.
ஒரே இறைவன் - 2.133 , 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, 16:51, 17:42, 18:110, 21:22, 21:108, 22:34, 23:91, 29:46, 37:4, 38:5, 38:65, 39:4, 40:16, 41:6, 43:45, 112:1
பல கடவுள்கள் இருக்க முடியாது - 17:42, 21:22, 23:71
2.133 யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? 'எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது 'உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்' என்றே (பிள்ளைகள்) கூறினர்.
2.163. உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
4.171. வேதமுடையோரே!27 உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ்92 அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார்.90 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற் குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.10 வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.
5.73. ''மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்'' என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாரு மில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.
6.19. 'மிகப் பெரும் சாட்சியம் எது?' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'187 எனக் கூறுவீராக! 'அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்' என்று நீர் கூறுவீராக! 'வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்' எனவும் கூறுவீராக!
9.31. அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரி களையும், மர்யமின் மகன் மஸீஹையும்92 கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளை யிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.10
12.29. ' யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!' (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்).
13.16. 'வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?' என்று (முஹம்மதே!) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! 'அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்' என்று கூறுவீராக! 'குருடனும், பார்வையுள்ள வனும் சமமாவார்களா? இருள்களும்,432 ஒளியும் சமமாகுமா?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்?' என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்' என்று கூறுவீராக!
14.48. அந்நாளில்1 பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
14.52. இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும்.187 இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக் கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக் கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள் வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற் காகவும் (இது அருளப்பட்டுள்ளது.)
16.22. உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள்.
16.51. 'இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!' என்று அல்லாஹ் கூறுகிறான்.
17.42. 'அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்' என்று கூறுவீராக!
18.110. 'நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
21.22. அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.10
21.108. 'உங்கள் இறைவன் ஒரே இறைவனே' என்பதே எனக்கு அறிவிக்கப்படுகிறது. நீங்கள் (இதை) ஏற்கிறீர்களா?' என்று கேட்பீராக!
22.34. சாதுவான கால்நடைகளை அவர் களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங் கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக!
23.91. அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10
29.46. வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம்27 அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! 'எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்' என்று கூறுங்கள்!
37.4. உங்கள் இறைவன் ஒருவனே.
38.5. 'கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.'
38.65. 'நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
39.4. அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொள்ள நினைத்திருந்தால், தான் படைத்தவற்றில் தான் நாடியதை எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தூயவன்.10 அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.
40.16. அவர்கள் வெளிப்பட்டு வரும் நாளில் அவர்களைப் பற்றிய எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. இன்று ஆட்சி யாருக்கு? அடக்கி யாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே.
41.6. 'நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப் படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங் கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
43.45. 'அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?' என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!343
112.1. "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!
17.42. 'அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்' என்று கூறுவீராக!
21.22. அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.10
23.71. உண்மை, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றிச் சென்றிருந்தால் வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளோரும் சீரழிந்திருப்பார்கள். மாறாக அவர்களுக்கு அவர்களின் அறிவுரை யையே வழங்கியுள்ளோம். அவர்கள் தமது அறிவுரையைப் புறக்கணிக்கின்றனர்.
| இந்த இணையதளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ). ரஹ்மத் நகர் கிளைக்கு கீழ் செயல்படும் . |