்லாமிய) மார்க்கமே அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான மார்க்கமாகும்.
39. `நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 31 தொழுகை இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்குபவன் அல்லன் (2:143). பொருள்: இறையில்லம் (கஅபாவின்) அருகில் இருந்தபடி (பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலை நோக்கி) நீங்கள் தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்கி விடமாட்டான்.
40. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டம் அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டம் தங்கியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஅபா ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (கஅபாவை நோக்கி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பள்ளிவாசலுக்கருகே சென்றார். அங்கே பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தவர்களிடம், `நான் இறைவன் மீது ஆணையாக மக்காவை (கஅபாவை) முன்னோக்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுவிட்டு வருகிறேன்` என்று கூறினார். உடனே மக்கள் (தொழுகையில்) அப்போதிருந்த நிலையிலிருந்த படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தம் முகத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திரும்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும், மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தம் முகத்தை நபி(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திருப்பிக் கொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் அதை வெறுக்க ஆரம்பித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், தொழுகையில் முன்னோக்கித் தொழும் திசையான கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னர் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்துவிட்டனர்; சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது? என்று அறியாதவர்களாயிருந்தோம். அப்போது, `உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்` என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்! என்று காணப்படுகிறது" என பராவு அறிவித்தார்.
இங்கே ஈமான் எனும் நம்பிக்கை என்பது தொழுகையைக் குறிக்கிறது.

Book : 2

பாடம் : 32 ஒரு மனிதரின் இஸ்லாம் அழகு பெறுவது.
41. `ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரின் இஸ்லாம் அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன் செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகிறான். அதன் பின்னர் `ம்ஸாஸ்` (உலகில் சக மனிதனுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்குரிய தண்டனை) உண்டு! (அவர் செய்யும்) ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு வரை நன்மைகள் பதியப்படும். (அவர் புரியும்) ஒவ்வொரு தீமைக்கும் (தண்டனையாக) அதைப் போன்றதுதான் உண்டு. அதையும் அல்லாஹ் அவருக்கு மன்னித்து விட்டால் அதுவும் கிடையாது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

Book : 2

42. `உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :2

பாடம் : 33 நிரந்தரமாகச் செய்யப்படும் நல்லறங்களே அல்லாஹ்விற்கு விருப்பமானவை.
43. `என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்குகிபோது நபி(ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். `யார் இந்தப் பெண்மணி?` என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) `போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்` என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 34 இறை நம்பிக்கை (ஈமான்) கூடுவதும், குறைவதும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: அவர்களுக்கு நாம் நேர்வழியை அதிகமாக்கினோம் (18:13). இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31). அல்லாஹ் கூறுகிறான்: இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவுபடுத்திவிட்டேன் (5:3). அதாவது இந்த நிறைவான (மார்க்கத்)தில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவர் (மார்க்கத்தால்) குறைவுடையவராவார்.
44. தம் உள்ளத்தில் ஒரு வால் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் `லாயிலாஹ இல்லல்லாஹ்` என்று கூறியவர் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் இதயத்தில் ஒரு கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் `லாயிலாஹ இல்லல்லாஹ்` சொன்னவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் உள்ளத்தில் ஓர் அணு அளவு நன்மை இருக்கும் நிலையில் `லாயிலாஹ இல்லல்லாஹ்` கூறியவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) `நன்மை` என்று கூறினார்கள் என மேற்கண்ட நபி மொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் ஈமான் எனும் நம்பிக்கை என்று குறிப்பிட்டதாக அனஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

Book : 2

45. யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் `அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்` என்றார். அதற்கு உமர்(ரலி) `அது எந்த வசனம்?` எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.
"இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்" (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலி) `அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்" என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.

Book :2

பாடம் : 35 ஸகாத் இஸ்லாத்தின் ஓர் அம்சமாகும். அல்லாஹ் கூறுகின்றான்: அசத்திய வழிகளிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தில் சாய்ந்தவர்களாகவும் தமது எண்ணத்தை இறைவனுக்காகத் தூய்மையாக்கியவர்களாகவும் அல்லாஹ்வை வணங்கவேண்டும்; தொழுகையை அவர்கள் நிலைநிறுத்திவரவேண்டும்; ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்று மட்டும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. மேலும் அதுவே நேரான மார்க்கமுமாகும். (98:5).
46. `நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவரை தலை பரட்டையாக நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் `இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர் `அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?` என்றார். அதற்கவர்கள் `நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை" என்றார்கள். அடுத்து `ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் `அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமையுண்டா?` என்றார். அதற்கவர்கள் `நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை" என்றார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் `அதைத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை" என்றார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றார். அப்போது `இவர் கூறியதற்கேற்ப நடந்தால் வெற்றியடைந்துவிட்டார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 36 இறந்தவர்களை (அடக்கம் செய்வதற்காகப்) பின்தொடர்ந்து செல்வது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
47. `நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காகப் பிரார்த்தனை தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 37 தாம் அறியாத விதத்தில் தமது நல்லறங்கள் பாழ்பட்டுப் போய்விடுமோ என இறை நம்பிக்கையாளர் அஞ்சுவது.
48. நான் அபூ வாயிலிடம் முர்ஜிஆ பற்றிக் கேட்டபோது, `ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அப்துல்லாஹ் வழியாக என்னிடம் கூறினார்" என ஜுபைத் அறிவித்தார்.
(குறிப்பு) இறை நம்பிக்கையாளர் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது என்று சொல்லும் வழி கெட்ட பிரிவினர் முர்ஜிஆ எனப்படுவர்.

Book : 2

49. `நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) `லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்த) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்` என்று கூறினார்கள்" என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

Book :2

பாடம் : 38 ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை நாளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் குறித்து ஜிப்ரீல் (அலை) கேட்டதும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும். பின்னர் உங்களின் மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுத்தருவதற்காக ஜிப்ரீல் வந்திருந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அளித்த பதில் அனைத்தையும் மார்க்கமாகவே கருதியிருக்கிறார்கள் என்பதும். அப்துல்கைஸ் தூதுக்குழுவினருக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியவை (யாவும்) இறை நம்பிக்கையின் அம்சங்களேயாம் என்பதும். எவர் இஸ்லாம் அல்லாத வேறொரு வழியைத் தமது மார்க்கமாகத் தேடிக்கொண்டாரோ அவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படமாட்டாது எனும் (3:85ஆவது) இறைவசனமும்.
50. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து `ஈமான் என்றால் என்ன?` என்று கேட்டதற்கு `ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது` எனக் கூறினார்கள். அடுத்து `இஸ்லாம் என்றால் என்ன?` என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். `இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள்.
அடுத்து `இஹ்ஸான் என்றால் என்ன?` என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: `(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்` அடுத்து `மறுமை நாள் எப்போது?` என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: `அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்" என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். `மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது." (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். `அவரை அழைத்து வாருங்கள்" என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, `இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.

Book : 2

பாடம் : 39
51. `நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவோர் அதிகமாக்கிக் கொண்டு செல்கிறார்களா? அல்லது குறைந்து போகிறார்களா? என நான் உம்மிடம் கேட்டேன். இல்லை அவர்கள் அதிகமாம்க் கொண்டே செல்கிறார்கள் என நீர் கூறினீர்! அப்படித்தான் ஈமான். அது முழுமையடையும் வரை (அதிகமாக்கிக் கொண்டே) இருக்கும். அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று எவராவது மதம் மாறியிருக்கின்றனரா? என்று நான் உம்மிடம் கேட்டேன். அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை என நீர் கூறினீர். ஈமான் என்பது அப்படித்தான்! அதன் தெளிவு இதயங்களில் கலந்து விடும்போது அதனை எவரும் வெறுக்க மாட்டார்கள்` என்று ஹெர்குலிஸ் தம்மிடம் கேட்டதாக அபூ சுஃப்யான்(ரலி) கூறினார்" என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 40 தமது மார்க்கத்தைக் காப்பவரின் சிறப்பு.
52. `அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலம் விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

Book : 2

பாடம் : 41 (போரில் கிடைத்த செல்வங்களில்) ஐந்தில் ஒரு பங்கை (இறைத்தூதரிடம் நிதியாக) வழங்குதல் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
53. `நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடனிருந்தபோது அவர்கள் என்னைக் கட்டிலில் அமரச் செய்து, `என்னிடம் நீர் (மொழி பெயர்ப்பாளராக) தங்கிவிடும். அதற்காக நான் என்னுடைய செல்வத்திலிருந்து உமக்கு ஒரு பங்கு தருகிறேன்` என்றார்கள். நான் அவர்களோடு இரண்டு மாதங்கள் தங்கினேன். பின்னர் அவர் என்னிடம், `அப்துல் கைஸின் தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, `வந்திருக்கும் இம்மக்கள் யார்?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு `அவர்கள் ரபீஆ` வசம்சத்தினர் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் `வருக! வருக! உங்கள் வருகை நல் வருகையாகுக` என்று வரவேற்றார்கள். `இறைத்தூதர் அவர்களே! நாங்கள் யுத்தம் தடை செய்யப்பட்ட மாதங்களிலே தவிர (வேறு மாதங்களில்) தங்களைச் சந்திக்க முடியாது. காரணம் எங்களுக்கும் தங்களுக்குடையில் இஸ்லாத்தை இதுவரை ஏற்றுக் கொள்ளாத `முளர்` வம்சத்தினர். வாழ்கிறார்கள். எனவே திட்டவட்டமான சில கட்டளை எங்களுக்குக் கூறுங்கள். அவற்றை நாங்கள் (இங்கே வராமலே) எங்கள் பின்னால் தங்கிவிட்டவர்களுக்கு அறிவிப்போம். அதன் மூலம் நாங்களும் சுவர்க்கம் செல்வோம்` என்றார்கள். மேலும் நபி(ஸல்) அவர்களிடம் சில வகை பானங்களைப் பற்றியும் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் நான்கு காரியங்களை அவர்களிடம் ஏவினார்கள்; நான்கு காரியங்களை அவர்களுக்குத் தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு `அல்லாஹ் ஒருவனை நம்புவது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?` என்றும் கேட்டார்கள். அதற்கவர்கள், `அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தாம் நன்கு அறிந்தவர்கள்` என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புவது; தொழுகையை நிலை நிறுத்துவது; மேலும் ஸகாத் வழங்குவது; ரமலான் மாதம் நோன்பு நோற்பது; போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை நீங்கள் வழங்குவது. மேலும் தடை செய்த நான்கு விஷயங்கள் (மது வைத்திருந்த) மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிமரத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள். (பின்னர் இத்தடை அகற்றப்பட்டது) இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு (இங்கே வராதவர்களுக்கு) அறிவித்து விடுங்கள்` என்று கூறினார்கள்` என கூறினார்" என அபூ ஜம்ரா அறிவித்தார்

Book : 2

பாடம் : 42 செயல்கள் அனைத்தும் எண்ணத்தையும் நோக்கத்தையும் பொறுத்ததாகும். மேலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும். எனவே, இதற்குள் இறை நம்பிக்கை (ஈமான்) அங்கத்தூய்மை (உளூ), தொழுகை, (ஏழைகளின் உரிமையான) ஸகாத், ஹஜ், நோன்பு மற்றும் (ஏனைய கொடுக்கல் வாங்கல்) சட்டங்களும் அடங்கும். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: ஒவ்வொருவரும் தத்தமது எண்ணங்களின்படியே செயல்படுகின்றனர். (17:84). (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நன்மையை எதிர்பார்த்து ஒருவர் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்வதும் தர்மமாகும். (மக்கா வெற்றிக்குப் பின்னர் நாடுதுறத்தல் ஹிஜ்ரத் கிடையாது) ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
54. `செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணந்து கொள்வார். எனவே இவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 2

55. `ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாம்விடும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book :2

56. `அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

Book :2

பாடம் : 43 அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களில் பொதுமக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் (தீன்) ஆகும் எனும் நபிமொழி. அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நலம் நாடுபவர்களாயிருந்தால் (இயலாதவர்கள், நோயாளிகள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் இருப்பதில் குற்றமில்லை). (9:91).
57. `நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book : 3

58. (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, `புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்` என்றார்.
பின்னர் தொடர்ந்து, `(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்` என்றார். மேலும், `நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று `இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்` என்றேன். அப்போது அவர்கள், `முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்` என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதி மொழி கொடுத்தேன். இந்தப் பள்ளி வாசலுக்கு உரியவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்` என்றார்.
பின்னர் பாவமன்னிப்புத் தேடியவர்களாக (மேடையைவிட்டு) இறங்கினார்கள்" ஜியாத் இப்னு இலாகா அறிவித்தார்.

Book :3

பாடம் : 1 கல்வியின் சிறப்பும் உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் எனும் (58:11ஆவது) இறை வசனமும். வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! கல்விஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (20:114). பாடம் : 2 ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது யாராவது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்விகேட்டால், அவர் தம் பேச்சை முடித்துக்கொண்டு, பிறகு கேள்வி கேட்பவருக்கு பதிலளிக்கலாம்.
59. `ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதுஅவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். `மறுமை நாள் எப்போது?` எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் `நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை` என்றனர். வேறு சிலர், `அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை` என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, `மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?` என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)` இறைத்தூதர் அவர்களே! இதோ நானே` என்றார். அப்போது கூறினார்கள்.` அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், `அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?` எனக் கேட்டதற்கு, `எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 3 உரத்த குரலில் கல்விபோதிப்பது.
60. `நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) `குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!` என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

Book : 3

61. `மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?` என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் `இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்` என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் `பேரீச்சை மரம்` என்றார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 5 மக்களின் அறிவுத் திறனைச் சோதிப்பதற்காக தலைவர் மக்களிடமே கேள்வி கேட்பது.
62. `மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டபோது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்` எனத் தோழர்கள் கேட்டதற்கு, `பேரீச்சை மரம்` என்றார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 6 கல்வி (கற்பித்தல்) குறித்து வந்துள்ளவை.
63. நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியிலுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் `உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். `இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத்(ஸல்) அவர்கள்)` என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி(ஸல்) அவர்களை `அப்துல் முத்தலிபின் பேரரே!` என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் `என்ன விஷயம்?` என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் `நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாது` என்றார். அதற்கவர்கள் `நீர் விரும்பியதைக் கேளும்` என்றார்கள். உடனே அம்மனிதர் `உம்முடையம் உமக்கு முன்னிருந்தோரதும இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?` என்றார். அதற்கு அவர்கள் `அல்லாஹ் சாட்சியாக ஆம்!` என்றார்கள். அடுத்து அவர் `அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?` என்றார். அதற்கவர்கள் `ஆம்! அல்லாஹ் சாட்சியாக` என்றார்கள். அடுத்து அவர் `இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?` என்றார். அதற்கவர்கள் `ஆம்! அல்லாஹ் சாட்சியாக` என்றார்கள். அடுத்து அவர், `இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?` என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் `ஆம் (இறைவன் மீது சாட்சியாக` என்றார்கள். உடனே அம்மனிதர் `நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்` என்று கூறிவிட்டு `நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சகோதாரன்` என்றும் கூறினார்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 7 ஆசிரியர் மாணவரிடம் ஒரு நபிமொழிச் சுவடியை ஒப்படைப்பது , கல்வியை மார்க்க அறிஞர்கள் பல்வேறு ஊர்களுக்கு எழுதி அனுப்புவது ஆகியவை தொடர்பாக வந்துள்ளவை.
64. நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் தம் மடல் ஒன்றைக் கொடுத்து அனுப்பி அதனை பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறு அம்மனிதர் பஹ்ரைன் மன்னரிடம் ஒப்படைத்தார். அவர் அதை (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடம் ஒப்படைத்துவிட்டார். அதனைக் கிஸ்ரா படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்து எறிந்தான். `(இச்செய்தியைக் கேள்விப்பட்டதும்) நபி(ஸல்) `அவர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டும்" என்று அவர்களுக்கு எதிராக (இறைவனிடம்) பிரார்த்தித்தார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னுஷிஹாப் என்பவர் இப்னுல் முஸய்யப் அவர்கள் இவ்வாறுகூறினார்கள்` என கருதுகிறேன் என்றார்.

Book : 3

65. நபி(ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் `அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்கமாட்டார்கள்` என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் `முஹம்மத்ர் ரஸுலுல்லாஹ்" என்பதாகும். நபி(ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(இந்த நபிமொழி அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா கூறுகிறார்கள்: எனக்கு இதனை அறிவித்த) கத்தாதா அவர்களிடம், `அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் `முஹம்மத்ர் ரசூலுல்லாஹ்` என்றிருந்தது என்று உங்களிடம் யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கவர் `அனஸ்(ரலி) தாம் கூறினார்கள்` என்றார்.

Book :3

பாடம் : 8 (கல்வி முதலியவற்றுக்காகக் குழுமியிருக்கும்) ஓர் அவையில் கடைசியில் அமரலாம். வட்டமாக அமர்ந்து இருப்பவர்களின் மத்தியில் இடைவெளி கண்டால் அதிலும் அமரலாம்.
66. `நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்" என அபூ வாக்கித் அல் லைஸீ(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 9 நேரில் கேட்டவரைவிடக் கேட்டவரிடம் கேட்கும் எத்தனையோ பேர் நன்கு புரிந்து கொள்கிறார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.
67. `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், `இது எந்த நாள்?` என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மெளனமாக இருந்தோம். `இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?` என்றார்கள். அதற்கு `ஆம்` என்றோம். அடுத்து இது `எந்த மாதம்?` என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மெளனமாக இருந்தோம். `இது துல்ஹஜ் மாதமல்லவா?` என்றார்கள். நாங்கள் `ஆம்!` என்றோம். அடுத்து `(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்` என்று கூறிவிட்டு `இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்` என்றார்கள்" என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 11 மக்கள் சலிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) பக்குவமாகப் போதனை செய்ததும் கல்வி புகட்டியதும்.
68. `எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாள்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்" என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

Book : 3

69. `இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 12 அறிவுரை வழங்குவதற்காகக் கற்றவர்களுக்கென்று சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்குவது.
70. `அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் `அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்` என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்` என்றார்" எனஅபூ வாயில் அறிவித்தார்.

Book : 3

பாடம் : 13 அல்லாஹ் யாருக்கு (மிகப்பெரும்) நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்.
71. `எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

Book : 3

பாடம் : 14 கல்வியில் சமயோஜிதம்.
72. நான் இப்னு உமர்(ரலி) உடன் மதீனா வரை சென்றபோது அவர் வாயிலாக `நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு பேரீச்ச மரக் குருத்து கொண்டு வரப்பட்டது. அதைக் கண்டதும் `மரங்களில் ஒரு வகை மரமுள்ளது; அது முஸ்லிமுக்கு உவமானமாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூறிட எண்ணினேன். ஆனால் அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் மிக்க இளையவனாயிருந்ததால் மெளனமாயிருந்து விட்டேன். அப்போது நபி(ஸல்) `அது பேரீச்ச மரம்!" என்றார்கள்` என்ற ஒரே ஒரு ஹதீஸைத் தவிர (வேறெதனையும்) அறிவித்தாக நான் கேட்டதில்லை" என முஜாஹித் அறிவித்தார்.

Book : 3

பாடம் : 15 கல்வியிலும் ஞானத்திலும் தாமும் பிறர் போல் சிறந்து விளங்க வேண்டுமென்று ஆர்வம் காட்டுவது. உமர் (ரலி) அவர்கள், நீங்கள் தலைவர்களாவதற்கு முன்னர் இஸ்லாமியச் சட்ட ஞானங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (முஹம்மத் பின் இஸ்மாயீல் புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் (மார்க்க சட்ட விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்). (ஏனெனில்,) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தங்களது முதிய வயதில்கூடக் கல்வி கற்றுள்ளனர்.
73. `ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 16 ஹிழ்ர் (அலை) அவர்களைத் தேடி மூஸா (அலை) அவர்கள் கடலில் சென்றது தொடர்பாகக் கூறப்பட்டவை. உங்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தர நான் உங்களைப் பின்தொடர்ந்து வரலாமா? (18:66) என்று (ஹிழ்ர் (அலை) அவர்களிடம் மூஸா(அலை) அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் கூறுகின்றான்.
74. `(மூஸா(அலை) அவர்கள் ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும்) அடியார் யார்? என்பதில் இப்னு அப்பாஸும், ஹுர்ரு இப்னு கைஸு அல் பஸாரிய்யு என்பாரும் தர்க்கித்தனர். `அவர் கிழ்றுதான்` என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது அந்த வழியாக உபை இப்னு கஅப்(ரலி) சென்றார். அவரை இப்னு அப்பாஸ்(ரலி) அழைத்து, `நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழிகாட்டும்படி கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) தர்க்கித்துக் கொண்டோம். நபி(ஸல்) அவர்கள் அது விஷயமாக எதுவும் கூறக் கேட்டிருக்கிறீர்களா?` என்று கேட்டார்கள்! அதற்கு உபை இப்னு கஃபு(ரலி), `ஆம்!` என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, `மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்களுக்கிடையில் இருந்த ஒரு சமயத்தில் ஒருவர் வந்தார். `(மூஸா அவர்களே!) உம்மை விடச் சிறந்த அறிஞர் ஒருவரை நீர் அறிவீரா?` எனக் கேட்டதற்கு மூஸா(அலை) அவர்கள் `இல்லை!` என்றார்கள். அப்போது இறைவன் `ஏன் இலை? என்னுடைய அடியார் கிழ்று இருக்கிறார்களே!" என்று மூஸா(அலை) அவர்களுக்கு அறிவித்தான். உடனே மூஸா(அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று இறைவனிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன் மீனை அவர்களுக்கொரு அடையாளமாக ஏற்படுத்தினான். மேலும் அவர்களிடம் `இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை (அங்கு) நீர் சந்திப்பீர்" என்று சொல்லப்பட்டது. அது போன்று (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர் பார்த்தவர்களாகத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூஸா(அலை) அவர்களுடன் வந்த இளைஞர் `நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கியபோது அந்த இடத்தில் மீனை மறந்து விட்டேன். (உண்மையில்) நினைவு படுத்துவதைவிட்டும் என்னை மறக்கடித்தவன் ஷைத்தானைத் தவிர வேறு யாருமில்லை` என்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது `அட! அது தானே நாம் தேடி வந்த அடையாளம்!` என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கிப் பேசிக் கொண்டே திரும்பினார்கள். அங்கே கிழ்று (அலை) அவர்களைக் கண்டார்கள். மூஸா, கிழ்று இருவர் விஷயத்தைத்தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்` என்று கூறினார்" என உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

Book : 3

பாடம் : 17 இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
75. `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அணைத்து `இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு` என்று கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 18 சிறுவர்கள் எந்த வயதில் செவியேற்ற செய்தி அங்கீகாரம் பெறும்?
76. `நான் பெட்டைக் கழுதை ஒன்றின் மீது சென்று கொண்டிருந்தேன். அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மினாவில் தடுப்பு எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) தொழுது கொண்டிருந்தார்கள். கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினிடையே கடந்து சென்று ஒரு வரிசையில் நானும் புகுந்து கொண்டேன். என்னுடைய அச்செயலை யாரும் ஆட்சேபிக்கவில்லை" என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

Book : 3

77. `நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்" என மஹ்மூது இப்னு ரபீவு(ரலி) கூறினார்.

Book :3

பாடம் : 19 கல்வியைத் தேடிப் புறப்படுவது. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு நபிமொழியைத் தெரிவதற்காக அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி ஒருமாதத் தொலை தூரத்திற்கு (ஷாம் நாட்டுக்கு) பயணமாகிச் சென்றார்கள்.
78. (மூஸா(அலை) அவர்கள் ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும்) அடியார் யார்? என்பதில் இப்னு அப்பாஸும் ஹுர்ரு இப்னு கைஸு அல் பஸரிய்யு என்பாரும் தர்க்கித்தனர். அப்போது அந்த வழியாக உபை இப்னு கஅப்(ரலி) சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ்(ரலி) அழைத்து, `நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி காட்டும் படி கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) தர்க்கித்துக் கொண்டோம். நபி(ஸல்) அவர்கள் அது விஷயமாக எதுவும் கூறக் கேட்டிருக்கிறீர்களா?` என்று கேட்டதற்கு உபை இப்னு கஃபு(ரலி) `ஆம்!` என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, `மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்களுக்கிடையில் இருந்த ஒரு சமயத்தில் ஒருவர் வந்தார். `(மூஸா அவர்களே!) உம்மைவிடச் சிறந்த அறிஞர் ஒருவரை நீர் அறிவீரா?` எனக் கேட்டார்! அதற்கு மூஸா(அலை) அவர்கள், `இல்லை` என்றார்கள். அப்போது இறைவன் `ஏன் இல்லை? என்னுடைய அடியார் கிழ்று இருக்கிறாரே!" என்று மூஸா(அலை) அவர்களுக்கு அறிவித்தான். உடனே மூஸா(அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்றும் இறைவனிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன் மீனை அவர்களுக்கொரு அடையாளமாக்கினான். மேலும் அவர்களிடம் கூறப்பட்டது. `இந்த மீனை எங்கே நீர் தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை அங்கு நீர் சந்திப்பீர்" அது போன்று (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர் பார்த்தவர்களாகத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
அப்போது மூஸா(அலை) அவர்களுடன் வந்த இளைஞர் `நாம் ஒரு பாறை ஓரமாக ஓதுங்கியபோது அந்த இடத்தில் மீனை மறந்து விட்டேன். (உண்மையில்) நினைவுபடுத்துவதைவிட்டும் என்னை மறக்கடித்தவன் ஷைத்தானைத் தவிர வேறு யாருமில்லை` என்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது `அட! அது தானே நாம் தேடி வந்த அடையாளம்!` என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கிப் பேசிக் கொண்டே திரும்பினார்கள். அங்கே கிள்று(அலை) அவர்களைக் கண்டார்கள். மூஸா, கிள்று இருவர் விஷயத்தைத்தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்` என்று கூறினார்" என உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

Book : 3

பாடம் : 20 கற்பவர் மற்றும் கற்பிப்பவரின் சிறப்பு.
79. `அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 21 கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும். ரபீஆ பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர் (அதைப் பயன்படுத்தாமல்) தம்மைப் பாழடித்திடுவது முறையல்ல என்று கூறியுள்ளார்கள்.
80. `கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 3

81. `எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். `கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வம்க்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 22 கூடுதலான கல்வியாற்றல்.
82. `நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒரு பால் கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீத மிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?` என்று கேட்டதற்கு `கல்வி` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 23 வாகனப் பிராணிகள் முதலியவற்றின் மீது இருந்து கொண்டு தீர்ப்பு வழங்குவது.
83. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து `நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்` என்றார். அதற்கவர்கள் `பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்` என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்` என்றார். அதற்கு நபியவர்கள் `பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!` என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் `பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்` என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்"என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 24 கையால் அல்லது தலையால் சைகை செய்து தீர்ப்பு வழங்குதல்.
84. `நபி(ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜின்போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது `நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன்` என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் `பரவாயில்லை` எனத் தம் கையால் சைகை செய்தார்கள். மற்றொருவர், `பலியிடு முன் தலை முடியைக் களைந்து விட்டேன்` என்றார். நபி அவர்கள் `பரவாயில்லை` எனத் தம் கையால் சைகை செய்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

Book : 3

85. `(ஒரு காலத்தில்) கல்வி பறிக்கப்பட்டு விடும். அறியாமையும் குழப்பங்களும் பரவிவிடும். கொந்தளிப்பு மிகுந்து விடும்" அப்போது `இறைத்தூதர் அவர்களே! கொந்தளிப்பு என்றால் என்ன?` என வினவப்பட்டதற்கு, தம் கையால் கொலை செய்வதைப் போல் நபி(ஸல்) பாவனை செய்து காட்டினார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :3

86. ஆயிஷா(ரலி) தொழுது கொண்டிருந்தார். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, `மக்களுக்கு என்ன நேர்ந்தது?` என்று கேட்டேன். ஆயிஷா(ரலி) வானை நோக்கிச் சுட்டிக் காட்டினார். (தொழுகையில் பேசக் கூடாது என்பதால்), `ஸுப்ஹானல்லாஹ்` என்றும் கூறினார். அப்போது `இது (ஏதாவது) அடையாளமா?` என நான் கேட்டதற்கு, ஆயிஷா(ரலி), `ஆமாம் அப்படித்தான்` என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (மயக்கத்தைப் போக்க) என்னுடைய தலையின் மீது தண்ணீரை ஊற்றினேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, `எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம், நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் எனக்கு அறிவிக்கப்பட்டது. நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனுடைய குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) `இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?` என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர் `அவர்கள் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) ஆவார்கள்; அவர்கள் எங்களுக்குத் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்; நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்றோம்` அவர்களைப் பின் பற்றினோம்; அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள்தாம்` என்று மும்முறை கூறுவார். அப்போது `(சுவனப் பேரின்பங்களைப் பெறத்) தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக!` என்றும் `நிச்சயமாகவே நீர் நபி(ஸல்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்` என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ `எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்` என்பான்` என்று கூறினார்கள்" என அஸ்மா(ரலி) அறிவித்தார்.
"அஸ்மா(ரலி) இந்த ஹதீஸை அறிவிக்கும்போது `நிகரான` என்ற இடத்தில் `அடுத்த படியான` என்று கூறினார்களா? `நயவஞ்சகன்` என்ற இடத்தில் `சந்தேகத்துடன் இருந்தவன்` என்று கூறினார்களா? என்பது எனக்கு நினைவில்லை" என்று ஃபாத்திமா கூறினார்.

Book :3

பாடம் : 25 இறை நம்பிக்கை (ஈமான்), மார்க்கக் கல்வி ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும்படியும், (அவற்றை) அவர்களுக்கப்பால் (ஊரில்) இருப்பவர்களிடம் (சென்று) அறிவிக்கும்படியும் அப்துல்கைஸ் தூதுக் குழுவினரை நபி (ஸல்) அவர்கள் தூண்டியது. (அப்துல்கைஸ் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த) மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களுக்கு (நான் கூறியவற்றைக்) கற்றுக்கொடுங்கள் என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
87. இப்னு அப்பாஸுக்கும் மக்களுக்குமிடையில் நான் மொழிபெயர்க்கக் கூடியவனாக இருந்தேன். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்துல் கைஸின் தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருந்தபோது `வந்திருக்கும் இம்மக்கள் யார்?` அல்லது `வந்திருக்கும் இவ்வம்சத்தினர் யார்?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு `அவர்கள் `ரபீஆ` வம்சத்தினர்` என்றார்கள். `(தாமாக இஸ்லாத்தை ஏற்க வந்துவிட்டதால்) இழிவுபடுத்தப்படாத நிலையிலும் பின்னர் வருந்தாத நிலையிலும் இம்மக்களின் அல்லது இத்தூதுக்குழுவினரின் வருகை - நல்வகையாகுக!` என்று நபி(ஸல்) அவர்கள் வாழ்த்துக் கூறினார்கள். அப்போது அம்மக்கள் `நாங்கள் மிக தூரமான ஊரிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் இது வரை இஸ்லாத்தை ஏற்காதவர்களான `முளர்` கூட்டத்தினர் குறுக்கே வாழ்கிறார்கள். எனவே யுத்தம் புரிவதற்குத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களிலேயே தவிர (வேறு மாதங்களில்) தங்களைச் சந்திக்க வர முடியாது. எனவே சில விஷயங்களை எங்களுக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் (இங்கே வராமல்) எங்களுக்குப் பின்னே தங்கிவிட்டவர்களுக்கு அறிவிப்போம். அதன் மூலம் நாங்கள் (இங்கே வராமல்) எங்களுக்குப் பின்னே தங்கிவிட்டவர்களுக்கு அறிவிப்போம். அதன் மூலம் நாங்கள் சுவர்க்கமும் செல்வோம்` என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களை ஏவினார்கள்; நான்கு விஷயங்களைத் தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, `அல்லாஹ் ஒருவனையே நம்புவது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?` என்று கேட்டார்கள். அதற்கவர்கள் `அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்` என்றார்கள். அதற்கு `வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புவது; தொழுகையை நிலை நிறுத்துவது; ஸகாத் வழங்குவது; ரமலான் மாதம் நோன்பு நோற்பது; போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அல்லாஹ்விற்காக) நீங்கள் வழங்கி விடுவது ஆகிய இவையே ஈமான்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் (மது வைத்திருந்த) சுரைக் குடுக்கைகள், மண்ஜாடிகள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர்களுக்குத் தடை விதித்தார்கள். (இத்தடை பின்னர் நீக்கப்பட்டது) `இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு (இங்கே வராமல்) உங்கள் பின்னே (உங்களை எதிர்பார்த்து) இருப்போரிடம் சென்று அறிவித்து விடுங்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஜம்ரா அறிவித்தார்.
"ஒரு வேளை `பேரீச்சை மரத்தின் அடி மரத்தைக் குடைந்து தயாரித்த மரப் பீப்பாய்கள்` என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்" என ஷுஅபா கூறினார்.

Book : 3

பாடம் : 26 ஒரு சட்டப் பிரச்சனை(யின் தீர்வு)க்காகப் பயணம் மேற்கொண்டு செல்வதும் அதைத் தன் குடும்பத்தினருக்குக் கற்றுக்கொடுப்பதும்.
88. `நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, `நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்` என்றார். அதற்கு நான் `நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே` என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் `(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?` என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்ச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 27 முறைவைத்துக் கற்றல்.
89. `நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார். அவரின் முறை வந்தபோது என்னுடைய அன்சாரித் தோழர், சென்றுவிட்டு வந்த என் வீட்டுக் கதவை மிக வேகமாகத் தட்டினார். `அவர் அங்கே இருக்கிறாரா?` என்றும் கேட்டார். நான் பதறிப்போய் வந்தேன். அப்போது அவர் (நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரை விவாகரத்துச செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) `ஏதோ ஒரு பெரிய காரியம் நடந்திருக்கிறது` என்றார். உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுது கொண்டிருந்தார். `நபி(ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விவாகரத்துச் செய்துவிட்டார்களா?` என்று கேட்டேன். அதற்கு அவர் `எனக்குத் தெரியவில்லை` என்றார். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று `தங்களின் துணைவியர்களை விவாகரத்துச் செய்து விட்டீர்களா?` என்று நின்ற நிலையில் கேட்டேன். அதற்கவர்கள் `இல்லையே` என்றார்கள். உடனே நான் `அல்லாஹ் மிகப் பெரியவன்` என்று சொன்னேன்" என உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 28 அறிவுரை கூறும் போதும் கல்வி கற்றுக்கொடுக்கும் போதும் தமக்குப் பிடிக்காத ஒன்றைக் காணும் நேரத்தில் சினம் கொள்ளுதல்.
90. `ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் `இறைத்தூதர் அவர்களே! இன்னார் (தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக் கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையைப் பெறவே முடிவதில்லை` என்று கூறினார். (இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள்.) அவர்கள் தங்களின் உரையில் அன்றைய தினம் கடுமையாகக் கோபப்பட்டது போல் கோப்பட்டதை நான் பார்த்தே இல்லை! (அவ்வுரையில்) `மக்களே! நீங்கள் நிச்சயமாகவே வெறுப்புக் கொள்ளும் படியே நடந்து கொள்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துபவர் அதை இலகுவாக்கட்டும். ஏனெனில், தொழவந்தவர்களில் நோயாளிகள், நலிவுற்றவர்கள், தேவைகளுடையவர்கள் இருப்பார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மஸ்வூத்(ரலி) கூறினார்.

Book : 3

91. `நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வழியில் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி (சட்டம்) கேட்டதற்கு, `அதனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பற்றி, அந்தப் பொருளிருக்கும் பாத்திரத்தைப் பற்றி, பொருளுக்குப் போடப்பட்டிருக்கும் உறையைப் பற்றி (அதன் முழு விவரங்களை) நீர் அறிந்து வைத்துக் கொள்! பிறகு ஓராண்டு காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்துவீராக! அதற்குப் பிறகு அதனை நீர் பயன்படுத்திக் கொள். அதன் உரிமையாளர் அதனைக் கேட்டு வந்தால் அதனை அவரிடம் ஒப்படைத்து விடு!` என்றுத கூறினார்கள். `அப்படியானால் வழி தவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றிய சட்டம் என்ன?` என்று அவர் கேட்டார். உடனே தம் கன்னங்கள் இரண்டும் சிவந்து போகும் அளவு அல்லது அவர்களின் முகம் சிவந்து போகும் அளவுக்கு - கோபப்பட்டவர்களாக, `கால் குளம்புகளும் அதற்கான தண்ணீரும் அதனுடன் இருக்க அதனை நீர் ஏன் பிடிக்கப் போகிறீர்? அது நீர் நிலைகளுக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும். மரங்களை மேய்ந்து கொள்ளும். எனவே, அதனை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும் வரை அதன் போக்கில்விட்ட விடுவீராக!` என்று கூறினார்கள். `அப்படியானால் வழி தவறி வந்து விடும் ஆட்டின் சட்டம் என்ன?` என்று கேட்டார். `அது உமக்கே உரியது. அல்லது (அதனைப் பிடிக்கும்) உம்முடைய அந்த சகோதரருக்குரியது. (அவ்வாறு அதனைப் பிடிக்காவிட்டால்) அது ஓநாய்க்குச் சொந்தமாம் விடும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜைத் இப்னு காலிது அல் ஜுஹைனீ(ரலி) அறிவித்தார்.

Book :3

92. `நபி(ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் `நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்` எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். `யார் என்னுடைய தந்தை?` என்று கேட்டதற்குவர்கள் `ஹுதாபாதான் உம்முடைய தந்தை` என்றார்கள். உடனே வேறொருவர் எழுந்து `என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!` என்று கேட்க `உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் என்பவர் தாம்` என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர்(ரலி) `இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மெய்யாகவே மகத்துவமும், கண்ணியமும் மிக்க இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்` என்றார்கள்" அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 29 தலைவர் அல்லது நபிமொழித்துறை அறிஞர் அருகில் மண்டியிட்டு அமர்தல்.
93. `நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா `யார் என் தந்தை?` எனக் கேட்டார். அதற்கு `உன்னுடைய தந்தை ஹுதாஃபா` என்று கூறிவிட்டு `என்னிடம் கேளுங்கள்!` என்று அதிகமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். உடனே உமர்(ரலி) முழந்தாளிட்டு அமர்ந்து `நாங்கள் அல்லாஹ்வை எங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அதிபதி என்றும், இஸ்லாத்தை (சரியான) மார்க்கமென்றும், முஹம்மத்(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்றும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம்` என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அமைதியாகிவிட்டார்கள்" அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 30 தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்லுதல். (ஒருமுறை பெரும்பாவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை! பொய் சாட்சியும் அவற்றில் ஒன்றுதான் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) நான் எல்லாவற்றையும் (உங்களுக்கு) சமர்ப்பித்து விட்டேனா? என்று மூன்றுமுறை கேட்டார்கள்.
94. `நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்; ஏதாவது ஒரு வார்த்தையைப் பேசினால் அதனை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 3

95. `நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்" அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :3

96. `நாங்கள் சென்ற பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அஸர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) `குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!` என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்திக் கூறினார்கள்" அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 31 ஒருவர் அடிமைப் பெண்ணுக்கும் தம் குடும்பத்தாருக்கும் கல்வி கற்றுக்கொடுத்தல்.
97. மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
"இதை எந்தப் பகரமும் இல்லாமல் உமக்கு நாம் வழங்கி விட்டோம். முன்னர் இதை விடச் சின்னப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு" என்று (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்டு வந்தவரிடம்) ஆமிர் கூறினார்.

Book : 3

பாடம் : 32 தலைவர் (இமாம்) பெண்களுக்கு அறிவுரை வழங்குவதும் அவர்களுக்கு (கல்வி) போதிப்பதும்.
98. `பெண்களுக்கு (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருதி, பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்" இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 33 நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளைக் (ஹதீஸ்கள்) கற்பதன் மீது பேரவாக்கொள்ளுதல்.
99. `இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?` என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, `அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்` என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, `மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து - தூய்மையான எண்ணத்துடன் `வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்` என்று கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 3

100. `நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 35 பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்கலாமா?
101. `(நாங்கள் உங்களை அணும் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்` என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் `உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்` என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், `இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?` என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், `இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்` என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

Book : 3

102. `பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது.

Book :3

பாடம் : 36 ஒரு செய்தியைக் கேட்டுவிட்டு அதனை (நன்றாகப்) புரிந்துகொள்ளும் வரை அதையொட்டி மீண்டும் மீண்டும் கேள்விகேட்பது.
103. `நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். `(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, `மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்` என்று அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:08) கூறவில்லையா?` என ஆயிஷா(ரலி) கேட்டார்கள். அதற்க நபி(ஸல்) அவர்கள், `அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும், எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்துவிடுவான்` என்று கூறினார்கள்" என இப்னு அபீ முலைக்கா அறிவித்தார்.

Book : 3

பாடம் : 37 இந்தக் கல்வியை இங்கே வந்திருப்போர் வராதவர்களுக்குச் சொல்லிவிடட்டும்! இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
104. `அம்ர் இப்னு ஸயீது என்பவர் (யஸீதுடைய ஆட்சியின் போது) மக்காவை நோக்கி ஓர் இராணுவத்தை அனுப்பியபோது, `தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி(ஸல்) அவர்கள் நின்ற நிலையில் ஆற்றிய உரையை என்னுடைய இரண்டு காதுகளும் கேட்டிருக்கின்றன. என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் இரண்டும் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பின்னர் `இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித(நகர)மாக்கவில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே இரத்தத்தை ஓட்டுவதோ, இதன் மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது. இறைத்தூதர் இங்கு (ஒரு சிறு) போரிட்டதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், (அவர் தெரிந்து கொள்ளட்டும்) நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டுமே) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதிக்கவில்லை என்று அவரிடம் கூறுங்கள். எனக்குக் கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. (இச்செய்தியை இங்கே) வராதிருப்பவர்களுக்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என்று நான் அவரிடம் கூறினேன். `அதற்கு அம்ர் இப்ன ஸயீது என்ன கூறினார் என கேட்டேன். `அதற்கு அம்ர் இப்னு ஸயீது என்ன கூறினார்? என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் கேட்டனர். `அபூ ஷுரைஹ்வே! உம்மைவிட நான் (இதைப் பற்றி) நன்கு அறிவேன்; நிச்சயமாக மக்கா நகர் ஒரு பாவிக்கோ, மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடி வந்தவனுக்கோ, திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடி வந்தவனுக்கோ பாதுகாப்பளிக்காது` என்று கூறினார்` என்றேன்" அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார்.

Book : 3

105. மக்களே! உங்கள் உயிர்களும், உடைமைகளும் உங்களின் இந்தப் புனித மாதத்தில் இந்த நாளின் புனிதத்தைப் போன்று உங்களின் மீது புனிதமானவையாய் இருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள். உங்களில் இங்கே வருகை தந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு (இச்செய்தியைச்) சமர்ப்பித்து விடட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறுதி ஹஜ்ஜின்போது ஆற்றிய பேருரையில்) கூறினார்கள்" என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ராவின் மகனிடமிருந்து இச்செய்தியைக் கேட்ட முஹம்மத் இப்னு ஸீரீன் `(உங்கள் உடைமைகளும் என்பதற்கடுத்து) `உங்கள் மானமரியாதைகளும்` என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்" என்றார். `இறைத்தூதர் உண்மையே கூறினார்கள். அவர்களின் அந்த உரையில் `நான் (எனக்கு அறிவிக்கப்பட செய்தியைச்) சமர்ப்பித்து விட்டேனா?` என்று இரண்டு முறை மக்களைப் பார்த்துக் கேட்டதும் அடங்கியிருந்தது" என்றும் குறிப்பிட்டார்கள்.

Book :3

பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பாவம்.
106. `என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அலீ(ரலி) அறிவித்தார்.

Book : 3

107. (தந்தையே! உங்களைப் போன்று நபி(ஸல்) அவர்களுடன் நட்புகொண்ட) இன்னின்னாரெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்ட தேயில்லையே! ஏன்?` என்று என்னுடைய தந்தை ஸுபைர்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, `இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் `என் மீது இட்டுக் கட்டிச் செல்பவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்` என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்` (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை)` என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.

Book :3

108. `என் மீது, எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்` என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :3

109. `நான் கூறாத ஒன்றை கூறினார்கள்` என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸலமா(ரலி) அறிவித்தார்.

Book :3

110. `என்னுடைய இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள்ளுங்கள்; (அபுல் காஸிம் என்ற) சிறப்புப் பெயரை உங்கள் சிறப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் என்னைக் கண்டவர், என்னையே கண்டவராவார். ஏனெனில், ஷைத்தான் என் வடிவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும் என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 39 கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்.
111. `உங்களிடம் (எழுதி வைக்கப்பட்ட) ஏடு ஏதாவது உள்ளதா? என்று அலீ(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, `(திருக்குர்ஆன் என்ற) அல்லாஹ்வின் வேதத்தையும் ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும், விளக்கத்தையும், இந்த ஏட்டில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை` என்று அவர் கூறினார். `அந்த ஏட்டில் என்னதான் இருக்கிறது?` என்று நான் கேட்டதற்கு, `நஷ்ட ஈடுகளைப் பற்றியும் சிறைக்கைதிகளை விடுவிப்பது பற்றியும் (சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது` என்ற சட்டங்களும் இதிலுள்ளன` என்று கூறினார்கள்" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

Book : 3

112. பனூ லைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தம் வாகனத்தில் அமர்ந்தவர்களாக, `சந்தேகத்திற்குமின்றி அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா மாநகரில் கொலையைத் தடை செய்துள்ளான். மேலும் மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன்னுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட (அது) பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி இப்போதிருந்தே (முழுமையாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் அகற்றப் படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்ப படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) விளம்பரம் செய்பவரைத் தவிர (யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் (இனிமேல்) கொலை செய்யப்பட்டால் அவரின் குடும்பத்தார்கள் நட்ட ஈடு பெறுதல் அல்லது பழிக்கு பழி வாங்குதல் என்ற இரண்டில் அவர்கள் விரும்பியதைத் தேர்வு செய்யலாம்` என்று ஓர் உரை நிகழ்த்தினார்கள்.
அப்போது யமன் வாசிகளில் ஒருவர், `இறைத்தூதர் அவர்களே! இ(ந்தப் பிரசங்கத்)தை எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்` என்று கேட்டார். `இவருக்கு எழுதிக் கொடுங்கள்` என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர், `இறைத்தூதர் அவர்களே! (மக்காவின் செடி கொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து) வாசனைப் புற்களில் ஒருவகையான `இத்கிர்` என்ற தாவரத்துக்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில், நாங்கள் அதனை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் `இத்கிர்` என்ற வாசனைப் புற்களைத் தவிர` என்றார்கள்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸைப் பதிவு செய்த புகாரி அவர்கள் `கொலை` என்ற இடத்தில் யானைப் படைகள் என்று இருந்தோ" என தாம் எண்ணுவதாகக் கூறினார்.

Book :3

113. `நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :3

114. நபி(ஸல்) அவர்களின் மரண வேதனை அதிகமானபோது `என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள். எனக்குப் பிறகு நீங்கள் வழி தறவி விடாதவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன்` என்று கூறினார்கள். `நபி(ஸல்)அவர்களுக்கு வேதனை அதிகமாம்விட்டது; நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது. அது நமக்குப் போதுமானது` என்று உமர்(ரலி) கூறினார். உடனே (தோழர்களுக்கிடையில்) கருத்து வேறுபாடு எழுந்து கூச்சலும் குழப்பமும் மிகுந்துவிட்டன. இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், `என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்; என் முன்னிலையில் (இதுபோன்ற) சச்சரவுகள் எதுவும் இருக்கக் கூடாது` என்றார்கள்.
`நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் குறுக்கே தடையாக நிகழ்ந்துவிட்ட சோதனை பெரும் சோதனைதான்` என்று கூறியவராக அங்கிருந்து இப்னு அப்பாஸ்(ரலி) வெளியேறிவிட்டார்" என இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

Book :3

பாடம் : 40 இரவில் கற்(பிப்)பதும் போதிப்பதும்.
115. `ஓர் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்த நபி(ஸல்) அவர்கள் (அச்சரியமாக) `அல்லாஹ் தூய்மையானவன்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. திறந்து விடப்பட்ட அருட்பேறுகள்தான் என்னென்ன?` என்று கூறிவிட்டு, `தம் அறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை (தம் மனைவிமார்களை இறை வணக்கத்திற்காக தூக்கத்iவிட்டும்) எழுப்புங்கள். ஏனெனில், இவ்வுலகில் ஆடை அணிந்தவர்களாகயிருக்கும், எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமாக இருப்பார்கள்` என்று கூறினார்கள்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 41 இரவில் (உறங்கச் செல்லும் முன்) கல்வி கற்பிப்பதற்காகப் பேசுதல்.
116. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆயுளின் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று, `இன்றைய இந்த இரவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் துவக்கத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள்` என்று கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 3

117. `என்னுடைய சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்து அல் ஹாரிஸ்(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் தம் வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து `பையன் தூங்கிவிட்டானோ?` அல்லது அது போன்ற ஒரு வார்த்தை கூறி விசாரித்துவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களின் இடப் பக்கமாகச் சென்று நின்றேன். உடனே என்னை அவர்களின் வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரகஅத்துகளும், பின்னர் இரண்டு ரகஅத்துகளும் தொழுதுவிட்டு அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு ஆழ்ந்து உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டார்கள்" இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 42 கற்றதை மனனம் செய்தல்.
118. `அபூ ஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்` என்று அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, `நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப(வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர்திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அளவற்ற வனுமாவேன்" (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து `மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்படாமகி செய்யாதவற்றையெல்லாம் மனப்படாம் செய்து கொண்டிருந்தேன்` என்று கூறினார்கள்" அஃரஜ் என்பவர் அறிவித்தார்.

Book : 3

119. `இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு `உம்முடைய மேலங்கியை விரியும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், `அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!" என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :3

120. `இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (கற்ற) இரண்டு (வகையான கல்விப்) பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடம்) பரப்பி விட்டேன்; இன்னொன்றை நான் பரப்பியிருந்தால் என அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 43 அறிஞர்கள் கூறுவதை அமைதியாக செவியேற்பது.
121. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் `மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!" என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) `எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்` என்று கூறினார்கள்" என ஜரீர்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 44 ஓர் அறிஞரிடம் மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்? என்று வினவப்பட்டால் இதைப் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு என்று இறைவனிடம் சாட்டிவிடுவதே நன்று.
122. (ஹிள்ரு(அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா அலை அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா` என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் `இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு(ரலி), நபி(ஸல்) கூறினார்கள் என அறிவித்தாவது: (இறைவனின்) தூதராகிய மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது `மக்களில் பேரறிஞர் யார்?` என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, `இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்` என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் `என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?` என்று கேட்டார்கள். `கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்` என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒரு மீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா(அலை) தம் பணியாளரிடம், `இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?` என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும் வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் `பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விடடேன்` என்றார். `(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்` என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவர்களாய் (வந்தவழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது கிள்று அவர்கள் `உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?` என்று கேட்டார்கள். `நான்தான் மூஸா` என்றார்கள். `இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?` என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு `ஆம்!` என்று கூறினார்கள். `உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?` என்று கேட்டார்கள். ஹிள்ரு (அலை) அவர்கள், `நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்` என்று கூறினார். அதற்கு மூஸா(அலை) அவர்கள், `உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!` என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள்.
ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், `மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்` என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் `நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?` என்று கேட்டார்கள். `மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், `நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்` என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் `யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?` என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் `மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?` என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாம்) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் `நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!` என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், `இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்` என்று கூறிவிட்டார்கள்."
(இச்சம்பவத்தை) நபி(ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) `மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!` என்று கூறினார்கள்" என ஸயீது இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 45 அமர்ந்திருக்கும் அறிஞரிடம் நின்று கொண்டு கேள்வி கேட்பது.
123. `ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து `இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?` என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, `அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்` என்று கூறினார்கள். கேள்வி கேட்டவர் நின்றிருந்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 46 (ஹஜ்ஜின் போது கல்லெறிய வேண்டிய இடங்களில்) கல்லெறியும் நேரத்தில் மார்க்கத் தீர்ப்புக் கேட்பதும் பதிலளிப்பதும் (செல்லும்).
124. நபி(ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ரத் என்ற இடத்தில் கேள்வி கேட்கப்பட்டதை கண்டேன். அப்போது ஒருவர் `இறைத்தூதர் அவர்களே! நான் (கல்) எறிவதற்கு முன்பே (பிராணியைப்) பலியிட்டு விட்டேன்` என்றார். அதற்கவர்கள் `குற்றமில்லை; இப்போது கல்லெறிந்து விடும்" என்றார்கள். மற்றொருவர் `இறைத்தூதர் அவர்களே! நான் பிராணியைப் பலியிடுவதற்கு முன்பே மொட்டையடித்து விட்டேன்` என்றார். அதற்கவர்கள், `அதனால் குற்றமில்லை; பலியிட்டுவிடும்" என்றார்கள். (இது போன்ற செயல்களை) முந்தியோ பிந்தியோ செய்யப்பட்டுவிட்டதாக அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் `குற்றமில்லை; இப்போது செய்து கொள்ளுங்கள்` என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்" அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

Book : 3

பாடம் : 47 உங்களுக்கு சிறிதளவு ஞானமே கொடுக்கப்பட்டுள்ளது! எனும் (17:85ஆவது) இறைவசனம்.
125. பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் `ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்` என்றார். அவர்களின் இன்னொருவர் `அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை` என்றார். அவர்களில் மற்றொருவரோ, `(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்` என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, `அபுல் காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் மெளனமானார்கள். `அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது` என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலம்) அவர்கள் தெளிவடைந்தபோது `(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!` (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
("ஞானத்தில் குறைந்த அளவே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை" என்று பரவலாக ஓதப்படுவதற்கு மாற்றமாக) `அவர்கள் கொடுக்கப்படவில்லை" என்றே எங்கள் ஓதுதலில் காணப்படுகிறது என அஃமஷ் கூறினார்.

Book : 3

பாடம் : 48 மக்கள் சிலர், ஒன்றைத் தவறாக விளங்கி விபரீத முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்று அஞ்சி, சிறந்த ஒன்றைக்கூட செய்யாமல் விட்டுவிடுவது.
126. ஆயிஷா(ரலி) உம்மிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாயிருந்தார்களே! அவர்கள் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன தகவல் சொல்லியிருக்கிறார்கள்?` என என்னிடம் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கேட்டார்கள்.
`ஆயிஷாவே! உம்முடைய சமூகத்தார்க(ளான குறைஷிக)ள் குஃப்ரைவிட்டு (இஸ்லாத்திற்கு வந்த) காலம் மட்டும் சமீபத்தியதாக இல்லாமலிருந்தால் நான் கஅபாவை இடித்துவிட்டு அதனை மக்கள் உன்னே நுழைவதற்கு ஒரு வாசலும் வெளியேறுவதற்கு விசாலமாக வேறொரு இரண்டு வாசல்களை அமைத்திருப்பேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என ஆயிஷா(ரலி) கூறினார்` என்றேன்" அஸ்வத் அறிவித்தார்.
இப்னு ஸுபைரின் ஆட்சிக் காலத்தில் கஅபாவிற்கு இரண்டு வாசல்கள் அமைத்து அதனைச் செய்து காட்டினார்கள்.

Book : 3

பாடம் : 49 ஒரு சாரார் (ஒன்றை முழுமையாகப்) புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அச்சத்தால் புரிந்து கொள்ளாதோரை விடுத்துப் புரிந்துகொள்ளும் ஒரு சாராருக்குத் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்தல்.
127. `மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பொய்யர்களென கருதப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?` என்று அலீ(ரலி) கூறினார்

Book : 3

128. ஒரே வாகனத்தின் மீது முஆது(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபி(ஸல்) அவர்கள் `முஆதே!" என்று அழைத்தார்கள். `இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்` என்று முஆத்(ரலி) கூறினார். `முஆதே!` என்று என மீண்டும் நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். `இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்` என மீண்டும் முஆத்(ரலி) கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது. பிறகு `தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது `இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!` என்று முஆத் கேட்டதற்கு `அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காக தம் மரணத் தருவாயில்தான் இந்த ஹதீஸை முஆத்(ரலி) அறிவித்திருக்கிறார்கள்.

Book :3

129. `அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் சுவர்க்கம் புகுவார்` என்று முஆத்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) `இந்த நல்ல செய்தியை நான் மக்களுக்குச் சொல்லலாமா?` எனக் கேட்டார்கள். `வேண்டாம் அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள் என நான் அஞ்சுகிறேன்` என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :3

பாடம் : 50 கற்பதில் வெட்கப்படுவது. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது எனக்கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக் கொள்ளமாட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களில் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களே. (ஏனெனில்,) மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் ஒருபோதும் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
130. `உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?` என்று கேட்டதற்கு `ஆம்! அவள் நீரைக் கண்டால்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, `பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா` என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், `நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?` என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

Book : 3

131. ஒரு மரம் உள்ளது. அம்மரத்தின் இலைகள் உதிர்வதில்லை. அம்மரம் இறைநம்பிக்கையாளனுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று கூறுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். மக்களின் சிந்தனை கிராமப் புறத்தில் உள்ள மரங்களின் பால் சென்றது. அது பேரீச்சை மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (நான் சிறுவனாக இருந்ததால் அதைக் கூற) வெட்கமடைந்ததேன். அப்போது மக்கள் `இறைத்தூதர் அவர்களே! நீங்களே கூறுங்கள்` என்றனர். `அது பேரீச்சை மரம் தான்` என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் `நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்ன எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்` என்றார்" என்றும் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்

Book :3

பாடம் : 51 (கேள்வி கேட்க) வெட்கப்பட்டுப் பிறரைக் கேட்கச் செய்தல்.
132. `மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். `அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)` என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 52 பள்ளிவாசலில் கற்பதும் கற்பிப்பதும் தீர்ப்பு வழங்குவதும்.
133. ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், `இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?` என்று கேட்டபோது `மதீனா வாசிகள் `துல்ஹுலைஃபா` என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் `ஜுஹ்ஃபா` என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் `கர்ன்` என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"யமன்` வாசிகள் `யலம்லம்` என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை" என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்.

Book : 4

பாடம் : 53 வினவப்பட்டதைவிட விரிவாகப் பதில் கூறுதல்.
134. `ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, `சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 1 உளூச் செய்வது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்கு தயாராகும்போது (முன்னதாக) உங்கள் முகங்களையும் கைகளை முழங்கை வரையும் கால்களை கணுக்கால்கள் வரையும் கழுவிக்கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக்கொள்ளுங்கள். (5:6). அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: உளூ செய்யும்போது உறுப்புக்களை ஒரு தடவை கழுவுவது தான் கட்டாயம் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும் அவர்களே அவ்வுறுப்புக்களை இரண்டிரண்டு தடவைகளும் மும்மூன்று தடவைகளும் கழுவி உளூ செய்திருக்கிறார்கள். மூன்று தடவைக்குமேல் அதிகப்படுத்தியது இல்லை. நபி (ஸல்) அவர்களின் செயல்முறைக்கு மாற்றம் செய்வதையும் உளூ செய்வதில் (மூன்று தடவைகள் என்ற அந்த) வரம்பை மீறுவதையும் மார்க்க அறிஞர்கள் வெறுத்திருக்கிறார்கள். பாடம் : 2 உடல் தூய்மையின்றித் தொழுகை ஏற்கப்படாது.
135. `சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது" என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் `அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் `சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது` என்றார்கள்" ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.

Book : 4

பாடம் : 3 உளூவின் சிறப்பும் உளூ செய்தோரின் முகம், கை, கால் ஆகியன (மறுமையில்) பிரகாசிப்பதும்.
136. `பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) `நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்` என்றார்கள்" நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார்.

Book : 4

பாடம் : 4 உளூ முறிந்ததாக உறுதியாகத் தெரியாத வரை சந்தேகப்பட்டு மீண்டும் உளூ செய்யத் தேவையில்லை.
137. `தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, `நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்` என்று அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 5 குறைந்தபட்ச அளவில் சுருக்கமாக உளூச்செய்தல்.
138. நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் `சுருக்கமாக உளூச் செய்தார்கள்` என்பதோடு `குறைவாக` என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் `சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே! (அது உண்மையா?)` என நாங்கள் கேட்டதற்கு, `நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்` என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக" உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்" (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.

Book : 4

பாடம் : 6 உளூவை முழுமையாகச் செய்தல். இப்னு உமர் (ரலி) அவர்கள், உளூவை முழுமையாகச் செய்தல் என்பதன் கருத்து நன்கு தூய்மைப்படுத்துதல் என்பது தான் என்று கூறியுள்ளார்கள்.
139. (ஹஜ்ஜில்) நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தைவிட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, `இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?` என்று நான் கேட்டதற்கு, `தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்` என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும்.
இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் செய்தார்கள். மக்ரிப் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தம் ஒட்டகங்களைத் தங்குமிடங்களில் படுக்க வைத்தார்கள். பின்னர் இஷாத் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்தினார்கள். (மக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளுக்கிடையில் (வேறு எதுவும்) அவர்கள் தொழவில்லை" என உஸமா இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 7 ஒரு கை நிறையத் தண்ணீர் அள்ளி இரண்டு கைகளையும் சேர்த்துக்கொண்டு முகத்தைக் கழுவுதல்.
140. `இப்னு அப்பாஸ்(ரலி) உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதைக் கொண்டு தம் முகத்தைக் கழுவினார்கள். அதாவது ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே தம் வலக்கையைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கையால் தண்ணீர் அள்ளித் தம் இடக்கையைத் கழுவினார்கள். பின்னர் ஈரக் கையால் தம் தலையைத் தடவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தம் வலக்காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தம் இடக்காலில் ஊற்றிக் கழுவினார்கள். `இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்ய பார்த்தேன்` என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்" என அதாவு இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 8 தாம்பத்திய உறவின் போதும், (உளூ உட்பட) மற்ற எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவது.
141. `உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது `அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து` என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 9 கழிப்பிடம் செல்லும் போது சொல்ல வேண்டியவை.
142. `கழிப்பிடத்திற்குச் சென்றபோது, `இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்` என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 10 கழிப்பிடம் அருகில் தண்ணீர் வைத்தல்.
143. `நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் `இந்தத் தண்ணீரை யார் வைத்தது?` என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே `இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக` என்று பிரார்த்தித்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 11 மலஜலம் கழிக்கும் போது கிப்லா(கஅபா)திசையை முன்னோக்கக் கூடாது. மதில் முதலிய கட்டடம் இருந்தால் தவறில்லை.
144. உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.)

Book : 4

பாடம் : 12 இரண்டு செங்கற்களின் மீது அமர்ந்து மலம் கழித்தல்.
145. நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இச்செய்தியை அவர்களிடமிருந்து அறிவிக்கும் வாஸிவு இப்னு ஹப்பான் அவர்களை (தொழுது முடித்த பிறகு) நோக்கி இப்னு உமர்(ரலி) `நீரும் பிட்டங்களை பூமியில் அழுத்தித் தொழுபவர்களைச் சார்ந்தவர்தாம் போலும்" என்று கூறினார்கள். அதற்கு வாஸிவு, `அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்கள் குறை சொன்னவாறு தொழுதேனா என்பதை அறிய மாட்டேன்" என்று கூறினார்.
"பூமியுடன் (தன் பிட்டங்களை) அப்பியவராகவும், பிட்டங்களைப் பூமியைவிட்டு அகற்றாதவராகவும் ஸஜ்தா செய்து தொழுபவரைத்தான் (இப்னு உமர்) அவர்கள் குறிப்பிட்டார்கள்" என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இமாம் மாலிக் கூறினார்.

Book : 4

பாடம் : 13 பெண்கள் (ஆள் நடமாட்டமில்லாத) வெட்டவெளிகளுக்கு இயற்றைக் கடனை நிறைவேற்றச் செல்லுதல்.
146. `நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், `உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்` என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), `ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்` என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்" ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 4

147. (நபி வீட்டுப்) பெண்களே! நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல (இப்போதும்) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டே உள்ளது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"வெளியே செல்ல` என்பதற்கு `கழிப்பிடம் நாடி` என்பதே நபி(ஸல்) அவர்களின் கருத்தாகும்" என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் குறிப்பிடுகிறார்.

Book :4

பாடம் : 14 வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துப் பயன்படுத்துதல்.
148. `ஹப்ஸா(ரலி)வின் வீட்டுக்கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தம் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 4

149. `எங்கள் வீட்டுக் கூரை மீது ஒரு நாள் ஏவினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக அமர்ந்திருக்கக் கண்டேன்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 15 இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு தண்ணீரால் துப்புரவு செய்தல்.
150. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுகூன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீர் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 16 ஒருவர் துப்புரவு செய்திட மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லுதல். ஏன் (உங்கள் கூஃபா நகரில்) நபி (ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் செய்வதற்குரிய தண்ணீர், மற்றும் தலையணையை சுமந்து (சேவகம் புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னுமஸ்ஊத் (ரலி) உங்களிடையே இல்லையா? என்று அபுத்தர்தா(ரலி) அவர்கள் அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டார்கள்.
151. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுவன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீரின் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 17 (கழிப்பிடம் செல்லும் போது) துப்புரவு செய்யத் தண்ணீருடன் கைத்தடியையும் எடுத்துச் செல்லல்.
152. நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும், ஒரு கைத்தடியையும் சுமந்து செல்வோம். (தேவையை முடித்ததும்) அவர்கள் தண்ணீரால் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
`கைத்தடி என்பது அதன் மேற்புறத்தில் பூண் இடப்பட்டுள்ள கைத்தடியாகும்` என்று ஷுஅபா குறிப்பிடுகிறார்.

Book : 4

பாடம் : 18 வலக்கரத்தால் சுத்தம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.
153. `உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். தம் வலக்கரத்தால் சத்தம் செய்யவும் வேண்டாம். (பானங்கள்) அருந்தும்போது குடிக்கும் பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 19 சிறுநீர் கழிக்கும்போது வலக்கரத்தால் பிறவி உறுப்பைப் பிடிக்கக்கூடாது.
154. உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அதைத் தொடவேண்டாம். இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

Book : 4

பாடம் : 20 கற்களால் (துடைத்து) சுத்தம் செய்தல்.
155. `நபி(ஸல்) அவர்கள் இயற்கைத் தேவைக்காக வெளியே சென்றபோது அவர்களைத் தொடர்ந்து சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்களின் அருகில் நான் சென்றபோது, `சுத்தம் செய்வதற்காக எனக்குச் சில கற்களைக் கொண்டு வாரும். எலும்புகளையோ, விட்டையையோ கொண்டு வரவேண்டாம்" என்று கூறினார்கள். நான் (கற்களைப் பொறுக்கி) என்னுடைய ஆடையின் ஓரத்தில் எடுத்துக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களின் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின்னர் அக்கற்களால் சுத்தம் செய்தார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 21 கெட்டிச் சாணத்தின் மூலம் துப்புரவு செய்யக்கூடாது.
156. `நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, மூன்று கற்களைக் கொண்டு வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் இரண்டு கற்களைப் பெற்றுக் கொண்டேன். மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒரு விட்டையை எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்கள் விட்டையை எறிந்துவிட்டு `இது அசுத்தமானது` என்று கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 22 உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) ஒருமுறை கழுவுதல்.
157. `நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது அவர்களின் உறுப்புக்களை ஒவ்வொரு முறை கழுவினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 23 உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) இருமுறை கழுவுதல்.
158. `நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தபோது அவர்கள் உறுப்புக்களை இரண்டிரண்டு முறை கழுவினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 24 உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) மும்முறை கழுவுதல்.
159. `உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். தம் இரண்டு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார். பின்னர் `யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸ்மான்(ரலி) கூறினார்" ஹும்ரான் அறிவித்தார்.

Book : 4

160. உஸ்மான்(ரலி), உளூச் செய்யும்போது (மக்களிடம்) `நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்` என்று கூறிவிட்டு, `ஒரு மனிதன் அழகிய முறையில் உளூச் செய்து, தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன` என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன் என்றார்கள்" ஹும்ரான் அறிவித்தார்.
அது எந்த வசனம் என்று குறிப்பிடும்போது `நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர் வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கும் விளக்கிய பின்னரும் மறைப்பவர்களை அல்லாஹ் சபிபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்` (திருக்குர்ஆன் 02:159) என்ற வசனமாகும்" என உர்வா கூறினார்.

Book :4

பாடம் : 25 உளூவின் போது மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்துதல்.
161. `உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 26 கற்களால் சுத்தம் செய்யும்போது ஒற்றைப் படையாகச் செய்தல்.
162. `உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 27 உளூ செய்யும் போது கால்களைக் கழுவ வேண்டும்; தண்ணீர் தொட்டுத் தடவக் கூடாது.
163. `நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களைவிட்டும் பின்தங்கிவிட்டார்கள். நாங்கள் அஸர் நேரத்தை அடைந்தபோது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களில் ஈரக்கையால் தடவிக் கொண்டிருந்தோம். அப்போது, `இத்தகைய குதிங்கால்களை நரகம் தீண்டட்டும்` என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபி(ஸல்) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 28 உளூ செய்யும் போது வாய் கொப்பளித்தல்.
164. `உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு `நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்` என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், `யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்" என்று கூறினார்கள் என்றார்கள்" என ஹும்ரான் அறிவித்தார்.

Book : 4

பாடம் : 29 குதிகால்களைக் கழுவுதல். இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் உளூ செய்யும்போது (விரலில்) மோதிரம் அணிந்த பகுதியையும் கழுவக் கூடியவராக இருந்தார்கள்.
165. `மக்கள் உளூச் செய்யும் தொட்டியிலிருந்து உளூச் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற அபூ ஹுரைரா(ரலி) (எங்களைப் பார்த்து) `உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல் காஸிம் (முஹம்மத்(ஸல்) அவர்கள் `குதிகால்களை சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்` என்று கூறினார்கள்` என்றார்கள்" என முஹம்மத் இப்னு ஸியாத் அறிவித்தார்.

Book : 4

பாடம் : 30 செருப்பு அணிந்திருந்தாலும் இரு கால்களையும் கழுவவே வேண்டும்; செருப்புகள் மீது தண்ணீர் தொட்டுத் தடவக்கூடாது.
166. `உபைது இப்னு ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், `அப்துர்ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை காண்கிறேன்` என்றார். `இப்னு ஜுரைஜே! அவை யாவை?` என இப்னு உமர்(ரலி) கேட்டதற்கு, `(தவாஃபின்போது) கஅபதுல்லாஹ்வின் நான்கு மூலைகளில் யமன் தேசத்தை நோக்கியுள்ள (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானி ஆகிய) இரண்டு மூலைகளைத் தவிர மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை என்பதை பார்த்தேன். முடியில்லாத தோல் செருப்பை நீங்கள் அணிவதைப் பார்க்கிறேன். நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதைப் பார்க்கிறேன். மேலும் நீங்கள் மக்காவில் இருந்தபோது (துல்ஹஜ் மாத) பிறையைக் கண்டதுமே மக்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் நீங்கள் (துல்ஹஜ் மாதம்) எட்டாவது நாள்தான் இஹ்ராம் அணிந்ததைப் பார்த்தேன்` என்று இப்னு ஜுரைஜ் கூறியதற்கு, `கஅபதுல்லாஹ்வின் மூலைகளைப் பொருத்த வரை நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டை நோக்கியுள்ள இரண்டு மூலைகளைத் தவிர எதையும் தொட நான் காணவில்லை. முடியில்லாத செருப்பைப் பொருத்த வரையில் நபி(ஸல்) அணிந்து முடியில்லாத செருப்பை அணிந்து உளூச் செய்வதை பார்த்தேன். எனவே அதை அணிவதை நான் பிரியப்படுகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொருத்த வரை நபி(ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை விரும்புகிறேன். இஹ்ராம் அணிவதைப் பொருத்தவரை நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாகனம் அவர்களை ஏற்றிக் கொண்டு (எட்டாம் நாள்) புறப்படும் வரை அவர்கள் இஹ்ராம் அணிவதை நான் பார்த்ததில்லை` என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்" என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார்.

Book : 4

பாடம் : 31 உளூவிலும் குளியலிலும் வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.
167. `நபி(ஸல்) அவர்களின் மகள் ஜைனப்(ரலி)யின் ஜனாஸாவை கழுவும் பெண்களிடம் நபி(ஸல்) அவர்கள், `அவரின் வலப்புறத்திலிருந்து கழுவ ஆரம்பியுங்கள். மேலும் அவரின் உளூவின் உறுப்புகளையும் கழுவுங்கள்` என்று கூறினார்கள்" உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

Book : 4

168. `நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 32 தொழுகையின் நேரம் வந்ததும் உளூ செய்வதற்காகத் தண்ணீரைத் தேடுதல். சுப்ஹுத் தொழுகையின் நேரம் வந்ததும் (உளூ செய்வதற்காகத்) தண்ணீர் தேடப்பட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது தான் தயம்மும்(சம்பந்தமான இறைவசனம்) அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
169. `அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர்ம்டைக்கவில்லை. நபி(ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் விரல்களின் கீழேயிருந்தது அங்கிருந்த கடைசி நபர் உளூச் செய்து முடிக்கும் வரை தண்ணீர் சுரந்து கொண்டிருந்ததை பார்த்தேன்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 33 மனித ரோமம் கழுவிய தண்ணீர் (பற்றிய சட்டம்). மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ்(ரஹ்) அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. இவ்வாறே நாய் வாய் வைத்த தண்ணீரையும் பள்ளிவாசலுக்குள் நாய் கடந்துசென்ற இடத்தையும் அசுத்தமானவையாக அவர்கள் கருதவில்லை. தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால் அந்த தண்ணீரால் உளூ செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய) இந்தச் சட்டம் நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் (4:43 ஆவது) இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது. (ஏனெனில் தண்ணீர் என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய் வைத்த) இந்தத் தண்ணீரும் தண்ணீர்தான் என்றாலும் உளூ செய்பவருடைய மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே அந்தத் தண்ணீரில் உளூ செய்பவர் தயம்மும் செய்து கொள்ளவும் வேண்டும்.
170. `அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத்தாரிடமிருந்து நாங்கள் பெற்ற, நபி(ஸல்) அவர்களின் முடி எங்களிடம் உள்ளது என அபீதா என்பவரிடம் கூறினேன். அப்போது அவர், `நபி(ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகம் மற்றும் அதிலுள்ளவற்றையும் விட எனக்கு மிக விருப்பமானதாகும்` என்று கூறினார்" முஹம்மத் இப்னு ஸீரின் அறிவித்தார்.

Book : 4

171. `நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தங்கள் தலை முடியைக் களைந்தார்கள். அவர்களின் முடியிலிருந்து முதன் முதலாக அபூ தல்ஹா(ரலி) எடுத்தார்" அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :4

172. `உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

Book :4

173. `ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :4

174. `நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நாய்கள் பள்ளிவாசலின் உள்ளே வந்தும் அதில் சிறுநீர் கழித்தும் சென்று கொண்டிருந்தன. அதற்காக அதில் எவரும் தண்ணீர் தெளிக்கவில்லை" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :4

175. நாயின் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, `வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீர் அனுப்பி, அது (பிராணியை) கொன்றால் அதை நீர் சாப்பிடு! வேட்டை நாய் வேட்டையாடப்பட்ட பிராணியிலிருந்து (எதையேனும்) சாப்பிட்டிருக்குமானால் அதை நீர் சாப்பிடாதே! ஏனெனில், அது தனக்காகவே அதைப் பிடித்திருக்கிறது` என்று கூறியபோது, `என்னுடைய நாயை அனுப்புகிறேன்; ஆனால் (வேட்டையில்) அதோடு வேறொரு நாயையும் காண்கிறேன்?` என்று கேட்டேன். `அப்படியானால் அதை நீர் சாப்பிடாதே! (ஏனெனில், நீர் உம்முடைய நாயைத்தான் இறைவனின் பெயர் சொல்லி அனுப்பினீரே தவிர வேறு நாய்க்கு நீர் இறைவனின் பெயர் சொல்லவில்லை` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அதீய் இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 34 முன் பின் இரு துவாரத்திலிருந்து ஏதேனும் வெளியேறினால் மட்டுமே உளூ முறியும் (துடக்கு ஏற்படும்). ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்து விட்டு) வந்தால்... (தொழுகைக்காக அங்கசுத்தி செய்து கொள்ளவேண்டும்.) (4:43). ஒருவருடைய பின் துவாரத்திலிருந்து புழு அல்லது முன் துவாரத்திலிருந்து பேன் போன்ற சிறுபூச்சியோ வெளியேறினால் (அவருடைய அங்கசுத்தி நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் உளூச் செய்யவேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத் தொழவேண்டும் (உளூமுறிவதில்லை. ஆகவே,) திரும்பவும் உளூ செய்ய வேண்டியதில்லை என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவர் (தம் உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால் அல்லது தமது காலுறையைக் கழற்றிவிடுவதால் அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டியதில்லை என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். சிறுதுடக்கு (தூய்மைக்கேடு) ஏற்பட்டால் தான் உளூவைத் திரும்பச் செய்யவேண்டும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். தாத்துர் ரிகாஉ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்) ஒருவர் மீது அம்பு பாய்ந்தது. அவருக்கு கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும் அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார் என ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. தங்களுடைய உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுது கொண்டேயிருந்தார்கள் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இரத்தம் வெளிவருவதன் காரணமாக உளூவைத் திரும்பச் செய்யவேண்டியதில்லை என தாவூஸ் பின் கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) மற்றுமுள்ள ஹிஜாஸ்வாசிகள் ஆகியோர் கூறியுள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம் உடலிலிருந்து) சிறு கொப்புளத்தை நசுக்கினார்கள். அதிலிருந்து இரத்தம் வெளியானது. ஆனால் அவர்கள் திரும்பவும் உளூச் செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ்நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக உளூவைத் திரும்பச்செய்யமாலே) அவர்கள் தொழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி), ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்: ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால் அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் (உளூவை திரும்பச் செய்யவேண்டியதில்லை).
176. `ஹதஸ்` ஏற்படாதவரை, தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருக்கக் கூடியவர் தொழுகையில் இருப்பவராகவோ கருதப்படுவார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) சொன்னபோது, அரபி சரியாகப் புரியாத ஒருவர் `அபூ ஹுரைராவே! `ஹதஸ்` என்றால் என்ன?` என்று கேட்டதற்கு அவர் `பின் துவாரத்திலிருந்து வெளியாகும் சப்தம்` என்று கூறினார்" என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார்.

Book : 4

177. `காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அறிவித்தார்.

Book :4

178. `மதி எனும் காம நீர் வெளியாகும் ஆடவனாக இருந்தேன். (அததைப் பற்றி) கேட்க வெட்கப்பட்டு, மிக்தாத் என்பவரை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, `அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அலீ(ரலி) அறிவித்தார்.

Book :4

179. `ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, `அவர் தம் ஆண் குறியைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். இதை நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்` என உஸ்மான்(ரலி) கூறினார். மேலும் இது பற்றி அலி, ஸுபைர், தல்ஹா, உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்டதற்கு, அவர்களும் இவ்வாறே கூறினார்கள்" ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்

Book :4

180. `நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழாகளில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் `உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்?` என்றார்கள். அதற்கு அவர் `ஆம்` என்றார். `நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்தால், அல்லது இந்திரியம் வெளியாகாமலிருந்தால், அதற்காக நீர் உளூச் செய்ய வேண்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ சயீதுல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 35 ஒருவர் தம் நண்பருக்கு உளூ செய்ய உதவுதல்.
181. `நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். `இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?` என்று நான் கேட்டதற்கு, `தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

Book : 4

182. `நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தங்கள் முகத்தையும் இரண்டு கைகளையும் தழுவினார்கள். காலுறைகளின் மீது தடவினார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 36 சிறு துடக்கான பின்னரும் குர்ஆன் முதலியவற்றை ஓதுதல். மன்சூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குளியல் அறையில் குர்ஆன் ஓதுவதும் உளூவின்றி (அல்லாஹ்வின் திருப்பெயர் எழுதி) கடிதம் வரைவதும் குற்றமில்லை என்று இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (குளியல் அறையில் இருப்போர்) கீழாடை அணிந்திருந்தால் அவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்;அவ்வாறில்லை என்றால் சலாம் சொல்லாதீர்கள் என்று இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
183. `நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 37 உணர்வு நிலையற்ற (முழுமையான) மயக்கத்தினால்தான் உளூ நீங்கும்.
184. ஒரு சூரிய கிரகணத்தன்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். ஆயிஷா(ரலி) தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, `மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?` என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா(ரலி) வானை நோக்கித் தம் கையால் சுட்டிக் காட்டினார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) `ஸுப்ஹானல்லாஹ்` என்றும் கூறினார்கள். அப்போது இது (ஏதாவது) அடையாளமா? என்று நான் கேட்டதற்கு ஆயிஷா(ரலி) `ஆமாம் அப்படித்தான்` என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (அதனால்) என் தலை மீது தண்ணீரை ஊற்றினேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, `எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம் நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனின் குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) `இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?` என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர், எங்களிடம் நேர் வழியையும் தெளிவான சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஏற்று நம்பிப் பின் பற்றினோம்` என்று கூறுவார். அப்போது `நல்லவராய் நீர் உறங்குவீராக!` என்றும் `நிச்சயமாகவே நீர் நபி(ஸல்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே இருந்தீர் என்றும் அறிவோம்` என (வானவர்களால்) கூறப்படும். நயவஞ்சகனோ `எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்` என்பான்` என எனக்கு அறிவிக்கப்பட்டது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அஸ்மா(ரலி) அறிவித்தார்.
"அஸ்மா(ரலி) இந்த ஹதீஸை அறிவித்தபோது `நிகரான` என்ற இடத்தில் `அடுத்த படியான` என்று கூறினார்களா? `நம்பிக்கையாளர்` என்ற இடத்தில் `உறுதியிலிருப்பவர்` என்று கூறினார்களா? `நயவஞ்சகன் என்ற இடத்தில் `சந்தேகத்துடன் இருந்தவன்` என்று கூறினார்களா? என்பது எனக்கு நினைவில்லை என்று கூறினார்" என்று ஃபாத்திமா கூறினார்.

Book : 4

பாடம் : 38 உளூவில் ஈரக்கையால் தலை முழுவதும் தடவுதல். ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (ஈரக்கையால்) உங்களுடைய தலையையும் தடவுங்கள் (5:6) என்று கூறுகின்றான். சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள், பெண்களும் ஆண்களைப் போன்றே (ஈரக்கையால் தலை முழுவதும்) தடவ வேண்டும் என்று கூறியுள்ளார்கள். மாலிக் (ரஹ்) அவர்களிடம், (உளூவில்) தலையில் ஒரு பகுதி மட்டும் (ஈரக்கையால்) தடவினால் போதுமா? என்று கேட்கப்பட்டது அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் பின்வரும் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பதிலளித்தார்கள்.
185. `அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, `நபி(ஸல்) அவர்கள் எப்படி உளூச் செய்தார்கள்? என்பதை எனக்கு நீர் செய்து காட்ட முடியுமா? எனக் கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) `ஆம்` என்று கூறித் தண்ணீர் கொண்டு வரக் கூறினார். அதைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றி இருமுறை கழுவினார். பின்னர் மூன்று வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டுவரை இரண்டு இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் தலையில் வைத்து முன்னே கொண்டு சென்று பின்பு கைகளைப் பின்னே கொண்டு வந்து தலையைத் தடவினார். அதாவது தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தாரோ அந்த இடத்திற்கு திரும்பக் கொண்டு வந்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கழுவினார்" என யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

Book : 4

பாடம் : 39 இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவுதல்.
186. `அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையை (பாத்திரத்தில்) நுழைதது தம் தலையைத் தடவினார். இரண்டு கையையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

Book : 4

பாடம் : 40 மக்கள் உளூ செய்துவிட்டு வைத்த மீதித் தண்ணீரைப் பயன்படுத்துதல். தாம் பல் துலக்கிவிட்டு மீதிவைத்த தண்ணீரில் உளூ செய்ய தம் வீட்டாரை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அனுமதித்தார்கள்.
187. `நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நடுப்பகலில் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதில் அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து மக்கள் எடுத்து அதை தங்களின் மீது தடவினார்கள். நபி(ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக தொழுதார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு கைத்தடி இருந்தது" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

Book : 4

188. `நபி(ஸல்) அவர்கள், தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்கள் இரண்டு கைகளையும் தங்கள் முகத்தையும் கழுவினார்கள். அதில் தண்ணிரைத் துப்பினார்கள். பின்னர் என்னிடமும் பிலால் அவர்களிடமும் இதிலிருந்து நீங்கள் இருவரும் குடியுங்கள்; உங்களின் முகத்திலும் கழுத்திலும் ஊற்றிக் கொள்ளுங்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

Book :4

189. தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்" என இப்னுஷிஹாப் அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்" என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள்.

Book :4

190. `என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று `இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்` எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது" என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 41 ஒரு கை நீரில் வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்துதல்.
191. `அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார். பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார். மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) தலையின் முன் புறமும் பின்புறமும தடவினார். மேலும் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார். பின்னர், இதுதான் நபி(ஸல்) அவர்களின் உளூ என்று கூறினார்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

Book : 4

பாடம் : 42 தலைக்கு ஒரு தடவை மஸ்ஹுச் செய்தல்.
192. `அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) என்பவரிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் எடுத்து) மூன்று முறை வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்துத் தம் தலையைத் தடவினார். இரண்டு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்" என யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

Book : 4

பாடம் : 43 ஒரு மனிதர் தம் மனைவியுடன் (ஒரே பாத்திரத்தில்) உளூ செய்வதும், ஒரு பெண் உளூ செய்து விட்டுவைத்த மீதத் தண்ணீர் பற்றிய சட்டமும். உமர் (ரலி) அவர்கள் வெந்நீரில் உளூ செய்தார்கள்; ஒரு கிறிஸ்தவ பெண்ணின் வீட்டில் உளூ செய்தார்கள்.
193. `நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 44 நபி (ஸல்) அவர்கள் தாம் உளூ செய்த தண்ணீரை மயக்கமுற்றவர் மீது ஊற்றியது.
194. `நான் நோயுற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். நான் மயநிலையில் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கத்திலிருந்து (தெளிந்து) உணர்வு பெற்றேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், `இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்கு வாரிசு யார்? என்னுடன் உடன் பிறப்புகள் மட்டுமே எனக்கு வாரிசாகும் நிலையில் நான் உள்ளேனே?` என்று நான் கேட்டபோது பாகப்பிரிவினை பற்றிய (திருக்குர்ஆன் 04:176-வது) வசனம் அருளப்பட்டது" என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 45 துணி அலசும் தொட்டி, வாய் குறுகிய மரப்பாத்திரம், மரம் மற்றும் கற்களினாலான பாத்திரங்களில் உளூ செய்தல், குளித்தல்.
195. தொழுகையின் நேரம் வந்தபோது சமீபத்தில் வீடு உள்ளவர்கள் (உளூச் செய்வதற்காக) தங்களின் வீடுகளுக்குச் சென்றனர். மற்றவர்கள் தங்கிவிட்டனர். அப்போது, நபி(ஸல்) அவர்களிடம் தண்ணீர் நிரம்பிய ஒரு கல் தொட்டி கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அதில் தங்களின் கையை விரித்துக் கழுவ முடியாத அளவிற்கு (அதன் வாய்) சிறியதாக இருந்தது. எஞ்சியிருந்த அனைவரும் அதில் உளூச் செய்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"அனஸ்(ரலி) அவர்களிடம் `நீங்கள் எத்தனை பேர்கள் இருந்தீர்கள்` என்று நாம் கேட்டதற்கு `எண்பதுக்கும் அதிகமானவர்கள் இருந்தோம்` எனக் கூறினார்" என ஹுமைத் அறிவித்தார்.

Book : 4

196. `நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

Book :4

197. `நபி(ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்தபோது செம்பினாலான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தோம். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். தங்களின் முகத்தையும் மூன்று முறையும் கைகளை இரண்டு முறையும் கழுவினார்கள். மேலும் தங்களின் தலையைத் தடவினார்கள். (தங்கள் கைகளைத் தலையில் வைத்து) முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்துவிட்டு, திரும்ப முன் பக்கம் கொண்டு சென்றார்கள். மேலும் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) கூறினார்.

Book :4

198. நபி(ஸல்) அவர்களுக்கு நோய் அதிகமாம் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தங்கள் இதர மனைவிகளிடம் அவர்கள் அனுமதி கேட்டதற்கு அவர்களும் அனுமதி வழங்கினார்கள். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்குமிடையில் (தொங்கியவர்களாக) வெளியில் வந்தார்கள். (அவர்களின் கால்களைச் சரியாக ஊன்ற முடியாததால்) பூமியில் அவர்களின் இரண்டு கால்களும் கோடிட்டுக் கொண்டே சென்றன.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்குள் சென்று அவர்களின் வேதனை அதிகரித்தபோது `வாய் திறக்கப்படாத ஏழு தோல்பை தண்ணீரை என் மீது ஊற்றுங்கள். நான் மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்` என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவரான ஹப்ஸா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு கல் தொட்டியில் நபி(ஸல்) அவர்களை அமர வைத்து, அவர்கள் `போதும்` என்று சொல்லும் வரை அவர்களின் மீது தண்ணீரை ஊற்றினோம். பின்னர் மக்களுக்கு உபதேசம் செய்வதற்காக வெளியில் வந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இது பற்றி அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டபோது, `நபி(ஸல்) அவர்களைத் தாங்கிச் சென்ற இருவரில்) இரண்டாமவர் யார் என்பது உமக்குத் தெரியுமா? என்று இப்னு அப்பாஸ்(ரலி) கேட்டார். நான் `தெரியாது` என்றேன். `அவர் தாம் அலீ(ரலி)` எனக் கூறினார்" என (இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் கூறுகிறார்.

Book :4

பாடம் : 46 குவளையில் உளூ செய்தல்.
199. `என்னுடைய தந்தையின் உடன் பிறந்தார். (அமர் இப்னு அபீ ஹஸன்) அடிக்கடி உளூச் செய்பவராக இருந்தார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜைத் அவர்களிடம், `நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்ய நீர் கண்டீர் என்பதை எனக்கு அறிவிப்பீராக` எனக் கேட்டார். அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு தட்டையான பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, அதிலிருந்து தம் கையில் ஊற்றி மூன்று முறை கழுவினார். பின்னர் தம் கையை அந்தப் பத்திரத்தில் நுழைத்துத் தண்ணீர் எடுத்து மூன்று முறை ஒரே கை தண்ணீரால் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையை(ப் பாத்திரத்தில்) நுழைத்துத் தண்ணீர் கோரி மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டிரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையால் தண்ணீர் எடுத்துத் தம் தலையின் முன் பக்கமிருந்து பின் பக்கமும் பின் பக்கமிருந்து முன் பக்கம் பின் பக்கமிருந்து முன் பக்கமும் கொண்டு சென்று தலையைத் தடவினார். பின் தம் இரண்டு கால்களையும் கழுவிவிட்டு `இப்படித்தான் நபி(ஸல்) உளூச் செய்ய பார்த்தேன்` என்று கூறினார்கள்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

Book : 4

200. `நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறிபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்" அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 47 ஒரு முத்து தண்ணீரில் உளூ செய்வது.
201. `நபி(ஸல்) அவர்கள் நான்கு `முத்து`விலிருந்து ஐந்து `முத்து` வரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு `முத்து` அளவு தண்ணீரில் உளூச் செய்வார்கள்" அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 48 (உளூ செய்யும் போது) காலுறைகள் மீது ஈரக்கையால் தடவுதல் (மஸ்ஹுச் செய்தல்).
202. `நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை உளூச் செய்தபோது) இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்" என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு உமர் (தம் தந்தை) உமர்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது `ஆம்! நபி(ஸல்) அவர்களைப் பற்றிய ஒரு செய்தியை ஸஃது உனக்கு அறிவித்தால் அது பற்றி வேறு யாரிடமும் கேட்காதே` என்று உமர்(ரலி) கூறினார்" என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

203. `நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

Book :4

204. `நபி(ஸல்) அவர்கள் (உளூவில்) தங்களுடைய தலைப்பாகையின் மீதும் இரண்டு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்ததை பார்த்தேன்" என அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.

Book :4

205. நபி (ஸல்) அவர்கள் (உளு செய்யும் போது) தமது தலைப்பாகையின் மீதும் தமது இரு கால் உறைகளின் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்தேன் என அம்ர் பின் உமய்யா (ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 49 இரு கால்களும் சுத்தமாக இருக்கும் நிலையில் காலுறை அணிந்தால்...
206. `நான் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், `அதைவிட்டுவிடும். கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன்` என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்தார்கள்" என முகீரா(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 50 ஆட்டிறைச்சி, மாவு ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு (புதிதாக) உளூ செய்யாமலிருப்பது. அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் (இறைச்சி) சாப்பிட்ட பின் (புதிதாக) உளூ செய்யவில்லை.
207. `நபி(ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஓர் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சியைப் சாப்பிட்ட பின் உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

208. `நபி(ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டுவிட்டுத் தொழுதார்கள்; உளூச் செய்யவில்லை" அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார்.

Book :4

பாடம் : 51 மாவு சாப்பிட்டுவிட்டு (புதிதாக) உளூ செய்யாமல் வாய் கொப்பளிப்பது.
209. `கைபர் போர் நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றேன். கைபரை அடுத்துள்ள ஸஹ்பா என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் பயண உணவைக் கொண்டு வரும் படிக் கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றபோது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்" என ஸுவைது இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.

Book : 4

210. `நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 52 பால் குடித்தால் வாய் கொப்பளிக்க வேண்டுமா?
211. `நபி(ஸல்) அவர்கள் பால் குடித்து, வாய் கொப்புளித்துவிட்டு, அதிலே கொழுப்பு இருக்கிறது` என்று கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 53 ஆழ்ந்து உறங்கினால் உளூ செய்வதும், ஓரிரு முறை கண்ணயர்ந்து விடுவதாலோ,தூங்கி விழுவதாலோ உளூ செய்யாமலிருத்தலும்.
212. `உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது கண் அயர்ந்தால், அவரைவிட்டும் தூக்கக் கலக்கம் நீங்கும் வரை அவர் (தொழுவதை விட்டுவிட்டு) தூங்கட்டும். உங்களிலே அவர் கண் அயர்ந்து கொண்டே தொழுதால் அவர் (தொழுகையில்) பாவ மன்னிப்புக் கோருகிறாரா, தன்னைப் பழிக்கிறாரா என்பது அவருக்குத் தெரியாது` என்று` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 4

213. `உங்களில் ஒருவர் தொழுகையில் கண் அயர்ந்தால், தாம் என்ன ஒதுகிறோம் என்பதை(ச் சரியாக) அறிந்துகொள்ளும் வரை (தொழுவதை நிறுத்திவிட்டு) தூங்கட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 54 உளூ முறிவதற்குரிய காரணம் (ஹதஸ்) ஏற்படாமலேயே (புதிதாக) உளூ செய்தல்.
214. `நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உளூச் செய்வார்கள்` என அனஸ்(ரலி) கூறியபோது, `நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?` என அனஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, `உளூவை முறிக்கும் செயல்கள் நிகழாமலிருக்கும் போதெல்லாம் ஒரே உளூவே எங்களுக்குப் போதுமானதாகவே இருந்தது` என்று அனஸ்(ரலி) கூறினார்" அம்ர் இப்னு ஆமிர் அறிவித்தார்.

Book : 4

215. `கைபர் போர் நடந்தவருடம் நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். `ஸஹ்பா` எனும் இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (அஸர்) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் (பயண) உணவைக் கொண்டு வரும் படி கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் சாப்பிட்டோம்; குடித்தோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்து, உளூச் செய்யாமலேயே எங்களுக்கு மக்ரிப் தொழுகை நடத்தினார்கள்" என ஸுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 55 சிறுநீரிலிருந்து (உடையையும் உடலையும்) மறைக்காமலிருப்பது பெரும் (பாவச்) செயல்களில் ஒன்றாகும்.
216. நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, `இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, `இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்` என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் `நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?` என்று கேட்கப்பட்டதற்கு, `அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 56 சிறுநீர் கழித்தபின் கழுவுதல். அந்த சவக்குழியிலிருந்தவர் குறித்து நபி (ஸல்) அவர்கள் தமது சிறுநீரிலிருந்து அவர் (தம் உடலையும் உடையையும்) மறைக்கா மலிருந்தார் என்றே கூறினார்கள். மனிதர் களுடைய சிறுநீரைத் தவிர வேறெந்த (உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.
217. `நபிஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் செல்வார்களானால் அவர்களுக்காக தண்ணீர் கொண்டு செல்வேன். அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்வார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

218. `நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது `இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்` என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், `இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?` என கேட்கப்பட்டபோது `அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 57 பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்த கிராமவாசியை, அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை நபி (ஸல்) அவர்களும் மக்களும் விட்டுவிட்டது.
219. `ஒரு கிராமவாசி பள்ளியினுள் சிறுநீர் கழிப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது, `அவரைவிட்டு விடுங்கள்` என்று கூறிவிட்டு, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதன் மீது ஊற்றினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 58 பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்து விட்டால் அதன் மீது தண்ணீர் ஊற்றுதல்.
220. `ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி(ஸல்) அவர்கள் `அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தில்) நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை` என்று கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 4

221. `ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஒரு பகுதியில் சிறுநீர் கழித்தார். அப்போது அவரை மக்கள் விரட்டினார்கள். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அம்மனிதர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கட்டளையிட்டார்கள். அது சிறுநீரின் மீது ஊற்றப்பட்டது" என அனஸ்(ரலி) அறிவித்தார்

Book :4

பாடம் : 59 சிறுவர்களின் சிறுநீர்.
222. `நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அக்குழந்தை, அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது (கொஞ்சம்) தண்ணீர் கொண்டு வரச் செய்து அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 4

223. `(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை" என உம்மு கைஸ்(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 60 நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் சிறுநீர் கழித்தல்.
224. `நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் பேகுதி இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்" என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 61 மற்றொருவர் பக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் சுவற்றினால் மறைத்துக் கொள்வதும்.
225. `நானும் நபி(ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஒரு சுவரின் பின்னாலுள்ள ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் எவ்வாறு நிற்பாரோ அதைப் போன்று நின்றவர்களாகச் சிறுநீர் கழித்தார்கள். அப்போது நான் கொஞ்சம் ஒதுங்கிச் சென்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் கை அசைத்து அழைத்தார்கள். நான் வந்து அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றும் வரை அவர்களின் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்" என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 62 ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழியில் சிறுநீர் கழித்தல்.
226. `அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) சிறுநீர் விஷயத்தில் மிகக் கண்டிப்பானவராக இருந்தார். `இஸ்ரவேலர் சமூகத்தினரில் யாருடைய ஆடையிலாவது சிறுநீர் பட்டால் அப்பாகத்தைக் கத்தரித்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்` எனக் கூறுவார். `அவர் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளலாமே` என ஹுதைஃபா(ரலி) கூறிவிட்டு `நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள்` என்று கூறினார்" என அபூ வாயில் அறிவித்தார்.

Book : 4

பாடம் : 63 இரத்த(ம் பட்ட இட)த்தைக் கழுவுதல்.
227. `ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து `எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?` என்று கேட்டதற்கு, `அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழலாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அஸ்மா பின்த் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.

Book : 4

228. `அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் ஃபாத்திமா என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?` எனக் கேட்டதற்கு, `இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்டு இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். `பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்` என்றும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 64 இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டிவிடுவதும் பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்.
229. `நான் நபி(ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்

Book : 4

230. `ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, ` நபி(ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் ஆங்காங்கே காணப்படும்` என்று கூறினார்கள்" என சுலைமான் இப்னு யஸார் கூறினார்.

Book :4

பாடம் : 65 இந்திரியம் முத-யவை பட்ட இடத்தைக் கழுவிய பின்னரும் அதனைக் கழுவிய அடையாளம் விலகவில்லையென்றால் (என்ன செய்ய வேண்டும்)?
231. `ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, `நபி(ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் ஆங்காங்கே காணப்படும்` என்று கூறினார்கள்" சுலைமான் இப்னு யஸார் அறிவித்தார்.

Book : 4

232. `நபி(ஸல்) அவர்களின் ஆடையிலிருந்த இந்திரியத்தைத் தாம் கழுவியதாகவும் அந்த ஆடையில் ஆங்காங்கே சில இடங்களில் அதன் ஈரத்தைப் பார்த்ததாகவும் ஆயிஷா(ரலி) கூறினார்" என சுலைமான் இப்னு யஸார் அறிவித்தார்.

Book :4

பாடம் : 66 ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும், ஆட்டுத் தொழுவமும். அபூமூசா (ரலி) அவர்கள் தாருல் பரீத் எனும் இடத்தில் தொழுதார்கள். சாணமும் வெட்ட வெளியும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு (சாணமிருந்த இடத்தையும் வெட்ட வெளியையும் சுட்டிக் காட்டி) இந்த இடமும் அந்த இடமும் சமம்தான் (இரண்டும் சுத்தமான இடங்களே)என்றார்கள்.
233. `உகல்` அல்லது `உரைனா` கோத்திரத்திலிருந்து சிலர் மதீனாவிற்கு வந்திருந்தனர். மதீனா(வின் சீதோசம்) அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே ஒட்டகங்களிடத்தில் பாலையும் அதன் சிறு நீரையும் அருந்துமாறு அவர்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் அதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததும் நபி(ஸல்) அவர்களின் கால் நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டுக் கால்நடைகளைத் தங்களோடு ஓட்டிச் சென்றனர். இச்செய்தி மறு நாள் காலை நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் அவர்களைப் பின்தொடர்ந்து (பிடித்து வர) சிலரை அனுப்பினார்கள். அன்று நண்பகலில் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களின் கைகளும் கால்களும் வெட்டப்பட்டு, அவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. `ஹர்ரா` என்ற (கரும்பாறை நிறைந்த) இடத்தில் அவர்கள் எறியப்பட்டார்கள். அவர்கள் தண்ணீர் கேட்டும் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படவில்லை" என அனஸ்(ரலி) அறிவித்தார்
"இவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரித்தார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போருக்குத் தயாராகிவிட்டார்கள்" என்று அபூ கிலாபா கூறினார்.

Book : 4

234. `பள்ளி வாசல் கட்டப்படுவதற்கு முன்னர், நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவத்தில் தொழுதார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்து விட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஒரு அசுத்தமான பொருளின்) ருசியோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றி விடாமலிருக்கும் வரை எந்தத் தண்ணீரையும் பயன் படுத்தலாம் என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) பரவாயில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்து விட்ட யானை போன்ற மிருகங் களின் எலும்புகள் விஷயத்தில் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவற்றின் எலும்புகளால் அவர்கள் தலைவாரிக் கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக் கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதை குற்றமென அவர்கள் கருதவில்லை. முஹம்மத் பின் சீரீன், இப்றாஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்றமில்லை எனக் கூறியுள்ளனர்.
235. `நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, `அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 4

236. `நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு `அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book :4

237. `இறைவழியில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் ஈட்டியால் குத்தப்படும்போது இருந்தது போல் மறுமை நாளில் அப்படியே இருக்கும். அதிலிருந்து இரத்தம் பீறிட்டு ஒடும். ஆனால் அதன் நிறயம் இரத்தத்தினுடைய நிறமாக இருந்தாலும் அதன் வாடை கஸ்தூரி வாடையாகவே இருக்கும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 68 தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்.
238. `நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருக்கிறோம்` இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 4

239. `ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 69 தொழுது கொண்டிருப்பவரின் முதுகில் அசுத்தமான பொருளோ இறந்த பிராணி களோ போடப்படுமானால் அதனால் அவருடைய தொழுகை வீணாகிவிடாது. இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது தமது ஆடையில் அசுத்தம் இருப்பதைக் கண்டுவிடுவீர் களானால் (தொழுகையில் இருந்தவாறே) அதைக் கழற்றி வைத்து விட்டுத் தமது தொழுகையைத் தொடர்வார்கள். தமது ஆடையில் இரத்தமோ இந்திரியமோ இருக்க (அது தெரியாமல்) ஒருவர் தொழுதார். அல்லது கிப்லா திசையை விட்டு வேறு திசையில் தொழுதார் (என்று தெரியவந்தது). அல்லது தயம்மும் செய்து தொழுது முடித்தார். பிறகு அதே நேரத்திற்குள் அவருக்கு தண்ணீர் கிடைத்து விட்டது. இந்நிலைகளில் அவர் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டியதில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) ஷஅபீ (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர்.
240. நபி(ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து `இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?` என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி `யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக` என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், `அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்` என அவர்களும் நம்பியிருநார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, `யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!` என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் `கலீப்` என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 70 ஆடையில் எச்சில், மூக்குச் சளி போன்றவை படுதல். ஹுதைபியா உடன் படிக்கை நடைபெற்ற காலக்கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் செய்தியை மிஸ்வர் (ரலி), மர்வான் பின் ஹகம் ஆகியோர் கூறினர்: (உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:) நபி (ஸல்) அவர்கள் உமிழ்ந்தால் அதை (கீழே விழவிடாமல்) அவருடைய தோழர்களில் ஒருவர் தமது கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். (குறிப்பு: முழு ஹதீஸ் அறியக் காண்க: பாகம் -3, ஹதீஸ் எண்-2731)
241. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 71 பழரசம், போதையூட்டும் பானம் ஆகிய வற்றில் உளூ செய்வது கூடாது. இவற்றில் உளூ செய்வதை ஹஸன் அல்பஸ்ரீ, அபுல் ஆ-யா (ரஹ்) ஆகியோர் வெறுப்பிற்குறிய செயலாகக் கருதுகின்றனர். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (தண்ணீர் கிடைக்காத போது) பழரசம், பால் ஆகியவற்றில் உளூ செய்வதைவிட,தயம்மும் செய்வதே எனக்கு மிகவும் விருப்பமான தாகும் என்று கூறியுள்ளார்கள்.
242. `போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 72 ஒரு பெண் தம் தந்தையின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவுதல். அபுல் ஆ-யா (அர்ரியாஹீ-ரஹ்) அவர்கள், எனது (ஒரு) கால் மீது (ஈரக்கையால்) தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து) விடுங்கள். ஏனெனில் அதில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
243. `ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதி(ரலி) அவர்களிடம் மக்கள் வந்து, `நபி(ஸல்) அவர்களின் காயத்திற்கு எதனால் சிகிச்சை செய்யப்பட்டது?` என்று கேட்டபோது, எனக்கும் கேள்வி கேட்கப்பட்டவருக்குமிடையில் யாரும் இருக்கவில்லை. `இந்த விஷயத்தை என்னை விட அதிகம் தெரிந்தவர் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அலீ(ரலி) தங்களின் கேடயத்தைக் கொண்டு வந்தார். அதில் தண்ணீர் இருந்தது. ஃபாத்திமா(ரலி) அந்தத் தண்ணீரால் நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவினார். ஒரு பாய் எடுக்கப்பட்டு அது கரிக்கப்பட்டது. பின்னர் அந்தச் சாம்பல் நபி(ஸல்) அவர்களின் காயத்தில் பூசப்பட்டது` என்று ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதி(ரலி) கூறினார்" என அபூ ஹாஸிம் அறிவித்தார்.

Book : 4

பாடம் : 73 பல் துலக்கல். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். (அந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள்.
244. `நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள், தங்களின் கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கியபோது `உவ் உவ்` என்றதைக் கண்டேன். குச்சியோ அவர்களின் வாயில் இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போன்றிருந்தது" அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

Book : 4

245. `நபி(ஸல்) அவர்கள் இரவு (தூக்கத்திலிருந்து) விழிக்கும்போது தங்களின் வாயைக் குச்சியால் சுத்தம் செய்வார்கள்" என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

Book :4

பாடம் : 74 வயதில் மூத்தவரிடம் பல்துலக்கும் குச்சியைக் கொடுப்பது.
246. `நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது, `வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!` என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 75 உளூவுடன் நித்திரை செய்பவர் அடையும் சிறப்பு.
247. நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் `யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்` என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்" என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்
நான் நபி(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது `நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் `இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்` என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்" என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

Book : 4

பாடம் : 1 குளிப்பதற்கு முன் உளூ செய்தல்.
248. `நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 5

249. `நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book :5

பாடம் : 2 ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது.
250. ஃபரக்` என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி(ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: `ஃபரக்` என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)

Book : 5

பாடம் : 3 ஒரு ஸாஉ அளவுள்ள தண்ணீரில் அல்லது ஏறக்குறைய அந்த அளவுத் தண்ணீரில் குளிப்பது.
251. `நானும் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரரும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களின் சகோதரர் `நபி(ஸல்) அவர்களின் குளிப்பு எப்படியிருந்தது?` என்று கேட்டதற்கு, `ஸாவு` போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தம் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது` என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என அபூ ஸலமா அறிவித்தார்.

Book : 5

252. `ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு, `ஒரு ஸாவு` அளவு தண்ணீர் போதும்` என்று கூறினார். அப்போது ஒருவர் `அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது` என்றதற்கு, `உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த (நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது` என்று கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்" என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.

Book :5

253. நபி(ஸல்) அவர்களும் (அவர்களின் மனைவி) மைமூனா(ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"மற்றோர் அறிவிப்பில் ஒரு `ஸாவு` அளவுள்ள பாத்திரம்" என்று கூறப்பட்டுள்ளது.

Book :5

பாடம் : 4 தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்.
254. `நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்" என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

Book : 5

255. `நபி(ஸல்) அவர்கள் (குளிக்கும் போது) மூன்று முறை தங்கள் தலையில் தண்ணீர் ஊற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book :5

256. `உன் தந்தையின் சகோதரர் மகனான ஹஸன் இப்னு முஹம்மத் இப்னி அல்ஹனஃபிய்யா என்னிடம் கடமையான குளிப்பு எப்படி? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் எடுத்து அதைத் தங்களின் தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் எனக் கூறினேன். அப்போது `நான் அதிகமான முடியுடையவனாக இருக்கிறேனே?` என ஹஸன் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்` என்று கூறினேன்` என என்னிடம் ஜாபிர்(ரலி) கூறினார்" என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.

Book :5

பாடம் : 5 குளிக்கும் போது ஒரு தடவை தண்ணீர் ஊற்றுதல்.
257. `நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன் கைகளையும் இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றித் தங்களின் மர்மஸ்தலங்களைக் குழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கையையும் கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது மாறி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா (ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 6 குளிக்கச் செல்லும் போது குவளை (ஹிலாப்) கேட்பதும் குளிப்பதற்கு முன் நறுமணம் தேய்ப்பதும். (குறிப்பு: ஒட்டகத்தில் ஒருமுறை கறக்கப்படும் பால் கொள்ளளவுள்ள குவளைக்கு ஹிலாப் என்பர்.)
258. `நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது ஹிலாப் பாத்திரம் போன்ற ஒன்றை கொண்டு வரச் செய்து அதிலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 7 பெருந்துடக்கிற்கான குளியலின் போது வாய்கொப்பளித்து மூக்கில் தண்ணீர் செலுத்(திச் சிந்)துதல்.
259. `நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தால் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் மண் மூலம் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தங்களின் முகத்தைக் கழுவினார்கள். மேலும் தம் தலையின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடம் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை" மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 8 கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை மண்ணில் தேய்த்துக் கழுவுதல்.
260. `நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியபோது (முதலில்) தங்களின் மர்மஸ்தலத்தைத் தங்கள் கையினால் கழுவினார்கள். பின்னர், கையைச் சுவரில் தேய்த்துக் கழுவினார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்துத் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 9 பெருந்துடக்குடையவர் கையில் எவ்வித அசிங்கமும் இல்லாத போது கையைக் கழுவுவதற்கு முன்னர் கையைத் தண்ணீர் பாத்திரத்தில் நுழைக்கலாமா? இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத்தில் கையை நுழைத்துள்ளனர். பின்னர் உளூ செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது அதிலிருந்து தெறிக்கும் தண்ணீரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.
261. `நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தில் மாறி மாறிச் செல்லும்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 5

262. `நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் கையைக் கழுவுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :5

263. `நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் கடமையான குளிப்பைக் குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :5

264. `நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியரில் ஒருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்புக் குளிப்பார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

Book :5

பாடம் : 10 உளூவிலும் குளியலிலும் சிறிது நேரம் இடைவெளி விடுதல். உளூ செய்த தண்ணீர் (உறுப்புகளில்) காய்ந்த பின்னர் தம்மிரு கால்களையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுவியதாக அறிவிக்கப்படுகிறது.
265. `நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக, நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன்கைகளில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தலையை மூன்று முறை கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 11 குளிக்கும் போது வலக் கையில் தண்ணீர் அள்ளி இடக் கையின் மீது ஊற்றுவது.
266. நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்துத் திரையிட்டேன். நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைத் தங்களின் கையில் ஊற்றி ஒரு முறையோ, இரண்டு முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய்க்கும் மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும், தலையையும் கழுவினார்கள். தங்களின் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அப்போது, `வேண்டாம்` என்பது போல் தங்களின் கையினால் சைகை செய்தார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
"இரண்டு முறை கை கழுவினார்கள் என்பதோடு மூன்றாவது முறை கழுவினார்கள் என்று மைமூனா(ரலி) கூறினார்களா இல்லையா என எனக்குத் தெரியாது" என்று இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுலைமான் கூறினார்.

Book : 5

பாடம் : 12 ஒரு முறை தாம்பத்தியஉறவு கொண்ட பின் மீண்டும் தாம்பத்திய உறவு கொள்வதும், (பலதார மணம் புரிந்தவர்) தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டபின் ஒரேயொரு முறை குளிப்பதும்.
267. ("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) `அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்` என ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

Book : 5

268. நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். `அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்` என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு `நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது` என நாங்கள் பேசிக் கொள்வோம்` என அனஸ்(ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில் `நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

Book :5

பாடம் : 13 இச்சைக் கசிவு நீரைக் (மதீ) கழுவுவதும் அது வெளியேறியதற்காக அங்க சுத்தி (உளூ) செய்வதும்.
269. `நான் அதிகமாக `மதி` எனும் காம நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி(ஸல்) அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி அவர்களிடம் கேட்டு வருவதற்கு ஒருவரை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது, `நீ உன்னுடைய உறுப்பைக் கழுவிவிட்டு உளூச் செய்து கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அலீ(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 14 வாசனைத் திரவியம் பூசிய ஒருவரிடம் குளித்த பின்னரும்கூட நறுமணம் நீடித்துக் கொண்டிருப்பது.
270. `(`நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்தி, காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை` என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கூறியபோது) `நான் நபி(ஸல்) அவர்களுக்கு நறுமணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள்` என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

Book : 5

271. `நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :5

பாடம் : 15 தலை முடியைக் கோதுவதும் தலையின் சருமம் நன்றாக நனைந்து விட்டதாகக் தெரிந்த பின்னர் தலையில் தண்ணீரை ஊற்றுவதும்.
272. `நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் இரண்டு கைகளையும் கழுவுவார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்வார்கள். பின்னர் குளிக்கத் துவங்குவார்கள். தங்களின் கையால் தலை முடியைக் கோதுவார்கள். தலையின் தோல் நனைந்தது தெரிய வந்ததும் தலையின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 5

273. `நபி(ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :5

பாடம் : 16 பெருந்துடக்கின் (கடமையான) குளிப்பை நிறைவேற்றுவதற்காக உளூச் செய்து குளித்த பின்னர் உளூச் செய்த உறுப்புகளை மீண்டும் கழுவாமலிருப்பது.
274. `நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வைத்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கையால் தண்ணீரைத் தங்களின் இடக்கையில் ஊற்றி இருமுறையோ, மும்முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய்க்கொப்புளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையில் தண்ணீர் ஊற்றி உடம்பைக் கழுவினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள் நான் அவர்களிடம் துவாலையை; கொடுத்தேன். அவர்கள் அதை விரும்பாமல் தங்களின் கைகளால் தண்ணீரை வழித்தார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 17 தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டது பற்றி பள்ளிவாசலில் வைத்து ஒருவருக்கு நினைவுக்கு வந்தால் அவர் அப்படியே பள்ளியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். (அதற்கு முன்) தயம்மும் செய்ய வேண்டிய தில்லை.
275. `தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்தால் எங்களைப் பார்த்து `உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்` என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர், அவர்கள் குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்" என அபூ ஹுiரா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 18 பெருந்துடக்கிற்காகக் குளித்த பின்னர் இரு கைகளையும் உதறுவது.
276. `நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து ஓர் ஆடையால் திரையிட்டேன். அவர்கள் தண்ணீரைத் தங்களின் கைகளில் ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்லத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் குழுவினார்கள். வாய்க் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் தலையிலும் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அதை வாங்கவில்லை. தங்களின் கைகளால் தண்ணீரை வழித்துவிட்டுச் சென்றார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 19 குளிக்கும் போது தலையின் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.
277. `எங்களில் எவருக்குக் குளிப்புக் கடமையானாலும் மூன்று முறை இரண்டு கைகளால் தண்ணீர் எடுத்துத் தலையின் மீது ஊற்றுவோம். பின்னர், கையால் தண்ணீரை அள்ளி வலப்பக்கம் ஊற்றுவோம். மற்றொரு கையினால் தண்ணீர் எடுத்து இடப்பக்கம் ஊற்றுவோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 20 அறைக்குள் ஒருவர், தனியாகக் குளிக்கும் போது ஆடையின்றி குளிக்கலாம்; மறைத்துக் கொண்டு குளிப்பது காலச் சிறந்தது. ஒருவர் மனிதர்களைக் கண்டு வெட்கப்படுவதைவிட, அல்லாஹ்விடம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா பின் ஹைதா (ரலி) அறிவித்துள் ளார்கள்.
278. இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா(அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் `அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை` என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா(அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா(அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து `கல்லே! என்னுடைய ஆடை!` என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா(அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு `அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை` என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

Book : 5

279. `அய்யூப்(அலை) அவர்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது தங்க வெட்டுக்கிளி ஒன்று அவர்களின் மீது விழுந்தது. அதை அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடையில் எடுத்தார்கள். உடனே அவர்களின் இரட்சகன் அவர்களை அழைத்து `அய்யூபே! நீர் பார்க்கிற இதைவிட்டு உம்மை தேவையற்றவராக நான் ஆக்கவில்லையா?` எனக் கேட்டான். அதற்கு `உன் கண்ணியத்தின் மீது ஆணையாக அப்படித்தான்; எனினும் உன்னுடைய பரகத்தைவிட்டு நான் தேவையற்றவனாக இல்லை` என அய்யூப்(அலை) அவர்கள் கூறினார்கள்" என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :5

பாடம் : 21 மக்களிடையே குளிக்கும் போது திரையிட்டு மறைத்துக் கொள்ளுதல்.
280. `மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, நபி(ஸல்) (என்னைச் சுட்டிக்காட்டி) `இது யார்?` என்று கேட்டார்கள். நான் உம்மு ஹானி என்றேன்" என உம்முஹானி(ரலி) அறிவித்தார்.

Book : 5

281. `நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் வலக் கரத்தால் தங்களின் இடக்கையில் ஊற்றினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தையும் அவர்கள் மேனியில் பட்டதையும் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரின் மீதோ, பூமியிலோ தேய்த்தார்கள். பின்னர், தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். இரண்டு கால்களையும் கழுவவில்லை. பிறகு அவர்கள் தங்களின் உடம்பின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் சிறிது தள்ளி நின்று தங்களின் இரண்டு பாதங்களையும் கழுவினார்கள்" மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book :5

பாடம் : 22 பெண்களுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால்...
282. `அபூ தல்ஹாவின் மனைவி உம்மு ஸுலைம் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?` என்று கேட்டதற்கு `தண்ணீரைக் கண்டால்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உம்மு ஸலமா(ரலி) கூறினார்.

Book : 5

பாடம்: 23 பெருந்துடக்குடையவரின் வியர்வையும், (பெருந்துடக்கினால்) ஒரு முஸ்லிம் அசுத்தமாகி விடுவதில்லை என்பதும்.
283. `நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவி விட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் `அபூ ஹுரைரா! எங்கு நழுவி விட்டீர்?` என்று கேட்டதற்கு, `குளிப்புக் கடமையாகியிருந்தேன்; எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன்` என்றேன். அப்போது `ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவே மாட்டான்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 24 பெருந்துடக்கு ஏற்பட்டவர் (குளிக்காமல் வீட்டிலிருந்து) வெளியேறலாம்; கடைவீதி முதலிய இடங்களில் நடக்கலாம். பெருந்துடக்கு ஏற்பட்டவர் உளூ செய்யாமல் குருதி உறிஞ்சி எடுக்கலாம்; தமது நகங்களை வெட்டிக் கொள்ளலாம்; தலைமுடி மழித்துக் கொள்ளலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
284. `நபி(ஸல்) அவர்கள் ஒரே இரவில் எல்லா மனைவியரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

Book : 5

285. `நான் குளிப்புக் கடமையாகியிருந்த இருந்த நிலையில் என்னை நபி(ஸல்) அவர்கள் சந்தித்து என்னுடைய கையைப் பிடித்தார்கள். நான் அவர்களோடு நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் நழுவிச் சென்று கூடாரத்தில் போய்க் குளித்துவிட்டு வந்தேன். அப்போது நபி(ஸல்) உட்கார்ந்திருந்தார்கள். `அபூ ஹுர்ரே! எங்கே சென்று விட்டீர்?` என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு நடந்த விஷயத்தைக் கூறினேன். அப்போது `ஸுப்ஹானல்லாஹ்! அபூ ஹுர்ரே! நிச்சயமாக இறைநம்பிக்கையாளன் அசுத்தமாவதில்லை` என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :5

பாடம் : 25 பெருந்துடக்கு ஏற்பட்டவர் (கடமையான) குளியலை நிறைவேற்றாமல் உளூசெய்து கொண்டு வீட்டில் தங்கியிருத்தல்.
286. `நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?` என ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு `ஆம்! (தூங்கும் முன்) உளூச் செய்து கொள்வார்கள்` என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என அபூ ஸலமா அறிவித்தார்.

Book : 5

பாடம் : 26 குளியல் கடமையானவர் உறங்குவது.
287. `நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளூச் செய்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 5

பாடம் : 27 குளியல் கடமையானவர் (உறங்க நாடினால்) உளூ செய்து விட்டு உறங்கலாம்.
288. `நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?` என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு `ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 5

289. `நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?` என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு `ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :5

290. `இரவு நேரத்தில் தமக்குக் குளிப்புக் கடமையாகி விடுகிறது` என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியதற்கு `உளூச் செய்யும்; உம்முடைய உறுப்பைக் கழுவிவிட்டு நீர் தூங்கும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :5

பாடம் : 28 ஆண்-பெண் பாலுறுப்புகள் சந்தித்து விட்டால்...
291. ஒருவர் தம் மனைவியின் (இரண்டு கால், இரண்டு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உறவு கொள்பவரின் மீது குளிப்புக் கடமையாகிறது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷுஅபா வாயிலா அம்ர் இப்னு மஸ்ரூக் என்பவர் இவ்வாறே அறிவித்துள்ளார்.
மூஸா மற்றும் ஹஸன் என்பவர்கள் இவ்வாறே அறிவித்துள்ளனர்.

Book : 5

பாடம் : 29 பாலுறவின் போது பெண்ணுறுப்பிலிருந்து பட்ட ஈரக் கசிவை கழுவுவது.
292. `ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளும்போது இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா?` என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, `தொழுகைக்குச் செய்வது போன்ற உளூவைச் செய்து கொள்ள வேண்டும்; தம் உறுப்பைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்` என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) பதிலளித்தார். மேலும், இது விஷயமாக அலீ இப்னு அபீ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், உபை இப்னு கஅப்(ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் கேட்டேன். அவர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) கேட்டதாக உர்வா கூறினார்" என ஜைத் இப்னு காலித் அல் ஜுஹைனி(ரலி) அறிவித்தார்.

Book : 5

293. நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தங்களின் மனைவியிடம் உறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா? என நான் கேட்டதற்கு, `மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்; பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.
"குளிப்பதுதான் சிறந்தது. ஆனால் இந்த ஹதீஸ் கடைசிக் கட்டளையாக இருந்தது. இதில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதற்காகத்தான் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டேன்" என்று அபூ அப்தில்லாஹ் (புகாரி) ஆகிய நான் கூறுகிறேன்.

Book :5

பாடம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால்
294. `நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். `ஸரிஃப்` என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, `உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?` என்று கேட்டார்கள். நான் `ஆம்!` என்றேன். `இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்` என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் `குர்பானி` கொடுத்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 2 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் தன் கணவரின் தலையைக் கழுவுவதும் அவரது தலைமுடியை வாரிவிடுவதும்.
295. `நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

296. `ஒருவர் `தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?` என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா `அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்` என்றார்" என ஹிஷாம் அறிவித்தார்.

Book :6

பாடம் : 3 மாதவிடாய் நிலையிலுள்ள தம் மனைவியின் மடியில் தலைவைத்த வண்ணம் ஒருவர் திருக்குர்ஆன் ஓதுவது. அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் மாதவிடாய் நிலையிலிருக்கும் தம் பணிப் பெண்ணை (தம் முன்னாள் அடிமையான) அபூரஸீன் (மஸ்ஊத்பின் மாலிக் - ரஹ்) அவர்களிடம் அனுப்பிவைத்து,திருக்குர்ஆனை வாங்கி வரச் சொல்வார்கள். அவள் அந்தக் குர்ஆனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம் வருவாள்.
297. `எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 4 பிரசவத் தீட்டைக் குறிக்கும் நிஃபாஸ் எனும் சொல்லை மாதவிடாய் (-ஹைள்)க்கும் பயன்படுத்துவது.
298. `நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். `உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். `ஆம்` என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என உம்முஸலமா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 5 மாதவிடாய் ஏற்பட்டுள்ள மனைவியை அணைத்துக் கொள்ளுதல்.
299. `நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

300. `எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :6

301. `நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் `இஃதிகாப்` இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :6

302. `எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?` என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :6

303. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என `நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book :6

பாடம் : 6 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் நோன்பை விட்டுவிடுவது.
304. `ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, `பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது` என்று கூறினார்கள். `இறைத்தூதர் அவர்களே! ஏன்` என்று அப்பெண்கள் கேட்டதற்கு, `நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது `இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன` என்று பெண்கள் கேட்டனர். `ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, `ஆம்` என அப்பெண்கள் பதில் கூறினர். `அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் `ஆம்!` எனப் பெண்கள் பதில் கூறினர். `அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 7 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கடமைகள்அனைத்தையும் நிறைவேற்றலாம். இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் தவறேதுமில்லை என்று கூறியுள்ளார்கள். பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருப்பவர் குர்ஆனை ஓதுவதில் எந்தத் தவறுமில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரமும் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். (பெரு நாள் தினத்தன்று) மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களை(யும்) (தொழுகைத் திடலுக்கருகில்) அழைத்துச் சென்று ஆண்களைப் போன்று தக்பீர் சொல்லவும் பிராத்திக்கவும் நாங்கள் பணிக்கப்பட்டோம்என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள். அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமக்கு எழுதியிருந்த கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி மன்னர் ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அதில் : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா க-மத்தின் ... அளவிலா அருளாளன் நகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்குமிடையில் பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள் (3:64) என்று தொடங்கும் (குர்ஆன் வசனங்கள்) எழுதப்பட்டிருந்தது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின் போது) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்கள்; ஆனால் தொழவில்லை. இதை அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் பெருந்துடக்குடையவனாக (குளியல் கடமையான) நிலையிலும் (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆடுமாடுகளை) அறுப்பேன். (ஏனெனில்) வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ், அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்டதை நீங்கள் புசிக்க வேண்டாம் (6:121) என்று கூறியுள்ளான்.
305. `நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். `ஸரிஃப்` என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள், அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, `ஏனழுகிறாய்?` என்று கேட்டார்கள். `இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்` என்றேன். `உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?` என்று கேட்டார்கள். நான் `ஆம்!` என்றேன். அப்போது `இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்` என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்

Book : 6

பாடம் : 8 உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா).
306. `பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?` என்று கேட்டதற்கு, `அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 9 மாதவிடாய் இரத்தத்தைக் கழுவுதல்.
307. `ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒரு பெண்ணின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அவள் எவ்வாறு (சுத்தம்) செய்ய வேண்டும்?` என்று கேட்டதற்கு, `உங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். அதன் பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

Book : 6

308. எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவர் தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகஆடையிலிருந்து இரத்ததைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவியப் பின்னர் ஆடையின் இதர இடங்களிலும் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் தொழுவார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :6

பாடம் : 10 உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) உள்ள பெண் பள்ளிவாச-ல் இஃதிகாஃப் இருப்பது.
309. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"மஞ்சள் நிற நீரைப் பார்த்ததாகவும் `இது இன்னவளுக்கு ஏற்படுகிற ஒன்றைப் போன்றே` என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என்றும் இக்ரிமா கூறினார்.

Book : 6

310. `நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தவாறு தொழுதார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :6

311. `இறைநம்பிக்கையாளர்களின் தாயான ஒருவர் உதிரப் போக்குள்ள நிலையிலும் இஃதிகாப் இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :6

பாடம் : 11 ஒரு பெண் மாதவிடாய் ஏற்பட்ட ஆடையுடன் தொழலாமா?
312. `எங்களில் ஒருவருக்கு ஓர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவரின் மாதவிடாய் ஏற்படும். ஏதாவது இரத்தம் அந்த ஆடையில் பட்டால் தங்களின் எச்சிலைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தங்களின் நகத்தால் சுரண்டி விடுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 12 மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது நறுமணத்தைப் பயன்படுத்துதல்.
313. `இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 13 ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் போது தமது உடலைத் தேய்த்துக் கழுவுவதும்,அவள் எப்படிக் குளிக்க வேண்டும் என்பதும், இரத்தம்போன இடத்தில் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்செடுத்து இரத்தம் படிந்த இடத்தை எப்படித் துடைக்க வேண்டும் எனும் முறையும்.
314. `ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து `மாதவிடாய் நின்ற பின்பு எப்படிக் குளிக்க வேண்டும்?` என கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்குக் கூறிவிட்டு, `கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் நீ சுத்தம் செய்` என்றார்கள். அப்போது `நான் எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்?` என அப்பெண் கேட்டார். `அதைக் கொண்டு நீ சுத்தம் செய்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண் `எப்படி?` என்று கேட்டபோது `ஸுபஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்!` என்று கூறினார்கள். உடனே நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து `கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு இரத்தம் பட்ட இடத்தில் வைத்துச் சுத்தம் செய்` என்று அவளிடம் கூறினேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 14 மாதவிடாய்க் குளியல்.
315. `அன்ஸாரிப் பெண்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து `மாதவிடாயில் இருந்த நான் சுத்தமாவதற்காக எவ்வாறுக் குளிக்க வேண்டும்?` எனக் கேட்டார். `கஸ்தூரி கலந்த பஞ்சை எடுத்து நீ சுத்தம் செய்` என மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர்கள் வெட்கப்பட்டுத் தங்களின் முகத்தைத் திருப்பினார்கள். அல்லது `அதைக் கொண்டு நீ சுத்தம் செய்` என்று கூறினார்கள். அப்போது நான் அந்தப் பெண்ணைப் பிடித்து என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்பதை அவளுக்கு விளக்கினேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 15 ஒருபெண் மாதவிடாய் நின்றபின் குளியலின் போது சீப்பினால் தலையை வாரிக் கொள்ளுதல்.
316. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால் நடையைக் கொண்டுவராத ஹஜ்ஜின் `தமத்துவ்` என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் `உம்ரா`ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். `உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 16 ஒருபெண் மாதவிடாய் நின்ற பின் குளியலின் போது தனது தலைமுடியை அவிழ்த்து விடுவது (அவசியமா?).
317. துல்ஹஜ் மாதப் பிறையைப் பயணத்தில் அடையும் நிலையில் புறப்பட்டோம். அப்போது `உம்ராச் செய்ய விரும்புவோர் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் என்னுடன் அறுத்துக் கொடுப்பதற்குரிய பிராணியைக் கொண்டு வராதிருந்தால் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக வேறு சிலர் ஹஜ்ஜிற்காகவும் இஹ்ராம் அணிந்தனர். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்களுடன் இருந்தேன். நான் மாதவிடாயுடன் இருந்தபோது அரஃபா நாள் வந்தது. நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். `நீ உன்னுடைய உம்ராவைவிட்டு விடு; உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரி விடு; பின்னர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். ஹஸ்பாவில் தங்கிய இரவு என்னுடைய சகோதரர் அப்துர் ரஹ்மானை நபி(ஸல்) என்னுடன் அனுப்பினார்கள். தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று எனக்கு விடுபட்ட உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் அணிந்தேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இந்த முறையில் செய்த எதிலும் அறுத்துப் பலியிடுவதோ, நோன்பு நோற்பதோ மற்றும் தர்மம் கொடுப்பதோ இருக்கவில்லை" என்று ஹிஷாம் குறிப்பிடுகிறார்.

Book : 6

பாடம் : 17 (பெண்ணின் கருவறையில்) வடிவமைக்கப்படும் சதைக்கட்டியும் வடிவமைக்கப்படாத (விழு) கட்டியும்.
318. `அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், `யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது `அலக்` (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது` என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 18 மாதவிடாய் ஏற்பட்டுவிட்ட பெண் எப்படி ஹஜ்ஜிற்காகவும் உம்ராவிற்காகவும் இஹ்ராம் கட்ட வேண்டும்?
319. நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். எங்களில் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் `உங்களில் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராமல் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்கள் (உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலகி கொள்ளலாம். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து தங்களுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர்கள் தங்களின் குர்பானியைப் பத்தாவது நாளன்று அறுக்கும் வரை தங்களின் இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம். ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அது அரஃபா நாள் வரை நீடித்தது. நான் உம்ராவிற்காகத்தான் இஹ்ராம் அணிந்திருந்தேன். (இதை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்) என்னுடைய தலை முடியை அவிழ்த்துவிட்டு அதை வாரி விடுமாறும், நான் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததைவிட்டுவிட்டுத் திரும்ப ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் அவ்வாறே செய்தேன். என்னுடைய ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்னர் என்னுடன் (என்னுடைய சகோதரர்) அப்துர்ரஹ்மானை அனுப்பி, தன்யீம் என்ற இடத்திலிருந்து எனக்குவிடுபட்ட உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து வருமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சில பெண்கள் மாதவிடாய் செல்லும் இடத்தில் வைத்துக் கட்டிய பஞ்சு மஞ்சள் நிறமாக இருக்கும்போது அதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அப்போது `மாதவிடாய் செல்லும் இடத்தில் வைக்கப்படும் பஞ்சு வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டு மாதவிடாயிலிருந்து சுத்தமாகி விட்டீர்கள் என்று கருதவேண்டாம்` என்று அப்பெண்களுக்கு ஆயிஷா(ரலி) கூறினார். சில பெண்கள் நடு இரவில் விளக்குகளைக் கொண்டு வரச் செய்து மாதவிடாயிலிருந்து சுத்தமாகி விட்டோமா என்பதைப் பார்ப்பார்கள் என்ற செய்தி ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் மகளுக்குக் கிடைத்தபோது, `நபி(ஸல்) காலத்துப் பெண்மணிகள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்` என்று இப்படி செய்யும் பெண்களைக் குறை கூறினார்கள்".

Book : 6

பாடம் : 19 மாதவிடாய் ஆரம்பிப்பதும் நிற்பதும். சில பெண்கள் (தங்கள் மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா என்பதை அறிய) மாதவிடாய் காலத்தில் அணையாடைக்குள் பயன்படுத்திய பஞ்சை ஒரு சிறிய கூடைக்குள் வைத்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அந்தப் பஞ்சில் மஞ்சள் நிறம் இருந்தது. (இதைக் காணும்) ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த பஞ்சில் (நிறமேதும் படாமல்) வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டுவிடாதீர்கள் என் றார்கள். அதாவது மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள் என்றார்கள். சில பெண்கள் நடு நிசி நேரத்தில் விளக்குகளைக் கொண்டு வரச் சொல்லி மாதவிடாயிலிருந்து தூய்மைய டைந்து விட்டோமா என்பதை (சிரமப்பட்டு) பார்க்கிறார்கள் என்ற செய்தி ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் புதல்விக்கு எட்டியது. அப்போது அவர் (நபி ளஸல்ன அவர்களது காலத்தில் வாழ்ந்த) அந்தப் பெண்கள் இப்படிச் செய்ததில்லை என்று கூறி அச்சிலரைக் கடிந்து கொண்டார்கள்.
320. `பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் உதிரப் போக்குடையவராக இருந்தார். நபி(ஸல்) அவர்களிடம் அப்பெண் (இது குறித்து) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் `அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்` என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 20 மாதவிடாய் காலத்தில் விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை. அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்: (மாதவிடாய் ஏற்பட்ட) அந்தப் பெண் தொழுகைகளை விட்டுவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
321. `பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர் தொழுதால் மட்டும் போதுமா?` என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, `நீ `ஹரூர்` எனும் இடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவ மாட்டார்கள்` என்று அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழ மாட்டோம்" என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என முஆதா அறிவித்தார்.

Book : 6

பாடம் : 21 மாதவிடாய் இரத்தம்பட்ட ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுடன் அவளுடைய கணவன் உறங்குவது.
322. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். `உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். `ஆம்` என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என்றும்,
"நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம்" என்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 22 சுத்தமாக இருக்கும் போது அணியும் துணி அல்லாமல் மாதவிடாய்க் காலத்திற்கென பிரத்யோக துணியை ஒருபெண் வைத்துக் கொள்வது.
323. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். `உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?` என்று நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 23 மாதவிடாயுள்ள பெண்கள் இரு பெரு நாள் தொழுகைகளிலும் முஸ்லிம்களுடைய பிரசாரத்திலும் கலந்து கொள்வதும் அப்போது தொழும் இடத்தை விட்டும் அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்பதும்.
324. நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.
`நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?` என நான் கேட்டதற்கு, `அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என்றார்.
உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது `நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?` என நான் கேட்டதற்கு `என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்` எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் `என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்` என்பதையும் சேர்த்தே கூறுவார்.
`கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்` என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, `மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?` என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்" என ஹஃப்ஸா அறிவித்தார்.

Book : 6

பாடம் : 24 ஒரு பெண்ணுக்கு ஒரே மாதத்தில் மூன்றுமுறை மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாய், கர்ப்பம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கூற்றை ஏற்றுக் கொள்வதும், மாதவிடாய் தொடர்பாக சாத்தியமுள்ள கூற்றே ஏற்கப்படும் என்பதும். ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: (அப்பெண்கள்) தங்கள் கருவறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது (2:228). ஒரு பெண் மார்க்கப்பற்றுள்ள தன் நெருங்கிய உறவினர்களில் ஒரு சாட்சியைக் கொண்டு வந்து (வழக்கமாக தனது குடும்பத்துப் பெண்களுக்கு ஏற்படுவது போன்று) தமக்கும் ஒரே மாதத்தில் மூன்று முறை மாதவிடாய் ஏற்பட்டதாகக் கூறினால் அவளது கூற்று ஏற்கப்படும் என அலீ (ரலி) , ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. (விவகாரத்துச் செய்யப்பட்ட) ஒரு பெண்ணின் இத்தா காலம் (விவாகரத்துக்கு) முன்னாலுள்ள அவளது (மாதவிடாய்கால) வழக்கத்தை ஒட்டியே கணிக்கப்படும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறே இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: மாதவிடாய் (குறைந்தது) ஒரு நாளிலிருந்து (அதிகபட்சமாக) பதினைந்து நாட்கள் வரை நீடிக்கலாம். சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் மாதவிடாய் நின்று தூய்மையடைந்ததிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து ஒரு பெண் இரத்தத்தைக் காண்பது குறித்து (அது மாதவிடாயாகக் கருதப்படுமா? என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், இது விஷயமாக பெண்களே நன்கறிவார்கள் என்று பதிலளித்தார்கள். இதைத் தம் தந்தை சுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஅதமிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
325. `பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?` என்று கேட்டதற்கு, `கூடாது. அது ஒரு நரம்பு நோய்; மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாள்களின் அளவுக்குத் தொழுகையைவிட்டுவிடு. பின்னர் தொழுது கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 25 மாதவிடாய் அல்லாத நாட்களில் மஞ்சளாகவோ கலங்கலான நிறமாகவோ வெளிப்படும் இரத்தம்.
326. `மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் கருதுவதில்லை" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 26 உயர் இரத்தப்போக்கு நோய்.
327. `உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, `இது ஒரு நோய்` என்று கூறினார்கள். (இதனால்) ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண் குளிப்பவராக இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 27 ஹஜ்ஜில், தவாஃபுல் இஃபாளா எனும் தவாஃபை முடித்தபின் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் (அவளுக்கு கடைசித் தவாஃபான தவாஃபுல் விதாஉ செய்ய அனுமதி உண்டா?) ளகுறிப்பு: ஹாஜிகள் துல்ஹஜ் 10ஆவது நாள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்தபின் மக்காவை நோக்கிப் புறப்பட்டுச் சென்று மீண்டும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வர வேண்டும். இதனை தவாஃபுல் இஃபாளா எனப்படுகிறது. இது தவாஃபுஸ் ஸியாரா, தவாஃபுர் ருக்ன் ஆகிய பெயர்களிலும் அறியப்படுகிறதுன
328. `ஹஜ்ஜின்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது` எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் `அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?` என்று கேட்டார்கள். `தவாஃப் செய்துவிட்டார்` என (அங்கிருந்தோர்) கூறினார்கள். `அப்படியானால் புறப்படுங்கள்` என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

329. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஹஜ்ஜில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தவாஃப் செய்யாமல்) வீடு திரும்புதல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

Book :6

330. `ஹஜ்ஜில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் சுத்தமான பின்னர் தவாஃபை நிறைவேற்றிவிட்டுத்தான் வீடு செல்ல வேண்டும்` என இப்னு உமர் ஆரம்பகாலத்தில் சொல்லியிருந்தார். ஆனால் பின்னர் `அவள் வலம் வராமலே வீடு திரும்பலாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) கூறினார்" என தாவூஸ் அறிவித்தார்.

Book :6

பாடம் : 28 உயர் இரத்தப்போக்கு ஏற்பட்ட ஒரு பெண் தமது இரத்தம் மாதவிடாய்க் கால இரத்தமல்ல என்று அறிந்து கொண்டால் (என்ன செய்யவேண்டும்?) சிறிது நேரம் அவள் சுத்தமானாலும் குளித்து விட்டு அவள் தொழுகையை நிறை வேற்றவேண்டும்; மிகப் பெரிய விஷயமான தொழுகையையே அவள் நிறைவேற்றலாம் எனும் போது அவளுடன் கணவன் தாம்பத்திய உறவுகொள்வதில் தவறில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
331. `மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைச் சுததம் செய்துவிட்டுத் தொழுது கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 29 பிரசவ இரத்தப் போக்கின் போது உயிர்நீத்த பெண்ணுக்கு இறுதித் தொழுகை (ஸலாத்துல் ஜனாஸா) தொழுவதும், அதன் வழிமுறையும்.
332. `ஒரு பெண் பிரசவ நேரத்தில் இறந்தபோது அவருக்கு நபி(ஸல்) ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையின்போது ஜனாஸாவின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்" என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 30
333. `எனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நான் தொழுவதில்லை. அந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் அருகில் படுத்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய பாயில் தொழுது கொண்டிருந்தார்கள். ஸஜ்தாச் செய்யும்போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என் மீது படும்" என்று மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 6

பாடம் : 1
334. நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். `பைதாவு` அல்லது `தாத்துல் ஜைஷ்` என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, `(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை` என்று முறையிட்டனர். அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். `நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை` என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.
இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) `அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)` எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்"என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 7

335. `எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book :7

பாடம் : 2 (சுத்தம் செய்ய) தண்ணீரோ மண்ணோ கிடைக்கவில்லையானால் (என்ன செய்ய வேண்டும்?)
336. `ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் கழுத்தணியைத் தேடி வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளூவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை அருளினான். அப்போது உஜைத் இப்னு ஹுளைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் `அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்` என்று கூறினார்" என உர்வா அறிவித்தார்.

Book : 7

பாடம் : 3 சொந்த ஊரில் தங்கியிருக்கும் போது தண்ணீர் கிடைக்காமலிருந்து தொழுகையின் நேரம் சென்றுவிடுமோ என்று அஞ்சினால் தயம்மும் செய்து கொள்ளலாம். இவ்வாறே அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நோயாளியிடம் தண்ணீர் இருந்தும் அதை அவருக்கு ஊற்றித்தர ஆள் கிடைக்காவிட்டால் அவர் தயம்மும் செய்து கொள்ளலாம். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மதீனாவின் புறநகரிலிருந்த) ஜுருஃப் எனும் தம் நிலத்திலிருந்து (மதீனாவை நோக்கி) வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் (மதீனாவிற்கு அருகில் ஒருமைல் தொலைவிலிருந்த) மர்பதுந் நஅம் எனுமிடத்தை அடைந்த போது அஸ்ர் தொழுகையின் நேரம் வந்து விட்டது. உடனே (தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து) தொழுதார்கள். பிறகு மதீனாவிற்குள் வந்தார்கள். அப்போது சூரியன் உயர்ந்தே இருந்தது (மறையவில்லை). ஆயினும் அவர்கள் அந்த அஸ்ர் தொழுகையை திரும்பத் தொழவில்லை.
337. `நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். `எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் `பீர்ஜமல்` என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள்` என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார்" என உமைர் என்பவர் அறிவித்தார்.

Book : 7

பாடம் : 4 தயம்மும் செய்பவர் (மண்ணில் அடித்த பின்) இருகைகளிலும் (உள்ள புழுதியை) ஊதிவிட வேண்டுமா?
338. `ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து `நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?` என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், `நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து `இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது` எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?` என்று கேட்டார்கள்" என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார்.

Book : 7

பாடம் : 5 முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவது தான் தயம்மும்.
339. முந்திய ஹதீஸ் இங்கே இடம் பெறுகிறது. அத்துடன் `ஷுஅபா` என்பவர் இரண்டு கைகளால் பூமியில் அடித்து அவற்றைத் தம் வாயின் பக்கம் நெருக்கி (ஊதிவிட்டு) பின்னர் தம் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவினார்" என்று குறிப்பிட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது.

Book : 7

340. நான் உமர்(ரலி) அவர்களிடமிருந்தேன். அப்போது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் `நாம் ஒரு பயணத்தில் சென்றபோது குளிப்புக் கடமையாகிவிட்டது` என்று கூறி (தயம்மும் செய்து காட்டினார்கள். அப்போது) இரண்டு கைகளிலும் ஊதிக் காட்டினார்கள்" என அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.

Book :7

341. `நானோ மண்ணில் புரண்டேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது அவர்கள் முன்கைகளும் முகமும் போதுமானதாக இருந்தது` என அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்` என்று குறிப்பிட்டார்" அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.

Book :7

342. முந்திய ஹதீஸே இங்கு மீண்டும் இடம் பெற்றுள்ளது.

Book :7

343. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் காண்பித்தார்கள்" என அம்மார்(ரலி) அறிவித்தார்.

Book :7

பாடம் : 6 தண்ணீருக்குப் பகரமாக சுத்தமான மண் ஒரு முஸ்-முக்கு சுத்தம் செய்யப் போதுமானதாகும். ஒரு தடவை ஒருவர் தயம்மும் செய்து விட்டால் சிறுதுடக்கு (எனும் உளூவை முறிக்கும் காரியங்கள்) ஏற்படாதவரை அந்த தயம்மும் அவருக்குப் போதமானதாக அமையும் (ஒவ்வொரு தொழுகைக்கும் தனித் தனி தயம்மும் செய்யவேண்டியதில்லை) என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து கொண்டு (உளூ செய்திருக்கும் மக்களுக்கு) இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள், (எதையும் முளைக்கச் செய்யாத உப்புத்தன்மை கொண்ட) உவர் நிலத்தில் தொழுவதோ, அந்நிலத்தில் தயம்மும் செய்வதோ குற்றமல்ல என்று கூறியுள் ளார்கள்.
344. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம் மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் இன்னவர், அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்."
நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே தூக்கத்திலிருந்து விழிக்கும் வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின் தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு அக்பர்!` என்று சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக் கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது `அதனால் எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டும் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் உளூச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். `ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?` என்று அவரிடம் கேட்டபோது, `எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் இல்லை` என்று அவர் கூறினார். `மண்ணில் தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது` என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் சென்று `தாகமாக இருக்கிறது; தண்ணீர் இல்லை` என முறையிட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, ஒரு மனிதரையும் அவர் பெயரை அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து` நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்` என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத் தேடிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள்.
`தண்ணீர் எங்கே கிடைக்கிறது?` என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். `தண்ணீர் ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்` என அப்பெண் கூறினாள். `அப்படியானால் நீ புறப்படு` என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். `எங்கே?` என்று அவள் கேட்டாள். `அல்லாஹ்வின் தூதரிடம்` என்று கூறினார்கள். `மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?` என்று அப்பெண் கேட்டாள். `நீ கூறுகிற அவரேதான்` என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.
`அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் செல்லுங்கள்` என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். `எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்` என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, `இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.) `அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் `உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்` என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது, `பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?` என்று கேட்டதற்கு `ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்` (என நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)
அவள் தன் கையின் நடுவிரலையும், ஆட்காட்டி விரலையும் வானத்தின் பக்கம் உயர்த்தி, `அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்` என்று கூறினாள்.
பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம், `இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?` என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்" என இம்ரான்(ரலி) அறிவித்தார்.

Book : 7

பாடம் : 7 தண்ணீரைப் பயன்படுத்தினால், தமக்கு நோயோ மரணமோ ஏற்பட்டுவிடுமென குளியல் கடமையானவர் அஞ்சினால் அல்லது தம்மிடமுள்ள தண்ணீரைச் செலவழித்து விட்டால் தாகத்தினால் சிரமப்படநேரிடும் என்று அவர் பயந்தால் தயம்மும் செய்து கொள்ளலாம். (தாத்துஸ் ஸலாஸில் போரின் போது) குளிரான ஓர் இரவில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. ஆகவே அவர்கள் (குளிக்காமல்) தயம்மும் செய்து கொண்டார்கள். (பிறகு இது பற்றி அவர்கள் தம் தோழர்களிடம் குறிப்பிடுகையில்) நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்- நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான் எனும் (4:29ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் (மதீனா திரும்பியதும்) இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
345. (குளிப்புக் கடமையானவருக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அவர் தொழ வேண்டாமல்லவா?` என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, `இந்த விஷயத்தில் நாம் சலுகையளித்தால் குளிர் ஏற்பட்டால் கூட மக்கள் தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார்கள்` என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் (`தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது` என்று) சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?` என்று அவர் கேட்டார். அதற்கு, `(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறியபோது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை` என்பது உமக்குத் தெரியாதா?` என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கேட்டார்.
`இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ?` என ஷகீக் அவர்களிடம் நான் கேட்டதற்கு, அவர் `ஆம்! எனப் பதிலளித்தார்கள்" என அஃமஷ் அறிவித்தார்.

Book : 7

346. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் `அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?` என்று கேட்டதற்கு, `தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை` என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது, `நபி(ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களிடம், `தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது` என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?` என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, `(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறிய போது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?` என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பதில் கூறினார். அப்போது, `அம்மார்(ரலி) அறிவிப்பதைவிட்டு விடுங்கள். `தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்` என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?` என்று அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, `இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு தயம்மும் செய்வார்` என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்.
இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீம்டம் நான் கேட்டதற்கு அவர் `ஆம்! என்றார்" என அஃமஷ் அறிவித்தார்.

Book :7

பாடம் : 8 தயம்மும் என்பது (இருகைகளால்) ஒருமுறை (மண்ணில்) அடிப்பது தான் .
347. நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம் `குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? `மாயிதா` என்ற அத்தியாயத்தில் வரும், `நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்` என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?` என்று கேட்டதற்கு, `இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்` என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது `இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?` என்று நான் கேட்டதற்கு `ஆம்!` என்று பதிலளித்தபோது, `என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு `இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது` என்று கூறினார்கள்` என்ற செய்தியை `உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?` என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, `அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை` என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில்: `நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அபூ மூஸா(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தபோது, அபூ மூஸா(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நோக்கி `என்னையும் உங்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒரு வேலைக்காக) அனுப்பியபோது எனக்குக் குளிப்புக் கடமையாகி மண்ணில் நான் புரண்டதும், பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் ஒரு முறை தடவிவிட்டு `இப்படி நீர் செய்திருந்தால் அது உமக்குப் போதுமானது` என்று கூறினார்கள்` என உமர்(ரலி) அவர்களிடம் அம்மார்(ரலி) கூறியதை நீர் கேள்விப்பட்டதில்லையா` என அபூ மூஸா(ரலி) கேட்டார்" என ஷகீக்` வாயிலாக `யஃலா` அறிவித்தார்.

Book : 7

பாடம் : 9
348. `ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், `நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?` என்று கேட்டார்கள். அதற்கு அவர், `இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை` என்று கூறியபோது `மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இம்ரான் இப்னு ஹுஸைன் அல் குஸாயீ(ரலி) அறிவித்தார்.

Book : 7

பாடம் : 1 ளவிண்ணுலகப்பயணம் -மிஅராஜ் நடந்தன இஸ்ரா இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்: (ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள்,தொழுகையை நிறைவேற்றும்படியும் தானதர்மம் செய்யும் படியும் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழும் படியும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுகின்றார்கள் என்று தாம் (ஹெராக்ளியஸிடம்) கூறியதாக என்னிடம் கூறினார்கள்.
349. நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் `திற` என்றார்கள். அவ்வானவர், `யார் அவர்?` என்று வினவியதற்கு `நானே ஜிப்ரீல்` என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், `உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?` எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்` என்று கூறினார்கள். அதற்கு வானவர் `அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?` எனக் கேட்டார். ஜிப்ரீல் `ஆம்` என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் `நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!` என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். `இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்` என்று கூறினார்கள்.
பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் `திற` எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), `வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை` என்று கூறினார்.
`ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது `நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!` என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, `இவர் இத்ரீஸ்(அலை)` என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது `நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!` எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, `இவர்தான் மூஸா(அலை)` என ஜிப்ரீல் கூறினார்கள்.
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது `நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!` எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, `இவர் ஈஸா(அலை)` என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது `நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, `இவர் இப்ராஹீம்(அலை)` என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், `பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து)
"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது `உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?` என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். `நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது` என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். `நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது` என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). `நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது` என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது `ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை` என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது `உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்` என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை `ஸித்ரதுல் முன்தஹா` என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

Book : 8

350. `அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :8

பாடம் : 2 ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும், ஆதமுடைய மக்களே! தொழும் இடந் தோறும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் எனும் (7:31ஆவது) இறைவசனமும், ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும். (ஒரே ஒரு துணி மட்டும் அணிந்து தொழும் ஒருவர்) ஒரு முள்ளினாலாவது அதை மூட்டிக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சலமா பின் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற் கொண்ட ஆடையில் அசிங்கம் எதையும் காணாத வரை அதை அணிந்து கொண்டு தொழலாம். நிர்வாணர்கள் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
351. இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்` என்றும் கட்டளையிடப்பட்டோம்.
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் `இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?` எனக் கேட்டதற்கு, `அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்` என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 3 தொழும் போது வேஷ்டி (சிறியதாயிருந்தால் அதன் இரு முனை)யைப் பிடரியில் முடிச்சிட்டுக் கொள்வது. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (நபித்தோழர்கள்) சிலர் தங்களுடைய வேஷ்டிகளை தமது தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர்.
352. `ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், `ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?` என்று கேட்டதற்கு `உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?` என்று ஜாபிர்(ரலி) கேட்டார்" என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.

Book : 8

353. `ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு `நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்` என்று கூறினார்கள்" என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார்.

Book :8

பாடம் : 4 (விசாலமான) ஒரே ஆடையில் அதன் இரு ஓரங்களையும் வல-இடத்தோள்கள் மீது மாற்றிப் போட்டு, (நெஞ்சில் முடிந்து கொண்டு) தொழுவது. இது குறித்த தமது ஹதீஸில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் முல்தஹிஃப் என்பதற்கு முத்தவஷ்ஷிஹ் என்று பொருள் என்று கூறினார்கள். இதுவே முகாலிஃப் ஆகும்.. (அதாவது,) ஒருவர் தமது வேஷ்டியின் (வலப்பக்க ஓரத்தை இடது தோளின் மீதும் இடப்பக்க ஓரத்தை வலது தோளின் மீதும் இருக்கும் அமைப்பில்) இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது போட்டுக் கொள்வது(ம், பிறகு வலத் தோள் மீது இட்ட ஓரத்தை இடக்கரத்திற்கு கீழேயும், இடத் தோள் மீது இட்டட ஓரத்தை வலக்கரத்திற்கு கீழே கொண்டுவந்து இரண்டையும் நெஞ்சின் மீது முடிந்து கொள்வது) ஆகும். இதற்கே அல்இஷ்திமாலு அலல் மன்கிபைனி எனப்படுகிறது. உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை சுற்றிக் கொண்டு அதன் இரு ஓரங்களையும் தமது (வல-இடத்) தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்..
354. `நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.

Book : 8

355. `உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.

Book :8

356. `உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுததை பார்த்திருக்கிறேன்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்.

Book :8

357. `மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நான் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, `யாரவர்?` எனக் கேட்டார்கள். `நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி` என்றேன். உடனே, `உம்முஹானியே! வருக!` என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் `இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்` என்று நான் கூறியபோது `உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது" என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார்.

Book :8

358. `ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, `உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :8

பாடம் : 5 ஒரே ஆடையை அணிந்து தொழும் போது அதன் இரு ஓரங்களையும் தோள்கள் மீது போட்டுக் கொள்ள வேண்டும்.
359. `உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 8

360. `ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுபவர் அந்த ஆடையின் இரண்டு ஓரத்தையும் மாற்றி அணியட்டும்` (அதாவது வலப்புற ஓரத்தை இடது தோளிலும் அணியட்டும்)` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :8

பாடம் : 6 ஆடை சிறியதாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)
361. `நாங்கள் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழுவது பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, `நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். என் மீது ஒரே ஓர் ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் சேர்த்து நெருக்கமாகச் சுற்றிக் கொண்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை முடித்ததும், `ஜாபிரே! என்ன இரவு நேரத்தில் வந்திருக்கிறிர்?` என்று கேட்டார்கள். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் சொன்னேன். சொல்லி முடித்ததும் `இது என்ன? கை கால்கள் வெளியே தெரியாமல் (துணியால்) நெருக்கமாகச் சுற்றியிருப்பதைப் பார்க்கிறேன்` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் இது இறுக்கமான ஆடை என்று நான் கூறியதும் நபி(ஸல்) அவர்கள், `ஆடை விசாலமானதாக இருந்தால் அதன் ஓர் ஓரத்தை வலது தோளிலும் மற்றொரு ஒரத்தை இடது தோளிலுமாக அணிந்து கொள்ளுங்கள். ஆடை சிறிதாக இருந்தால் அதை இடுப்பில் அணிந்து கொள்ளுங்கள்` என்றார்கள்` என்று ஜாபிர்(ரலி) விடையளித்தார்கள்" என ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் அறிவித்தார்.

Book : 8

362. `சில ஆண்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களின் (சிறிய) வேஷ்டியை தங்களின் கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடம், `ஆண்கள் ஸுஜுதிலிருந்து எழுந்து அமரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜுதிலிருந்து உயர்த்த வேண்டாம்` என்று கூறினார்கள்" என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

Book :8

பாடம் : 7 (இறைமறுப்பாளர்களின் நாடாயிருந்த) ஷாம் நாட்டு நீளங்கி அணிந்து தொழுவது. அக்னி ஆராதகர்கள்(மஜூசிகள்) நெய்யும் ஆடைகளை (கழுவப்படுவதற்கு முன்பே) அணிந்து தொழுவது தவறன்று என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஆடு, மாடு, ஒட்டக) மூத்திரத்தில் நனைத்துச் சாயமேற் பட்ட யமன் நாட்டு ஆடையை அணிந்து தொழுவதை நான் பார்த்தேன் என மஅமர் பின் ராஷித் (ரஹ்) கூறுகின்றார்கள். அலீ (ரலி) அவர்கள் அடர்த்தி குறைக்கப்படாத (உடலோடு அப்பிக் கொள்ளும்) ஆடையுடன் தொழுதார்கள்.
363. `நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றபோது, `முகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்திற்குச் சென்று அவர்களின் இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூச் செய்வதற்காக அதிலிருந்து தங்களின் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தங்களின் கையை அந்த ஆடையின் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். தங்களின் இரண்டு காலுறைகளின் மீதும் (அவற்றைக் கழுவாமல்) ஈரக்கையால் மஸஹ் செய்து (தடவி) தொழுதார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 8 தொழுகையின் போதும். மற்ற நேரங்களிலும் பிறந்த மேனியுடன் இருக்கலாகாது.
364. `நபி(ஸல்) அவர்கள், (சிறு வயதில்) கஅபதுல்லாஹ்வின் கட்டுமானப் பணி நடந்தபோது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் `என் சகோதரனின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோளின் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து வரலாமே` என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே நபி(ஸல்) வேஷ்டியை அவிழ்த்து அதைத் தங்களுடைய தோளின் மீது வைத்தார்கள். வைத்ததும் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அதற்கு பின்னர் நபி(ஸல்) அவர்கள் நிர்வாணமாக ஒருபோதும் காட்சியளிக்கவில்லை" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 9 (முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை, வெளிப்புற மேலங்கி ஆகியவற்றை அணிந்து தொழுவது.
365. நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுவது பற்றிக் கேட்டதற்கு `உங்களில் எல்லோரும் இரண்டு ஆடைகளை வைத்திரக்கிறார்களா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
(உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்) பின்னர் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் இது விஷயமாக கேட்டதற்கு `அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்` என்று கூறினார். சிலர் எல்லா ஆடைகளையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதார்கள். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டை, மேல் போர்வையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் சட்டையும் அணிந்தவராகச் சிலர் தொழுதார்கள். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள். வேஷ்டியும் சட்டையும் என்பதற்குப் பதிலாக வேஷ்டியும் மேல் போர்வையும்` என்று உமர்(ரலி) கூறியதாக நான் நினைக்கிறேன்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 8

366. `ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு `சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. யாருக்காவது செருப்பு கிடைக்காமலிருந்தால் தோலினாலான காலுறை அணிந்து கொள்ளலாம். அந்தத் தோலுறையில் கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :8

பாடம் : 10 அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்.
367. `கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுககமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, மர்மஸ்தானம் தெரியும் படியாக இரண்டு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

Book : 8

368. முனாபதா` `முலாமஸா` எனும் இருவகை வியாபாரங்களையும், கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும், ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, இரண்டு முட்டுக் கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: `முனாபதா` குறிப்பிட்ட ஒரு பொருளை எடுத்து எறியும்போது அது எந்தப் பொருளின் மீது படுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பதைக் குறிக்கும்.
`முலாமஸா` குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதித்து விற்பதைக் குறிக்கும்.)

Book :8

369. ஹஜ்ஜத்துல்வதா`விற்கு முந்திய ஆண்டு அபூ பக்ர்(ரலி) (அவர்களின் தலைமையில் நான் ஹஜ்ஜுக்குச் சென்றபோது) என்னை அறிவிப்புச் செய்பவர்களுடன் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் மினாவில் நின்று, `அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு எந்த முஷ்ரிக்கும் ஹஜ் செய்யக் கூடாது. நிர்வாணமாக யாரும் கஅபாவை வலம் வரக்கூடாது` என்று அறிவித்தோம்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை அனுப்பி, திருக்குர்ஆனின் 9-வது அத்தியாயத்தில் ஒப்பந்த முறிவு பற்றிக் கூறப்படும் (முதல் இருபது வசனங்கள்) விஷயத்தை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள்.
எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் துல்ஹஜ் மாதம் பத்தாவது நாள் மினாவில் நின்று `இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது; கஅபாவை எவரும் நிர்வாணமாக வலம் வரக் கூடாது` என்று அறிவித்தார்கள்" அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

Book :8

பாடம் : 11 மேலாடையின்றித் தொழுவது.
370. `ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை சுற்றிக் கொண்டு தொழுதார். அவரின் மேலாடை தனியாக வைக்கப்பட்டிருந்தது. தொழுது முடித்ததும் `அப்துல்லாஹ்வின் தந்தையே! உங்களுடைய மேலாடையைத் தனியே வைத்துவிட்டுத் தொழுகிறீர்களா?` என்று நாங்கள் கேட்டதற்கு, `ஆம்! உங்களைப் போன்ற மடையர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதை விரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுததை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள்" என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் அறிவித்தார்.

Book : 8

பாடம் : 12 தொடை (மறைக்க வேண்டிய பகுதியா? என்பது) பற்றிய குறிப்பு. தொடை மறைக்க வேண்டிய பகுதியாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி),ஜர்ஹத் (ரலி), முஹம்மத் பின் (அப்தில்லாஹ் பின்) ஜஹ்ஷ் (ரலி) ஆகியோர் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் தமது தொடைப் பகுதியை திறந்தார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதில் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பே வலுவான அறிவிப்பாளர்தொடருடையதாகும். ஜர்ஹத் (ரலி) அவர்களின் அறிவிப்பு(ப் பிரகாரம் செயல்படுவதே) மார்க்கத்தை (கவனித்து)ப் பேணுவதாகும். இவ்வாறு கூறுவதன் மூலமே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்.. அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த தோட்டத்திற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் நுழைந்த போது நபி (ஸல்) அவர்கள் (திறந்திருந்த) தமது முழங்கால்களை மூடிக் கொண்டார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை எனது தொடை மீதிருக்க, அவர்கள் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். அப்போது எனது தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி) விட்டது.
371. நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது `அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்` என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், `முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்` என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.
நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது `திஹ்யா` என்ற நபித்தோழர் வந்து `இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்` என்று கேட்டார். `நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! `குறைளா` மற்றும் `நளீர்` என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்` என்றார். அப்போது `அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்` என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் `நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்` என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், `அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?` என்று கேட்டதற்கு `அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்` எனக் கூறினார்.
நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் `ஸஃபிய்யா` அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து `உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்` என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் `வலீமா` எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்.

Book : 8

பாடம் : 13 ஒரு பெண் எத்தனை ஆடைகளை அணிந்து தொழ வேண்டும்? இக்ரிமா (ரஹ்) அவர்கள், ஒரு பெண் ஒரே ஆடையில் தன் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டாலும் போதுமானதாகும். என்று கூறினார்கள்.
372. `நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் தங்களின் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை (வெளிச்சமின்மையால்) யாரும் அறியமாட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 14 வேலைப்பாடு மிக்க ஆடையணிந்து தொழும் போது அதன் வேலைப்பாடு கவனத்தை ஈர்த்தால் (என்ன செய்வது?)
373. நபி(ஸல்) அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஓர் ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும், `என்னுடைய இந்த ஆடையை எடுத்துச் சென்று அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரின் (வண்ணங்கள் இல்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன்னர் என்னுடைய தொழுகையைவிட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது` என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பின்படி, `நான் தொழுகையில் நிற்கும்போது அந்த ஆடையின் வண்ணங்களைப் பார்ப்பதால் அது என்னைக் குழப்பி விடுமோ என அஞ்சினேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.

Book : 8

பாடம் : 15 சிலுவை பொறிக்கப்பட்ட அல்லது (உயிரினங்களின்) உருவப் படம் வரையப்பட்ட ஆடையுடன் தொழுதால் தொழுகை பாழாகிவிடுமா? என்பது பற்றியும், இவற்றுக்கு வந்துள்ள தடை பற்றியும்.
374. `ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்களின் வீட்டின் ஓர் ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் `உன்னுடைய இந்தத் திரையை நம்மைவிட்டும் அகற்றி விடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறுக்கிடுகின்றன` என்று கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 16 ஒருவர் நீண்ட பட்டு உடுப்பை அணிந்து தொழுது விட்டுப் பின்னர் அதைக் கழற்றி விடுவது.
375. `நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் `பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று` என்று கூறினார்கள்" என உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்.

Book : 8

பாடம் : 17 சிவப்பு நிற ஆடையணிந்து தொழுவது (செல்லும்).
376. தோலினால் செய்யப்பட்ட சிவப்பு நிற மேலங்கியை நபி(ஸல்) அவர்கள் அணிந்திருக்கப் பார்த்தேன். மேலும் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரை பிலால்(ரலி) எடுத்துச் செல்வதையும் அந்தத் தண்ணீரை எடுப்பதில் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் கண்டேன். அந்தத் தண்ணீரைப் பெற்றவர் அதைத் தங்களின் உடம்பில் தடவினார். அந்தத் தண்ணீர் பெறாதவர் தண்ணீரைப் பெற்ற தம் நண்பரின் கையில் உள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க் கொண்டார்.
பிலால்(ரலி) ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார். நபி(ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாம் அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத் ஜமாஅத்தாகத் தொழுதார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு மாடுகளும் குறுக்கே செல்வதைப் பார்த்தேன்" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 18 மாடியிலும் மேடையிலும் மரப்பலகையிலும் தொழுவது. அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: பனிக்கட்டியின் மீதும் பாலத்தின் மீதும் தொழுவது தவறில்லை; அதற்குக் கீழே அல்லது மேலே அல்லது முன்பக்கத்தில் மூத்திரம் (போன்றவை) இருந்தாலும் சரியே! ஆனால், தொழுபவருக்கும் அந்த பாலத்திற் கும் இடையில் (அசுத்தம் சேராதபடி) தடுப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருதினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் இமாமைப் பின்தொடர்ந்து பள்ளிவாச-ன் கூரை (மாடி)யில் நின்று தொழுதார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் பனிக் கட்டியின் மேல் நின்று தொழுதார்கள்.
377. ஸஹ்ல் இப்னு ஸஅதிடம் `(நபி(ஸல்) அவர்களின் பிரசங்க) மேடை எதனால் செய்யப்பட்டது?` என்று (மக்கள்) கேட்டார்கள். அவர், `(இப்போது வாழும்) மனிதர்களில் இது பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் எவருமில்லை. அது ஒரு வகைக் காட்டு மரத்தினால் செய்யப்பட்டது. இன்னாருடைய அடிமையான இன்னார்தாம் அதை நபி(ஸல்) அவர்களுக்குச் செய்து கொடுத்தார். அது செய்யப்பட்டு அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டதும் அதன் மீது நபி(ஸல்) அவர்கள் நின்று கிப்லாவை முன்னோக்கி(த் தொழுகைக்குத்) தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களெல்லாம் நின்று தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு ருகூவு செய்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் ருகூவு செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸுஜுது செய்தார்கள். பின்னர் மிம்பரின் மீது ஏறி நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள். இதுதான் அந்த மேடையின் நிலையாகும் என்றார்" என அபூ ஹாஸிம் அறிவித்தார்.
அஹ்மத் இப்னு ஹன்பல் இந்த ஹதீஸைப் பற்றிக் கூறியபோது, `மக்கள் நிற்கும் இடத்தை விட உயரமான இடத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள் என்றே இந்த ஹதீஸின் மூலம் அறிகிறேன். எனவே ஜமாஅத்தாகத் தொழும்போது இமாம் உயரமான இடத்திலும் மக்கள் தாழ்ந்த இடத்திலும் நின்ற தொழுவது தவறில்லை என்பதைத்தான் இந்த ஹதீஸின் மூலம் அறியமுடிகிறது` என்று என்னிடம் கூறினார்" என .அலி இப்னு அப்தில்லாஹ் கூறினார்.
"இதைப்பற்றி சுஃப்யான் இப்னு உயைனா அவர்களிடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை அவரிடமிருந்து நீங்கள் செவியுறவில்லையா?` என்று அலி இப்னு அப்தில்லாஹ், அஹ்மது இப்னு ஹன்பலிடம் கேட்டதற்கு அவர் `இல்லை` என்று பதிலளித்தார்.

Book : 8

378. `ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்துவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு மூட்டுக்காலில் அல்லது புஜத்தில் முறிவு ஏறபட்டுவிட்டது. ஒரு மாத காலம் தங்களின் மனைவியரிடம் செல்வதில்லை எனச் சத்தியம் செய்தார்கள். பேரீச்ச மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பரணில் அமர்ந்தார்கள். அவர்களின் தோழர்கள் அவர்களை நோய் விசாரிப்பதற்காக வந்தபோது (அந்தப்பரணியில்) அமர்ந்தவர்களாகவே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். வந்தவர்கள் நின்று தொழுதார்கள். ஸலாம் கொடுத்த பின்னர் நபி(ஸல்) அவர்கள் `பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் சொல்லுங்கள்; அவர் ருகூவு செய்தால் நீங்களும் செய்யுங்கள்; அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் செய்யுங்கள்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்` எனக் கூறினார்கள். நாள்கள் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் அந்தப் பரணிலிருந்து இறங்கினார்கள். `இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே!` எனத் தோழர்கள் கேட்டபோது `இந்த மாதம் இருபத்தி ஒன்பது நாள்கள் தாம்` என்று கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :8

பாடம் : 19 சஜ்தா செய்யும் போது தொழுது கொண்டிருப்பவரின் ஆடை அவருடைய மனைவியின் மேல் பட்டுவிட்டால் (அவருடைய தொழுகை பாழாகிவிடுமா?)
379. `நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும்போது, சில வேளை அவர்களின் ஆடை என் மீது படும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 20 பாயில் தொழுதல். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கப்பலில் நின்ற வண்ணம் தொழுதார்கள். (நீ கப்பலில் செல்லும் போது) உன் சகாக்களுக்கு சிரமம் ஏற்படாமலிருக்குமானால் நின்ற நிலையில் கப்பல் செல்லும் திசையிலேயே தொழுது கொள்; அவர்களுக்கு சிரமம் ஏற்படுமாயின் உட்கார்ந்து தொழு!என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
380. `என்னுடைய பாட்டியார் முலைக்கா, நபி(ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்ட பின்னர் `எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்` என்று கூறினார்கள். நான் புழக்கத்தினால் கறுத்திருந்த எங்களின் ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்திவிட்டுச் சென்றார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 21 பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட தொழுகை விரிப்பில் தொழுவது.
381. `நபி(ஸல்) அவர்கள் (சிறு) விரிப்பின் மீது தொழுதார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 22 படுக்கை விரிப்பில் தொழுவது. அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
382. `நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 8

383. `நபி(ஸல்) அவர்கள் என்னுடைய படுக்கை விரிப்பில் தொழுதபோது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :8

384. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கை விரிப்பில் தொழும்போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் ஆயிஷா(ரலி) கிடப்பார்கள்" என உர்வா அறிவித்தார்.

Book :8

பாடம் : 23 கடுமையான வெப்பநேரத்தில் (தாம் அணிந்திருக்கும்) துணியின் மீது சிரவணக்கம் செய்வது. நபித்தோழர்கள் (தாம் அணிந்திருக்கும்) தலைப்பாகையின் (ஓர் ஓரத்தின்) மீதும் தொப்பியின் மீதும் (வெயில் நேரத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்; இருகைகளையும் (நிலத்தில் ஊன்றும் போது) சட்டைக் கைக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
385. `நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது எங்களில் சிலர் கடுமையான வெயிலின் காரணமாக ஆடையின் ஒரு பகுதியை ஸுஜுது செய்யுமிடத்தில் வைத்துக் கொள்வோம்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 24 செருப்பணிந்து தொழுதல்.
386. `நான் நபி(ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, `ஆம்` என்றார்கள்" என ஸயீது இப்னு யஸீத் அல் அஸ்தி அறிவித்தார்.

Book : 8

பாடம் : 25 காலுறைகள் அணிந்து தொழுதல்.
387. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) சிறுநீர் கழித்தப் பின்னர் உளூச் செய்து, தம் இரண்டு காலுறையின் மீது மஸஹ் செய்துவிட்டு எழுந்து தொழுததைக் கண்டேன். இது பற்றி ஜரீர்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு `நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை பார்த்திருக்கிறேன்` என்று கூறினார்கள்" என ஹம்மாம் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்.
"காலுறைகளின் மீது மஸஹ் செய்து தொழலாம் என்ற கருத்திலுள்ள அறிஞர்களுக்கு ஜரீர்(ரலி) அவர்களின் இச்செயல் மிகச் சிறந்த சான்றாகும். காரணம் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவராவார்" என்று இப்ராஹீம் குறிப்பிடுகிறார்.

Book : 8

388. `நான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்யும்போது (கால்களைக் கழுவாமல்) காலுறைகளின் மீது மஸஹ் செய்து தொழுதார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

Book :8

பாடம் : 26 (தொழுகையின் ஓர் அங்கமான) சிரவணக்கத்தை முழுமையாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் விளைவு).
389. `தங்களின் தொழுகையில் ருகூவு ஸுஜுதைச் சரியாகச் செய்யாத ஒருவரைப் பார்த்த ஹுதைஃபா(ரலி) அவர் தொழுகையை முடித்த பின்னர், `நீர் தொழவில்லை; இந்த நிலையில் நீர் மரணித்தால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தின் மீது மரணித்தவராக மாட்டீர்` என்று கூறினார்" என அபூ வாயில் அறிவித்தார்.

Book : 8

பாடம் : 27 சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது இரு புஜங்களையும் (விலாவோடு சேர்க்காமல் அவற்றை) இடைவெளிவிட்டு வைக்க வேண்டும்.
390. `நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜுது செய்யும் போது) தங்களின் இரண்டு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்குத் தங்களின் இரண்டு கைகளையும் விரித்து வைப்பார்கள்" என மாலிக் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.

Book : 8

பாடம் : 28 (இறையில்லம் கஅபாவின் திசையான) கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு. (சிரவணக்கம் செய்யும் போது) ஒருவர் தமது இருகால் (விரல்)களின் நுனிகளை கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை பற்றி அறிவிக்கையில் அபூஹுமைத் (ரலி) அவர்கள் இதைக் கூறினார்கள்.
391. `நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book : 8